உலகில் உள்ள கொடூரமான விலங்குகளில் முதன்மையான விலங்காக பார்க்கப்படுவது, முதலை. ஊர்வன வகையை சேர்ந்த இது, மனிதரகளாக இருந்தாலும் சரி மனிதர்களாக இருந்தாலும் சரி அப்படியே அடித்து சாப்பிட்டு இருந்து இடம் தெரியாமல் செய்துவிடும். ஆறுகள், ஏரிகள், குளங்கள் போன்ற இடங்களில் வாழும் இவை இந்திய உள்பட பல்வேறு உலக நாடுகளில் வாழ்கின்றன. இவைகளுக்கென தனித்தனியாக பூங்காக்களும் அமைக்கப்பட்டுள்ளன. அப்படி ஒரு பூங்காவில் ஒரு இளைஞர் முதலையுடன் செய்த செயல் இன்ஸ்டாவில் வீடியோவாக வெளியிடப்பட்டு வைரலாகி வருகிறது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

முதலையுடன் இளைஞர்:


பிரபலமான சமூக வலைதளமான இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பலர் ப்ளூ டிக்குடன் பிரபலங்களாக திகழ்கின்றனர். சினிமா பிரபலங்களில் ஆரம்பித்து உயிரியல் பூங்காவில் வேலை செய்பவர்கள் முலர் பலருக்கும் இன்ஸ்டாகிராம் பிரபலங்களின் அங்கீகாரங்களை கொடுத்துள்ளது. அப்படி அங்கீகரிகப்பட்ட கணக்குகளுள் ஒன்று, @wildcharlesshow இந்த கணக்கின் உரிமையாளரான நபர் ஒரு உயிரியல் பூங்காவில் வேலை பார்க்கிறார். பல்வேறு மிருகங்களை பராமறிக்கும் இவர், அவற்றுடன் நேரம் செலவிட்டு அதை வீடியோவாக தனது யூடியூப் சேனலில். குட்டி குட்டி வீடியோக்களை இன்ஸ்டா பக்கத்தில் பதிவிடுவார். அவர் தற்போது பதிவிட்டுள்ள ஒரு வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. 


மேலும் படிக்க | எருமைகள் மீது நாயின் சூப்பர் சவாரி.. சொக்கிப்போன நெட்டிசன்ஸ்: வேற லெவல் வைரல் விடியோ


வைரல் வீடியோ:


சில நாட்களுக்கு முன்னர் வெளியாகியுள்ள அந்த வீடியோவில் சக உயிரியல் பூங்கா ஊழியர்களுடன் அந்த இளைஞர் முதலைக்கு உணவளிப்பதற்காக செல்கிறார். ஒருவர் முதலைக்கு மீன்-இறைச்சியை தூக்கி போட முதலைக்கு பின்புறம் இருந்து அதன் மீது அமர முயற்சித்தார், வீடியோவை பதிவிட்டுள்ள அந்த நபர். 



இதை பார்வையிட்டு கொண்டிருந்த மக்கள், இவருக்காக பயந்து பெருமூச்சு விடுவதும், இவரை ‘தொடர்ந்து முதலையின் அருகில் செல்ல வேண்டாம்..’ என கூறுவதும் அந்த வீடியோவில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ இதுவரை 16லட்சத்திற்கும் மேற்பட்ட லைக்ஸகளை பெற்று நெட்டிசன்களிடையே வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில் இருக்கும் முதலை, தங்களையே பயமுறுத்தும் வகையில் உள்ளதாக சில நெட்டிசன்கள் கமெண்டுகளில் தெரிவித்துள்ளனர். 


சாகச விரும்பிகளின் கமெண்டுகள்:


ஒரு சிலர், வீடியோ பதிவிடுள்ள நபரின் பெரிய ரசிகர்களாக இருக்கின்றனர். அவர்களில் சிலர் வீடியோவில் முதலையின் மீது ஏற நினைத்த நபரை புகழ்ந்து வருகின்றனர். இது போல இன்னும் நிறைய வீடியோக்களை முதலையின் முகத்துடன் பதிவிடுமாறும் அவர்கள் கூறிவருகின்றனர். 


சமூக ஆர்வலர்கள் கருத்து:


இது போன்ற வீடியோக்கள் எப்போடும் விலங்குகள் நல ஆர்வலர்கள் மத்தியிலும் சமூக ஆர்வலர்கள் மத்தியிலும் விவாதமாக எடுத்துக்கொள்ளப்படும். எந்த வகையான மிருகமாக இருந்தாலும் அதை துன்புறுத்தும் வகையிலான செயல்களை நாம் செய்யக்கூடாது என்பது அவர்களுக்குள் பொதுவாக கருத்தாக உள்ளது. இவ்வாறு, வியூஸ்களுக்காக மிருகங்களை துன்பத்திற்கு உள்ளாக்குபவர்களை தண்டிக்க வேண்டும் என சிலர் இந்த வீடியோவின் கமெண்ட் செக்‌ஷனில் தெரிவித்துள்ளனர். 


மேலும் படிக்க | ரன்னிங்கில் இறங்கி மாஸ் காட்டும் நாய்: மீண்டும் மீண்டும் பார்க்க வைக்கும் வைரல் வீடியோ


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ