ஜூலை மாதத்தில் 2 முறை பெயர்ச்சியாகும் சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள்!
Venus Blessings By Laxmi Worship : ஜூலை மாதம் இரு முறை பெயர்ச்சியாகும் சுக்கிர பகவானின் அருளைப் பெற அன்னை லட்சுமியை வணங்கும் முறைகளை தெரிந்துக் கொள்வோம்... இவை சுக்கிரனை வசியம் செய்யும் பரிகாரங்கள்...
சுக்கிரன் பெயர்ச்சி ஜூலை 2024: மகிழ்ச்சியையும், செழுமையையும் தரும் சுக்கிரன், தற்போது மிதுன ராசியில் சஞ்சரித்துக் கொண்டிருக்கிறார். அவர் ஜூலை முதல் வாரத்தில் கடக ராசிக்குள் நுழைகிறார். ஜூலை 7-ம் தேதி கடக ராசியை அடையும் போதே புதன் மிதுன ராசியில் இருப்பதால் அங்கு சுக்கிரனும் சேரும்போது அருமையான சுகயோகம் உருவாகிறது. அதிலும் சுக்கிரனின் அதிதேவதையான லட்சுமி அன்னையின் அருள் பெறும் ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்கும்.
ஜூலை 30-ம் தேதி வரை சுக்கிரன் கடக ராசியில் இருக்கும்போது. சுக்கிரனின் அதிதேவதையான மகாலட்சுமியின் அருளைப் பெற அனைத்து ராசிகளுக்கும் உரிய பரிகாரங்களைத் தெரிந்துக் கொள்வோம். இதனால், காக்கும் கடவுள் விஷ்ணுவின் மனதில் நீங்க இடம் பிடித்திருக்கும் அன்னையின் மனதில் அருள் பொங்கும், அதனால் உங்கள் அதிர்ஷ்டம் பிரகாசிக்கக்கூடும்.
ஜூலை மாதம் அன்னை லட்சுமியை வணங்கும் வழிமுறைகள்.
திருமணம் ஆன பெண்கள் சுக்கிரனுக்கு உகந்த வெள்ளிக்கிழமை நாளன்று கோவிலில் அம்பாளுக்கு பூஜை செய்த பிறகு, அம்பாள் கையிலிருந்தே திருமாங்கல்ய கயிறு வாங்கி அணிந்து கொண்டால் வீட்டில் சகல செளபாக்கியங்களும் பெருகும். நவகிரக தோஷம், திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம், திருட்டுபயம் என பல தோஷங்களையும் போக்க அன்னை லட்சுமியின் அருளாசி கிடைக்கும்.
வெளிக்கிழமை மதியம் 12 மணிக்கும் 12.30 க்கும் இடையில் தயிர் சாதம் அன்னதானம் செய்வது பலவிதமான கிரக தோஷங்களையும் தீர்க்கும். தொடர்ந்து ஐந்து வெள்ளிக் கிழமைகள் மங்களம் தரும் அம்பிகையை ஆராதிக்கும் பக்தர்களுக்கு மாங்கல்ய தோஷம், ராகு, கேது சனி முதலிய கிரக தோஷங்களும் விலகி திருமணத்திற்கு உரிய தடைகளும் நீங்கி மாங்கல்ய பாக்கியத்தை அன்னை லட்சுமி கொடுப்பார். அதிலும், சுக்கிரன் கடகத்தில் இருக்கும் இந்த நான்கு வார வெள்ளிக்கிழமைகளிலும் செய்யும் லட்சுமி வழிபாடு நல்ல பலனைத் தரும்.
திருமணத்தடை இருந்தால், அம்மனுக்கு திருமாங்கல்யம், புடவை சாத்தி வழிபாடு செய்து 5 சுமங்கலி பெண்களுக்கு மஞ்சள், குங்குமம் , பூ வெற்றிலை, பாக்கு, சீப்பு , கண்ணாடி வளையல், மாங்கல்ய கயிறு இவற்றுடன் ஒரு ரூபாய் காயின் தட்சணையாக வைத்து கொடுத்தால் அன்னையின் அருள் கிடைத்து, திருமணத் தடைகள் நீங்கும். சுக்கிரன் சுகத்துக்கு அதிபதி என்பதால், அன்னையை வழிபட்டால், சுகத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்பதால் தடைகளை அவரே நீக்கிவிடுவார்.
அதேபோல, சிவனுக்கு நல்லெண்ணெய், மா பொடி, திரவிய பொடி, மஞ்சள் பொடி, பஞ்சாமிர்தம், தேன்,பால், தயிர், பழவகைகள், இளநீர், சந்தனம் விபூதி ஆகியவற்றால் வெள்ளிக்கிழமைகளில் அபிஷேகம் செய்வதால் சுக்கிரன் பலம் பெறுவார். பலம் பெற்ற சுக்கிரன் நன்மைகளைச் செய்வார். ஒருவரின் ஜாதகத்தில் வேறு எந்த கிரகம் சற்று பலவீனமடைந்திருந்தாலும், சுக்கிரனின் அருள் பெற லட்சுமியை பூஜிப்பது அவரை மனம் மகிழச் செய்து நன்மைகளை பெற்றுத் தரும்.
மனதில் இருந்த சோர்வு நீங்கி புதிய முயற்சிகள் குறித்த எண்ணங்கள் அதிகரிக்கும். குழந்தைகளால் ஏற்படும் விரயங்கள் குறைய பாலமுருகனுக்கு வெள்ளிக்கிழமையில் பஞ்சாமிர்த அபிஷேகம் செய்வது நல்லது.. குடும்பத்தில் மற்றவர்களின் தலையீடுகளை குறைக்க விரும்புபவர்கள், கணபதிக்கு அருகம்புல் சாற்றி மோதகம் நைவேத்தியம் செய்யவும். முருகனுக்கும், விநாயகருக்கும் செய்யும் இந்த பூஜைகள், குழந்தைகளால் மனமகிழ்ச்சியை ஏற்படுத்தும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | ராகுவின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்... உச்சம் தொடுவார்கள்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ