Viral Video: கொடுமை... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை!

தவளைகள் பாம்புகளுக்கு பொதுவான இரையாகும். அவற்றின் வாழ்விடம் தவளைகளையும் உள்ளடக்கியது என்பது தனிச்சிறப்பு. ஆனால் சில தவளைகள் பாம்புகளையும் உண்கின்றன. இது ஆச்சரியமாகத் தோன்றலாம் ஆனால் இது உண்மை.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Mar 24, 2023, 02:28 PM IST
  • பச்சை நிறத் தவளை ஒன்று பாம்பை உண்ணும் வீடியோ.
  • பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும்.
  • ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள வித்தியாசமான மற்றும் திகிலூட்டும் வீடியோ.
Viral Video: கொடுமை... நூடுல்ஸ் போல் பாம்பை உயிருடன் கபளீகரம் செய்யும் தவளை! title=

பாம்பு மற்றும் தவளை என்பது பாம்பு மற்றும் கீரி போன்ற மற்றொரு ஜோடி என்றால் மிகையில்லை. இவை இரண்டும் எதிரிகளா என்று நீங்கள் கேட்டால் இல்லை. ஆனால் தவளைகள் பாம்புகளுக்கு பொதுவான இரையாகும். அவற்றின் வாழ்விடம் தவளைகளையும் உள்ளடக்கியது என்பது தனிச்சிறப்பு. ஆனால் சில தவளைகள் பாம்புகளையும் உண்கின்றன. இது ஆச்சரியமாகத் தோன்றலாம் ஆனால் இது உண்மை. பச்சை நிறத் தவளை ஒன்று பாம்பை உண்ணும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது. ட்விட்டரில் பகிரப்பட்டுள்ள வித்தியாசமான மற்றும் திகிலூட்டும் வீடியோ பலரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. வீடியோ 5 வினாடிகள் மட்டுமே  நீடிக்கும் இந்த வீடியோவில் பச்சைத் தவளை மெதுவாக பாம்பை விழுங்க முயல்வதைக் காணலாம்.

பொதுவாக, பாம்பு என்றால் படையே நடுங்கும். ஆனால், இங்கே தவளை ஒன்று பாம்பை சர்வசாதாரணமாக விழுங்குகிறது. தினமும் சமூக ஊடகங்களில் பல வினோதமான மற்றும் விசித்திரமான வீடியோக்கள் பகிரப்படுகின்றன. மக்கள் சமூக ஊடகங்களில் அதிக நேரத்தை வீடியோக்களைப் பார்ப்பதில் செலவிடுகிறார்கள். அந்த வகையில் பாம்பு வீடியோக்களுக்கு ரசிகர்கள் ஏராளம். அவர்களை இந்த வீடியோ நிச்சயம் அதிர்ச்சிக்குள்ளாக்கும்.

மேலும் படிக்க | Viral Video: பேச மட்டும் இல்லை வித்தையும் தெரியும்... பேப்பரில் இறக்கை செய்து அசத்தும் கிளி!

தவளை ஒன்று பாம்பை கபளீகரம் செய்யும் வைரல் வீடியோவை இங்கே காணலாம்:
 

 

வீடியோவை சுமார் 1,51,000 பேர் பார்த்துள்ளனர். பகிரப்பட்ட உடனேயே வைரலான இந்த வீடியோவை 164 பேர் ரீட்வீட் செய்துள்ளனர். சும்மர் 1200 பேர் விரும்பியுள்ளனர்.  ஐரோப்பிய பச்சை தவளைகள் ஐரோப்பா, ஆசியா மற்றும் வட அமெரிக்கா கண்டங்களில் காணப்படுகின்றன. ஐரோப்பிய பச்சை தவளைகளின் முக்கிய உணவு வண்டுகள், பூச்சிகள், ஈக்கள் மற்றும் பிற பூச்சிகள், சிறிய பட்டாம்பூச்சிகள் மற்றும் மண்புழுக்கள். வெப்பநிலை மற்றும் ஒளியின் மாற்றங்களுடன் நிறத்தை மாற்றும் திறனையும் இவை பெற்றுள்ளன. வைரலாகும் இந்த வீடியோ பார்ப்பவர் அனைவரையும் அதிர்ச்சிக்கும் உள்ளாக்கும் என்பதில் ஐயம் ஏதும் இல்லை.

மேலும் படிக்க | Viral Video: சிங்கங்களிடம் சிக்கி தவித்த முதலை! வனத்தில் ஒரு உயிர் போராட்டம்!

மேலும் படிக்க | Viral Video: மயக்கும் நடனத்தால் காதலிக்கு தூது விடும் காட்டுக் கோழி!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News