வைரல் வீடியோ: 10 அடி நீளமுள்ள மலைப்பாம்புக்காக இளைஞர் செய்த சம்பவம்!

சாலையைக் கடக்க முடியாமல் படுத்து இருந்த 10 அடி நீள மலைப் பாம்புக்காக போக்குவரத்தை இளைஞர் ஒருவர் நிறுத்திய வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது. 

Written by - S.Karthikeyan | Last Updated : Aug 20, 2023, 06:58 PM IST
  • பெரிய பாம்பு வீடியோ வைரல்
  • மெதுவாக சாலையை கடக்கிறது
  • கைதட்டி உற்சாகப்படுத்திய இளைஞர்
வைரல் வீடியோ: 10 அடி நீளமுள்ள மலைப்பாம்புக்காக இளைஞர் செய்த சம்பவம்!  title=

மத்தியப் பிரதேசத்தின் நர்மதாபுரத்தில் நெடுஞ்சாலையை 10 அடி நீளமுள்ள பாம்பை பாதுகாப்பாக கடக்க உதவுவதற்காக இளைஞர் ஒருவர் செய்த சம்பவம் வீடியோவாக பதிவாகியுள்ளது. அந்தப் பாம்பால் சாலையை கடந்து செல்ல முடியவில்லை. இதனால் பாம்பு சாலையை கடந்து செல்வதற்கு வசதியாக போக்குவரத்தை நிறுத்தியுள்ளார். வியாழன் இரவு நடந்ததாகக் கூறப்படும் இந்தச் சம்பவ வீடியோ, பல்வேறு சமூக ஊடக தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அதில் ஒரு பெரிய மலைப் பாம்பு நெடுஞ்சாலையில் சுமார் 10 நிமிடங்களுக்கு நகர்ந்து கொண்டிருந்தது. சாலையில் பாம்பு இருப்பதைப் பார்த்து பயணிகள் மத்தியில் பெரும் அச்சத்தை ஏற்படுத்தியது. இந்த கூட்டத்தால் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

மேலும் படிக்க | மனதை மயக்கும் இயற்கையின் வண்ணங்கள்! பார்க்க பார்க்க வியப்பூட்டும் நீரூற்று! 

மலைப்பாம்புக்கு உதவிய இளைஞர்

அந்த வழியாக சென்ற சிலர் பாம்பை வீடியோவாக எடுத்துள்ளனர். வீடியோவில், மலைப்பாம்பு மெதுவாக சாலையின் குறுக்கே செல்கிறது. மறுபுறம் பாம்பு நகரும்போது லேசான மழை பெய்தது. மலைப்பாம்பு சாலையைக் கடக்கும்போது உற்சாகப்படுத்தும் வகையில் ஒரு இளைஞன் கைதட்டியுள்ளார். அவரின் கைத்தட்டலைக் கேட்டு பாம்பு மெதுவாக சாலையை கடந்து விடுகிறது. இளைஞர் பொறுப்புடன் நடந்து கொண்டதற்காக வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். 

வைரலாகியிருக்கும் மற்றொரு வீடியோவில் ராட்ச பாம்பை புர்கா அணிந்த பெண் எந்த பயமும் இல்லாமல் முத்தமிடும் காட்சி காண்போரை சிலிர்க்க வைக்கிறது. பாம்பை முத்தமிட அவள் இரண்டாவது முயற்சி செய்வதோடு வீடியோ முடிகிறது. இந்த வீடியோவை இன்ஸ்டாகிராமில் @Bellashariman என்ற பக்கம் பகிர்ந்துள்ளது. இந்த வீடியோ இணையத்தில் தீயாக பரவி, நெட்டிசன்களை பயமுறுத்தவும் செய்திருக்கிறது. 

மேலும் படிக்க | சிறு வயதை நினைப்படுத்தும் யானைக்குட்டிகளின் சண்டை வீடியோ! மனம் மயக்கும் வைரல் வீடியோ

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News