Snake Viral Video: குப்பைகளை சிந்தனையின்றி அகற்றுவது சுகாதாரக்கேடு மட்டுமல்ல, விலங்குகளுக்கும் தீங்கு விளைவிக்கும் என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. இணையத்தில் ஒரு வைரலான வீடியோவில், ஒரு டைகர் பாம்பின் தலை (Tiger Snake - உலகின் மிக கொடிய பாம்புகளில் ஒன்று) ஒரு பீர் கேனில் சிக்கிக்கொண்டது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விஷ ஊர்வனமான அந்த டைகர் பாம்பு தகர கேனில் சிக்கி வலிமிகுந்த மரணத்தை சந்தித்திருக்கும். ஆனால் ஒரு பாம்பு மீட்பவரின் உதவியால் அதன் உயிர் தப்பியது. அது பாதுகாப்பாக அதன் இயற்கை வாழ்விடமான காட்டுக்குள் விடுவிக்கப்பட்டது. துரதிர்ஷ்டவசமாக அந்த டின்னில் மாட்டிக்கொண்ட பாம்பின் உயிரைக் காப்பாற்றியதற்காக அதை மீட்டவர் ஆன்லைனில் பாராட்டப்பட்டார்.



வைரலான வீடியோவில், ஒரு டைகர் பாம்பின் தலை ஒரு பீர் கேனில் சிக்கி, தன்னை விடுவித்துக் கொள்ள கடுமையாக முயற்சிப்பதைக் காட்டுகிறது. வீடியோ தொடரும் போது, ஒரு தொழில்முறை பாம்பு மீட்பவர் விஷ பாம்பை காப்பாற்றும் முயற்சியில் இறங்கினார். அந்த பாம்பு சுவாசிப்பதற்காக முதலில் ஒரு சிறிய துளையை பாம்பு மீட்பவர் கேனில் வெட்டிகிறார். பின்னர், அதன் வாயை மூடி, கேனை வெட்டி பாம்பை விடுவித்தார். மீட்பு நடவடிக்கையின் போது, கோபமடைந்த பாம்பு தன்னை தற்காத்துக் கொள்ளும் முயற்சியில், மீட்பவரை பலமுறை கடிக்க முயன்றது.


இந்த வீடியோவை எக்ஸ் (முன்னர் ட்விட்டர்) சமூக வலைதளத்தில் @thedodo என்ற பக்கம் வெளியிட்டது. அந்த பதிவை, "இந்த பாம்பு மிகவும் கொடியது, எனவே இவர் தனது உயிரை அதனிடம் இருந்து மிகவும் கவனமாகக் காப்பாற்றுகிறார்" என்ற கேப்ஷனோடு பகிர்ந்துள்ளார். 


மேலும் படிக்க | Viral Video: பாம்பெல்லாம் எனக்கு பஞ்சு மிட்டாய் மாதிரி... ராஜநாகங்களை அசால்டாக பிடிக்கும் நபர்!


வீடியோ பகிரப்பட்டதில் இருந்து 183.4k பார்வைகளைக் குவித்துள்ளது மற்றும் 2000க்கும் மேற்பட்ட விருப்பங்களைப் பெற்றுள்ளது. மீட்கும் வீடியோ X பயனர்களை கருத்துகள் பிரிவில் தங்கள் எண்ணங்களை வெளிப்படுத்த தூண்டியது. காட்டு உயிரினத்தின் உயிரைக் காப்பாற்றியதற்காக பெரும்பாலான பயனர்கள் மீட்பவரைப் பாராட்டினர்.


தற்போதைய காலகட்டத்தில் இணையம் என்பது அன்றாட வாழ்வில் ஒன்றாகிவிட்டது. இணையம் ஒரு தனி உலகமாக மாறி, இங்கு பல்வேறு விஷயங்கள் குறித்து நாம் தெரிந்துகொள்கிறோம். இங்கு பகிரப்படும் செய்திகளும், புகைப்படங்களும், வீடியோக்களும் நமக்கு பல்வேறு செய்திகளையும், தகவல்களையும் வழங்குகின்றன.


பயனுள்ள பல தகவல்களுடன் கேளிக்கைக்கான ஒரு வெளியாகவும் சமூக ஊடகங்கள் உள்ளன. நாம் நமது அன்றாட வாழ்வில் ஏற்படும் மன சோர்வுகளை சற்று தளர்த்திக்கொள்ள சமூக ஊடகங்களில் பகிரப்படும் வீடியோக்கள் நமக்கு உதவுகின்றன, வடிகால்களாகவும் இருக்கின்றன. இவற்றில் விலங்குகளின் வீடியோக்களுக்கென தனி ரசிகர் கூட்டமே இருக்கிறது எனலாம். விலங்குகளின் உலகில் நாம் நம்ப முடியாத, அருகில் சென்று பார்க்க முடியாத பல நிகழ்வுகளை நாம் இணையத்தில் காண்கிறோம். சமூக ஊடகங்களில் சில குறிப்பிட்ட மிருகங்களுக்கு அதிக ரசிகர்கள் இருக்கிறார்கள். அதாவது, குரங்கு, பாம்பு, நாய், பூனை, யானை ஆகியவை இவற்றில் சிலவற்றை கூறலாம். குறிப்பாக, இதுபோன்ற பாம்பு வீடியோவையும் பலரும் ரசிக்கின்றனர். 


மேலும் படிக்க | வைரல் வீடியோ: 10 அடி நீளமுள்ள மலைப்பாம்புக்காக இளைஞர் செய்த சம்பவம்!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ