சீரிய ராஜ நாகம்... கண்ணால் மயக்கி முத்தம் கொடுக்கும் இளம்பெண் - வைரலாகும் வீடியோ

King Cobra Viral Video: பெரிய ராஜ நாகப்பாம்பை ஒரு மேடையில் வைத்த ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர் முத்தமிட்ட வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.

Written by - Sudharsan G | Last Updated : Aug 19, 2023, 04:49 PM IST
  • இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ளது.
  • பலரும் அந்த பெண்ணின் தைரியத்தை பாராட்டினர்.
  • இருப்பினும், சிலர் அந்த பெண்ணின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுப்பினர்.
சீரிய ராஜ நாகம்... கண்ணால் மயக்கி முத்தம் கொடுக்கும் இளம்பெண் - வைரலாகும் வீடியோ title=

King Cobra Viral Video: பாம்பு என்ற பெயரை கேட்டாலே பலரின் முதுகெலும்பையும் சில்லிட வைத்து, நடுங்க வைக்கும் பெயர் ஆகும். இந்த பூமியில் மிகவும் மர்மமான உயிரினங்களில் பாம்பும் ஒன்றாகும். இந்த உயிரினங்கள், அவற்றின் அற்புதமான வேட்டையாடும் திறன் மற்றும் மின்னல் வேக செயல்களுக்காகவும் பெயர் பெற்றவை. மிகவும் கொடூரமான மற்றும் விஷமுள்ள உயிரினங்களாக பாம்புகள் உள்ளன. 

ஒரே ஒரு துளி விஷமும் மனிதர்களுக்கு மரணத்தை ஏற்படுத்தக் கூடியது. இருப்பினும், பாம்புகள் இன்னும் விலங்கு பிரியர்களிடையே மிகவும் பிரபலமான ஒன்றாக தான் உள்ளது. பலர் அவற்றை செல்லப்பிராணிகளாக வைத்திருக்க விரும்புகிறார்கள். குறிப்பாக, பாம்பு வீடியோக்கள் இணையம் முழுவதும் நிரம்பி வழிகிறது, பல்வேறு விஷப் பாம்புகளுடன் மக்கள் துணிச்சலான ஸ்டண்ட் செய்து பார்வையாளர்களை வாயடைக்கச் செய்கிறார்கள். 

இதேபோன்று, ஹிஜாப் அணிந்த பெண் ஒருவர், பெரிய ராஜ நாகப்பாம்புடன் முத்தமிடுவது போன்ற ஒரு வீடியோ இணையத்தின் கவனத்தை ஈர்த்துள்ளது. ஆம், நீங்கள் அதைச் சரியாகப் படித்தீர்கள் - அவர் ஆவேசத்துடன் சீறும் ராட்சத ராஜ நாகப்பாம்பை முத்தமிட்டார்.

மேலும் படிக்க | பரவச உலகில் இருந்தவரின் பேன்டில் புகுவதற்குபோன நாகப்பாம்பு: வைரல் வீடியோ

எவ்வித பயமும்ன்றி, அந்தப் பெண் ஒரு மேடையில் அந்த சாகசத்தை செய்தார். அவரை உன்னிப்பாகப் பார்த்த நூற்றுக்கணக்கான பார்வையாளர்கள் அங்கு சூழ்ந்திருந்தனர். ஒரு ராட்சத ராஜ நாகப்பாம்பை பெண் எதிர்கொள்வதைக் காட்டுவதன் மூலம் வீடியோ தொடங்குகிறது. அதைத் தொடர்ந்து, அந்த ராஜ நாகப்பாம்பின் கவனத்தைத் திசைத் திருப்ப அந்த பெண் ஒரு கருப்பு துணியை பயன்படுத்தினார்.

வைரல் வீடியோ:

நாகப்பாம்பின் கவனத்தை முழுவதுமாக அந்த கருப்பு துணியில் வைத்த அந்த பெண், படிப்படியாக அந்த பாம்பை நோக்கி முன்னேறி, பயங்கரமாக இருக்கும் அந்த பாம்பின் தலையில் முத்தமிடுகிறார். பாம்பை முத்தமிட அவர் இரண்டாவது முறையும் முயற்சி செய்வதோடு வீடியோ முடிகிறது.

இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @Bellashariman என்ற பக்கம், "எவ்வளவு காலம் வாழந்தீர்கள் என்பதல்ல, எப்படி வாழ்ந்தீர்கள் என்பதுதான் முக்கிய விஷயம்" என்ற கேப்ஷனுடன் இந்த வீடியோவை பகிர்ந்துள்ளது.

இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி, நெட்டிசன்களை பயமுறுத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்த வீடியோ கிளிப் பகிரப்பட்டதில் இருந்து 14.3 ஆயிரம் பார்வைகளைப் பெற்றுள்ளது மற்றும் அதன் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்ஸ்டாகிராம் பயனர்கள் தங்கள் கருத்துக்களை கமெண்ட் பிரிவில் பகிர்ந்து கொண்டு வருகின்றனர். அவர்களில் பெரும்பாலோர் அந்த பெண்ணின் ஸ்டண்ட் மற்றும் தைரியத்தை பாராட்டினர், மற்றவர்கள் அவரது பாதுகாப்பு குறித்தும் கவலை தெரிவித்தனர்.

மேலும் படிக்க | 20 ஓவர் போட்டியில் ஷாக் கொடுத்த நாகப்பாம்பு - தெறித்து ஓடிய இலங்கை வீரர்: வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News