நூதனமான முறையில் டிரக்கில் வொயின் பாட்டில்கள் Smuggling Video Viral
இந்த வீடியோவை பலரும் லைக் செய்துள்ளனர். ஒரு முறை அல்ல, பல முறை இந்த வீடியோ பார்க்கப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா?
இந்த வீடியோவை பலரும் லைக் செய்துள்ளனர். ஒரு முறை அல்ல, பல முறை இந்த வீடியோ பார்க்கப்படுவதற்கான காரணம் என்ன தெரியுமா?
நேர்மறையான விஷயங்களை விட, எதிர்மறையான விஷயங்கள் மக்களை வெகு சீக்கிரமாக சென்றடைகின்றன என்பது எப்போதுமே ஆச்சரியமடைய வைப்பதாக இருக்கிறது. சாராயக் கடத்தல் தொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. இது போன்ற ஒரு விஷயத்தை இதற்கு முன்னர் பெரும்பாலனவர்கள் பார்த்திருக்க மாட்டார்கள்.
இந்த வைரல் வீடியோவில் ஒரு சிறிய டிரக்கின் அருகில் சில அதிகாரிகள் நிற்கின்றனர். விசாரணை நடைபெறுகிறது. பிக்கப் டிரக் முற்றிலும் காலியாக உள்ளது. அங்கு எதுவுமே இல்லை. அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.
Also Read | 7th Pay Commission New updates: இந்த தேதியில் இருந்து DA, DR சலுகைகள் கிடைக்கும்
அப்போது, அங்கு நிற்கும் நபர்களில் ஒருவர் நம்பர் பிளேட்டைத் திறந்து அந்த பகுதியை இழுக்கிறார். அங்கு இருப்பதை பார்த்தவுடன் அனைவரும் வாயைப் பிளக்கின்றனர்.
ரகசியமாக உள்ள ஒரு பகுதி வெளியே வருகிறது. அதில் நிறைய மது பாட்டில்கள் இருக்கின்றன, அவை மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.
அந்த வீடியோவை ஆனந்த் மஹிந்திரா சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோவை பகிர்ந்துள்ள அவர் இவ்வாறு எழுதியுள்ளார்.
Also Read | Data Theft: OTPகள் பாதுகாப்பாக இல்லை, SMS மூலம் தரவுகள் திருட்டு
‘பே-லோட்!’ என்ற சொல்லுக்கு ஒரு புதிய அர்த்தத்தைத் தருகிறது, ஆனால் இந்த வகையான கண்டுபிடிப்பு எங்கள் ஆராய்ச்சி மையத்தில் பிக்கப் டிரக் தயாரிப்பு மேம்பாட்டுக் குழுவிற்கான வடிவமைப்பு திட்டத்தின் பகுதி இல்லை என்று உங்களுக்கு உறுதியளிக்கிறேன், இது போன்ற ரகசிய பகுதிகள் எங்கள் தயாரிப்பில் எப்போதும் இருக்காது
மக்கள் விரும்பும் இந்த சாராயக் கடத்தல் வீடியோவை இதுவரை 90 ஆயிரம் பேர் லைக் செய்துள்ளனர்.
Also Read | கைதிகளுக்கு GPS tag அணிவித்தால் குற்றங்கள் கட்டுப்படும் என்பது உண்மையா?
தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR