வைரல் வீடியோ: சமூக ஊடக உலகம் ஆச்சரியமான விஷயங்களால் நிரம்பியுள்ளது. இங்கே நாம் கற்பனை செய்து கூட பார்க்க முடியாத அனைத்தையும் பார்க்கிறோம். இணையத்தில் நாம் காணும் வீடியோக்களில் பல விஷயங்கள் நம்மை சில சமயம் சிரிக்க வைக்கின்றன, சில சமயம் சிந்திக்க வைக்கின்றன, சில சமயம் ஆச்சரியப்பட வைக்கின்றன, சில சமயம் அதிர்ச்சியில் ஆழ்த்துகின்றன, சில சமயம் சோகத்தையும் சேர்க்கின்றன. விலங்குகளின் வீடியோகளுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. தற்போதும் ஒரு சுவாரசியமான வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சமூக ஊடகங்களில் தினமும் பாம்பு பற்றிய பல வித வீடியோக்கள் பதிவேற்றப்படுகின்றன. இவற்றில் பெரும்பாலான வீடியோக்களில் பாம்பு பிற விலங்குகளை தாக்குவதையே காண்கிறோம். எனினும், மிக சில வீடியோக்களில் பாம்பும் பிற விலங்குகளிடம் மாட்டிக்கொள்வதை காண முடிகின்றது. தற்போது பாம்பு, தவளை மற்றும் பூனை தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 


பொதுவாக பாம்புகள் தவளைகளை இரையாக்குவதை நாம் பார்த்துள்ளோம். ஆனால், இந்த வீடியோவில் முற்றிலும் மாறான ஒரு விஷயத்தை காண முடிகின்றது. தவளை பாம்பை பிடித்து அதை சிறிது சிறிதாக உள்ளே இழுத்து உண்பதை இந்த வீடியோவில் காண முடிகின்றது. பாம்பால் அதன் எதிரில் எதுவும் செய்ய முடியவில்லை. அதன் நிலை மோசமாகிறது. ஆனால், இதற்கு பிறகு வீடியோவில் காணப்படும் காட்சி மிகவும் ஆச்சரியமளிக்கும் விதத்தில் உள்ளது. 


மேலும் படிக்க | குசும்பு பிடித்த குரங்கின் குறும்பு, அடி வாங்கிய அப்பாவி முதியவர்: செம வைரலாகும் வீடியோ


தவளை பாம்பை பிடித்தது


வைரலாகி வரும் இந்த வீடியோவில் பாம்பை பார்த்த உடனே தவளை அந்த பாம்பின் மீது பாய்ந்து பாம்பை பிடிப்பதை காண முடிகின்றது. பாம்பை தனது வாயில் கவ்விக்கொண்டு வசதியாக அமர்ந்துகொள்கிறது. அப்போது ஒரு பூனையும் அங்கு வந்து பாம்பின் வாயைப் பிடிக்கத் தொடங்குகிறது. அதை சீண்டுகிறது. பாம்பு வசமாக மாட்டியுள்ளதால், நக்கல் செய்யும் பூனை அதை சீண்டிப்பார்க்கிறது. ஆனால் தவளையின் பிடியில் இருந்தாலும், பாம்பு பூனைக்கு சரியான பதிலடித் தாக்குதலை அளிக்கின்றது. இதனால் பூனை சற்று பயந்துவிடுகிறது. வீடியோவில் ஒரு சிறுவனும் அமர்ந்திருப்பதை காண முடிகின்றது. 


காணக்கிடைக்காத அரிய வீடியோவை இங்கே காணலாம்: 



பாம்பு மற்றும் தவளை தொடர்பான இந்த வீடியோ @weirdterrifying என்ற ட்விட்டர் அகவுண்டில பகிரப்பட்டுள்ளது. சில நொடிகள் கொண்ட இந்த வீடியோ லட்சக்கணக்கான வியூஸ்களும் எக்கச்சக்க லைக்குகளும் கிடைத்துள்ளன. இணையவாசிகள் இதற்கு பல வித கமெண்டுகளை அள்ளி வீசி வருகிறார்கள். 


மேலும் படிக்க | Viral Video: மனிதனை பந்தாடிய சுறாக்கள்! திகிலூட்டும் வைரல் வீடியோ!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ