விமானத்தில் ஏற அனுமதிக்காததால் பீதியடைந்த பெண் மயக்கம் வீடியோ வைரல்

விமானத்தில் ஏற அனுமதிக்காததால் பீதியடைந்த பெண் மயக்கமடைந்தார். அந்த வீடியோ வைரலானதை அடுத்து ஏர் இந்தியா விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

Written by - Malathi Tamilselvan | Last Updated : May 12, 2022, 03:32 PM IST
  • விமான நிலையத்தில் அனுமதி மறுப்பு
  • அதிர்ச்சியில் மயங்கிய பெண்
  • வைரலாகும் டெல்லி விமானநிலைய வீடியோ
விமானத்தில் ஏற அனுமதிக்காததால் பீதியடைந்த பெண் மயக்கம் வீடியோ வைரல் title=

விமானத்தில் ஏற அனுமதிக்காததால் பீதியடைந்த பெண் மயக்கமடைந்தார். அந்த வீடியோ வைரலானதை அடுத்து ஏர் இந்தியா விமான நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது.

மயக்கமடைந்த பெண்ணுக்கு உடனடி மருத்துவ உதவி வழங்கப்படவில்லை என மயங்கிக் கிடந்த பெண்ணின் உறவினர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். 

இந்த குற்றச்சாட்டை மறுத்த ஏர் இந்தியா விமான நிறுவனம், மருத்துவர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்ததாகவும், ஆனால் அதற்குள் பயணி சாதாரணமாகிவிட்டதாகவும் கூறியது.

டெல்லி விமான நிலையத்தில், விமானம் ஏறுவதற்கான நுழைவு வாயிலில் நுழைய அனுமதி மறுக்கப்பட்டதால் அந்த பெண் அதிர்ச்சியில் மயக்கம் அடைந்தார் என்று கூறப்படுகிறது.

மேலும் படிக்க | வம்பிழுத்தவரை வகுந்தெடுத்த நாய் - வைரல் வீடியோ

டெல்லி விமான நிலையத்தில் இருந்து பயணிக்க வேண்டிய பெண், குறிப்பிட்ட சமயத்திற்கு பிறகு வந்தார். தாமதம் ஏற்பட்டதால் ஏர் இந்தியாவின் டெல்லி-வதோதரா விமானத்தில் ஏற அந்த பெண் பயணிக்கு அனுமதி கிடைக்கவில்லை.

தன்னை உள்ளே விடவில்லை என்ற செய்தியைக் கேட்டு அதிர்ந்த அந்த பெண், மயக்கமடைந்து மயங்கி விழுந்தார். அவருக்கு உடனடியாக மருத்துவ உதவி வழங்கப்படவில்லை என உறவினர்கள் குற்றம் சாட்டினர்.

மயக்கமடைந்த பெண்ணின் உறவினர் இதுதொடர்பாக சமூக ஊடகத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

viral

இந்த சம்பவம் குறித்து சிவில் விமான போக்குவரத்து இயக்குனரகத்தின் (டிஜிசிஏ) தலைவர் அருண் குமாரிடம் கேட்டபோது, ​​“சம்பந்தப்பட்ட விமான நிறுவனத்திடம் இருந்து அறிக்கையை கோரி வருகிறோம்” என்றார்.

போர்டிங் கேட் அருகே நடுத்தர வயது பெண் ஒருவர் தரையில் படுத்திருக்க, அவரது உறவினர்கள் அவருக்கு தண்ணீர் ஏற்பாடு செய்யும் பணியில் ஈடுபட்டுள்ள வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

 

இது தொடர்பாக ஏர் இந்தியா செய்தித் தொடர்பாளர் விடுத்த அறிக்கையில், போர்டிங் கேட் மூடப்பட்டபோது வந்த மூன்று பயணிகளின் வீடியோ அது என்று கூறினார். நுழைவாயில்கள் மூடுவதற்கு முன்பு விமான ஊழியர்கள், அவர்களது பெயரை தொடர்ந்து அழைத்ததாக அவர் கூறினார்.

"எங்கள் பணியாளர்கள் உடனடியாக ஒரு மருத்துவர் மற்றும் CISF பணியாளர்களை அழைத்தனர், அவர்களில் ஒருவர் கேட் அருகே தரையில் கிடப்பதைக் கண்டு அவர்களில் ஒருவருக்கு உதவ முயன்றோம்," என்று செய்தித் தொடர்பாளர் கூறினார்.  

பயணிகளின் பாதுகாப்பு மற்றும் வசதிக்கு ஏர் இந்தியா முதலிடம் தருவதாக அவர் கூறினார். பயணிகள் தாமதமாக வந்தால், விமான புறப்பாட்டை தாமதப்படுத்த முடியாது என்றும் செய்தித் தொடர்பாளர் கூறினார்.

பொறுப்பான விமான நிறுவனமாக இருப்பதால், ஒழுங்குமுறை ஆணையத்தின் விதிகளை நாங்கள் பின்பற்ற வேண்டும் என்று கூறிய அவர், குறிபிட்ட சமயத்திற்கு பிறகும், காலதாமதமாக வருவர்களுக்கு அனுமதி கொடுப்பது சாத்தியமில்லை என்றார். 

சம்பவம் எப்போது நடைபெற்றது என்று ஏர் இந்தியா தெரிவிக்கவில்லை. டெல்லி விமான நிலையத்தில் நடந்தது. ஆனால், இது கடந்த வாரம் நடந்த சம்பவம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் படிக்க | உங்கள் சிறுநீரகம் சுத்தமாக உள்ளதா: தெரிந்துகொண்டு சுத்தப்படுத்துவது எப்படி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News