Pic Puzzle: படத்தில் ஒளிந்துள்ள 7 பேர்; 60 நொடியில் கண்டுபிடித்தால் சாம்பியன் பட்டம்
மூளைக்கும் பயங்கர வேலை கொடுக்கும் ஒளியியல் மாயை அல்லது படப்புதிர்களை தீர்ப்பது என்பது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.
மூளைக்கும் பயங்கர வேலை கொடுக்கும் ஒளியியல் மாயை அல்லது படப்புதிர்களை தீர்ப்பது என்பது அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். தற்போது இணையத்தில் மிகவும் வைரலாகி வரும் விஷயங்களில் ஒன்று ஆப்டிகல் இல்யூஷன் படங்கள், அதாவது ஒளியியல் மாயை. அதாவது நாம் பார்க்க கூடிய விஷயங்களை, மேலோட்டமாக பார்க்கும் போது, அதில் பொதிந்துள்ள ரகசியங்கள், மறைந்துள்ள விஷயங்களை அறிய இயலாது.
தங்கள் மனதையும் கண்களையும் கூர்மையாக்க இந்தப் படங்களைப் பார்த்து, தாங்கள் தான் சம்பியன் என நிரூபிப்பதில் பெரும்பாலானோருக்கு ஆர்வம் அதிகம் இருக்கும். இது போன்ற படங்கள் மூளைக்கு பயிற்சி தருவது மட்டுமின்றி மூளையின் திறனையும் அதிகரிக்கும்.
மேலும் படிக்க | Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் 6 உயிரினங்களை கண்டுபிடித்தால் நீங்கள் கில்லாடி தான்
இப்போது இங்கே கொடுக்கப்பட்டுள்ள ஓவொயத்தில், 7 மனித முகங்கள் மறைந்துள்ளன. இது ஒளியியால் மாயை ஓவியம். இந்த படத்தை மிகக் கூர்ந்து பார்த்தால் தான் ஏழு முகங்களையும் கண்டுபிடிக்க முடியும். இது பெரும்பாலானோருக்கு சவாலான பணிதான்.
இருப்பினும், பலர் குறைந்தது 5 முகங்களை எளிதில் கண்டுபிடித்துள்ளார்கள். மீதி இரண்டை கண்டறிவது மிக சிரமம்.
ஓவியத்தில் மறைந்திருக்கும் 7 முகங்கள்
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் மாயை படத்தில், கேரேஜ் போன்ற காட்சி இருப்பதை நீங்கள் காண்பீர்கள். அதில் ஒரு கார் நிறுத்தப்பட்டு பல வாகனங்களின் பாகங்கள் ஆங்காங்கே சிதறிக் கிடக்கின்றன. இதில், ஏழு பேர் காரின் சில பகுதிகளில் நிற்கிறார்கள் அல்லது அமர்ந்திருக்கிறார்கள். அந்த ஏழு பேரையும் கண்டுபிடித்தால் நீங்கள் சாம்பியன் தான். கொஞ்சம் முயற்சி செய்தால் நிச்சயமாக அவற்றைக் கண்டுபிடிப்பீர்கள்.
படத்தை இங்கே பார்க்கவும்: நேரம் 60 வினாடிகள்
இந்தப் படத்தில் உள்ள ஏழு முகங்களையும் கண்டுபிடிக்க, உங்களுக்கு 60 வினாடிகள் அதாவது ஒரு நிமிடம் கொடுக்கப்படுகிறது. உரிய நேரத்தில் அவர்களைக் கண்டுபிடித்தால், நீங்கள் சாம்பியன் என்று அழைக்கப்படுவீர்கள். இந்த ஓவியத்தின் புதிரை உங்களால் தீர்க்க முடியவில்லை என்றால், நாங்கள் உங்களுக்கு உதவ தயாராக இருக்கிறோம். கீழே கொடுக்கப்பட்ட படத்தில் முகங்கள் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளன.
மேலும் படிக்க | Picture Puzzle: படத்தில் ஒளிந்திருக்கும் சிறுத்தையை கண்டுபிடிக்க முடிகிறதா
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR