Bike Stunt செய்த இரு பெண்களின் வீடியோ வைரல், 28,000 ரூபாய் அபராதம்

பைக்கில் சவாரி செய்யும் பெண்ணின் தோளில் மற்றொரு பெண் அமர்ந்து ஸ்டண்ட் செய்யும்  வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. ஒரே மாதிரியான சிவப்பு சட்டை மற்றும் கருப்பு டெனிம் அணிந்திருக்கும் பெண்கள் இருவரும் ஸ்டண்ட் செய்யும் காட்சி அதகளப்படுத்துகிறது.  

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 18, 2021, 10:57 PM IST
  • இரு பெண்களின் Bike Stunt வீடியோ வைரல்
  • வீடியோவின் அடிப்படையில் 28,000 ரூபாய் அபராதம்
  • பைக் ஸ்டண்ட் செய்தார்கள் மல்யுத்த வீராங்கனைகள்
Bike Stunt செய்த இரு பெண்களின் வீடியோ வைரல், 28,000 ரூபாய் அபராதம்  title=

பைக்கில் சவாரி செய்யும் பெண்ணின் தோளில் மற்றொரு பெண் அமர்ந்து ஸ்டண்ட் செய்யும்  வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகிறது. ஒரே மாதிரியான சிவப்பு சட்டை மற்றும் கருப்பு டெனிம் அணிந்திருக்கும் பெண்கள் இருவரும் ஸ்டண்ட் செய்யும் காட்சி அதகளப்படுத்துகிறது.  

உத்தரபிரதேசத்தின் காஜியாபாத்தில் ஒரு பிரதான சாலையில் பைக்குகளில் ஸ்டண்ட் செய்ததற்காக இரண்டு பெண்களுக்கு அண்மையில் 28,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. அவர்கள் ஸ்டண்ட் செய்யும் வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகியதை அடுத்து இந்த அபராதம் வழங்கப்பட்டுள்ளது.

 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by CH SHIVANGI DABAS(@miss_jaatni)

போக்குவரத்து விதிகளை மீறியதற்காக காவல்துறை 28,000 ரூபாய் அபராதம் விதித்தது. ஸ்டண்ட் செய்த பெண்களின் ஒருவர் அதை வீடியோவாக எடுத்து தனது இன்ஸ்டாகிராம் கணக்கில் வெளியிட்டதை அடுத்து இந்த ஸ்டண்ட் வீடியோ வைரலாகியது.

Also Read | Instagram Filter போல தோற்றமளிக்க 30 லட்சம் ரூபாய் செலவு! 

வைரல் வீடியோவில், ஒரு பெண் பைக்கில் சவாரி செய்து கொண்டிருந்தார், மற்றொரு பெண் சவாரி தோளில் அமர்ந்திருந்தார். பெண்கள் இருவரும் ஸ்டண்டின் போது ஒரே மாதிரியான சிவப்பு சட்டை மற்றும் கருப்பு டெனிம்களை அணிந்திருந்தனர். இதைப் பார்த்த காவல்துறையினர், ஸ்டண்ட் செய்யும் புகைப்படத்துடன் அபராதச் சலானை இருவருக்கும் அனுப்பினர்.

அதோடு, இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்ட உத்தரப்பிரதேச போலீசார் “Dhoom or Doomed” என்று அந்த வீடியோவுக்கு பெயரிட்டுள்ளனர்.   

ஸ்டண்டிற்கு பயன்படுத்தப்பட்ட பைக்குகள் மஞ்சு தேவி மற்றும் சஞ்சய் குமார் என இருவருக்கு சொந்தமானவை. வாகன உரிமையாளர்களாக மஞ்சு தேவிக்கு 11,000 ரூபாய் அபராதமும், சஞ்சய் குமாருக்கு 17,000 ரூபாய்க்கான சலானும் வழங்கப்பட்டது. இரு பெண்களும் மல்யுத்த வீராங்கனைகள் என்று கூறப்படுகிறது.

Also Read |13 வயது மாணவரை வலுக்கட்டாயமாக மணந்து முதலிரவு கொண்டாடிய ஆசிரியை! 

ஹெல்மெட் அணியாதது, அனுமதியின்றி பந்தயத்தில் ஈடுபடுவது மற்றும் போக்குவரத்து விதிகளை மீறியதற்காக அவர்களுக்கு சலான்கள் வழங்கப்பட்டன.
ஸ்டண்ட் செய்தவர்களில் ஒருவரான சிவாங்கி என்ற பெண், அவர்கள் ஸ்டண்ட் பயிற்சி செய்ததாகவும், “வேடிக்கைக்காக” வீடியோவை படம்பிடிக்க ஒரு பாதுகாப்பான இடத்தை தேர்வு செய்ததாகவும் கூறினார்.

ஆனால் இதுபோன்ற விபரீத விளையாட்டுகள் வேண்டாம் என்று போலீசார் எச்சரிக்கின்றனர்.

Also Read | ஜஸ்பிரித் பும்ரா-சஞ்சனா கணேசனின் திருமண சடங்குகள் அசத்தலான புகைப்படங்கள்

தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News