இணையத்தில் அதிகளவில் நாய்களின் குறும்பு செயல்கள் அதிகளவில் பகிரப்பட்டு நெட்டிசன்களை கவர்ந்து வருகிறது.  நன்றியுள்ள பிராணி என்று கூறப்படும் நாய்கள் பெரும்பாலும் மனிதர்களை போலவே அன்றாடம் பல செயல்களை செய்து வருகின்றன.  அதேபோல தான் தற்போது வைரலாகியுள்ள இந்த வீடியோவில் கிட்டத்தட்ட  பத்து நாய்கள் ஒரு பலூனை வைத்து மனிதர்களை போல விளையாடுகிறது.  இந்த காட்சி பார்ப்பதற்கு நகைச்சுவையாகவும் அதே சமயம் ரசிக்கும்படியாகவும் அமைந்து இருக்கிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | சரக்கடித்து சர்க்கஸ் காட்டிய பூனை, விடாமல் சிரிக்கும் நெட்டிசன்கள்: வைரல் வீடியோ


இந்த வீடியோவானது ட்விட்டரில், பைடெங்பைடன் என்கிற ட்விட்டர் பக்கத்தில் பதிவிடப்பட்டு இருக்கிறது.  அந்த வீடியோவில் கருப்பு மற்றும் வெள்ளை நிறம் கலந்து ஆறு நாய்களும், வெள்ளை மற்றும் செம்பழுப்பு நிறம் கலந்து இரண்டு நாய்களும், வெள்ளை மற்றும் அடர் பழுப்பு நிறம் கலந்து இரண்டு நாய்களும் இருப்பதை காண முடிகிறது.  அந்த நாய்கள் ரோஸ் மற்றும் வெள்ளை நிறம் கலந்த பலூன் ஒன்றை வாலிபால் விளையாடுவது போல வாயாலும் தலையிலும் முட்டி மேலே தூக்கி வீசி விளையாடுகின்றன.  மனிதர்கள் ஒருவருக்கொருவர் போட்டி போட்டுக்கொண்டு முந்தியடித்து விளையாடுவது போல இவை ஒவ்வொன்றும் போட்டி போட்டுகொண்டு விளையாடுகின்றன.  அதில் வெள்ளை மற்றும் அடர் பழுப்பு நிறம் கலந்த ஒரு நாய் வேடிக்கை பார்ப்பது போல நின்று கொண்டு இருக்கிறது.


 



இணையத்தில் நேற்றைய தினம் (மார்ச்-23) பதிவேற்றப்பட்ட இந்த வீடியோவை அதற்குள் பல்லாயிரக்கணக்கான பார்வையாளர்கள் பார்த்து ரசித்து இருக்கின்றனர்.  இந்த வீடியோவுடன் 'ஹேவிங்க் ஃபன் டூகெதர்' என்கிற கேப்ஷனும் பதவிடப்பட்டுள்ளது.  பலரும் அற்புதம், அருமையான வீடியோ என்றும் பதிவிட்டு வருகின்றனர், சிலர் இதய எமோஜிகளை பதிவிட்டும் இந்த வீடியோவை மற்றவர்களுக்கு பகிர்ந்தும் வருகின்றனர்.


மேலும் படிக்க | 'அம்மாடி...இவ்வளவு பெருசா' எலியை பார்த்து மிரண்ட பூனை: வீடியோ வைரல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR