வைரல் வீடியோ: இணைய உலகம் பல வித அற்புதங்களை தன்னுள்ளே கொண்டுள்ள ஒரு வித்தியாசமான உலகமாகும். இங்கு பல வித விஷயங்களை பற்றி நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல செய்திகளை வழங்குகின்றன. பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வழியாகவும் இது உள்ளது. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் இறுக்கங்களை சற்று தளர்த்திக்கொள்ள இணையத்தில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன. இவற்றில் வித்தியாசமான வீடியோக்களுக்கென தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரங்குகள் பலவிதமான குறும்பு செய்வதை நாம் பார்த்துள்ளோம். சமூக ஊடகங்களில் இதைப் பற்றிய பல வீடியோக்கள் பகிரப்படுகின்றன. அதிலும் குரங்குகள் குறும்புக்கார விலங்குகள் என்பதால் அவற்றின் வீடியோ எப்போதும் வைரலாகிவிடும். மனிதர்களை நகலெடுப்பதில், குரங்கு எந்த எல்லைக்கும் செல்ல தயாராக இருக்கும். அந்தவகையில் குரங்கு தொடர்பான வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.


மேலும் படிக்க | ‘இப்படித்தான் கிஸ் கொடுக்கணும்’: நாய்க்கு சொல்லிக்கொடுக்கும் குழந்தை, செம கியூட் வைரல் வீடியோ!!


இந்த நிலையில், பட்டப்பகலில் குரங்கு ஒன்று நாயின் குட்டியை கடத்திக்கொண்டு தப்பிச் செல்லும் மற்றொரு அதிர்ச்சி வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அங்கிருந்த மக்கள் இந்த காட்சியை பார்த்துக்கொண்டே இருக்கிறார்கள். மறுபுறம், குரங்கு அந்த குட்டியை தூக்கி செல்கிறது.



இந்த வீடியோவில், ஜெய்ப்பூரில் உள்ள கங்கௌரி சந்தையில் நாய்களின் பல குட்டிகள் சாலையில் ஒன்றாக விளையாடுவதைக் காணலாம். அங்கிருந்து ஒரு விளையாட்டுத்தனமான குரங்கும் சந்தைக்கு வருகிறது. உணவு, பானங்கள் தேடி சந்தைக்கு வந்துள்ளார் அந்தக் குரங்கு. அப்போது அங்கிருந்த நாய் குட்டிகள் ஒன்றுடன் ஒன்று விளையாடிக்கொண்டு இருக்கிறது. அப்போது குரங்கு அங்கும் இங்கும் பார்க்கிறது. பின்னர் அங்கிருந்த ஒரு நாய் குட்டியை கடத்தி சென்றுவிடுகிறது. மேலும் வீடியோ காட்சி தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.


இதனிடையே இந்த வீடியோவை சமூக ஊடகமான ட்விட்டரில் ஹஸ்னா ஜரூரி ஹை என்ற பயனர் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வெளியான சில மணி நிமிடத்தில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களை பெற்றுள்ளது. மேலும் இந்த வீடியோவை நூற்றுக்கணக்கானோர் லைக் செய்துள்ளனர்.


மேலும் படிக்க | Viral Video: அம்மாடி... என்ன வாய்.... இது பேசும் கிளி இல்லை... அரட்டை அடிக்கும் கிளி!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ