பூரி ஜகந்நாதரின் ரதோத்சவ சிறப்பு! வணங்கினால் 100 யாகங்கள் செய்த புண்ணியம் கிடைக்கும்!

Puri Rath Yatra 2024 : பூரி ஜெகந்நாதன் கோவில் ரத யாத்திரை உலகம் முழுக்க பிரபலமானது. பூரியில் உள்ள ஜெகநாதர் கோயிலில் இருந்து மதுராவில் உள்ள குண்டிச்சி தேவி கோயிலுக்கு செல்லும்  இந்தப் பயணம் ஜகன்னாத் பூரி ரத யாத்திரை என்று அழைக்கப்படுகிறது.

இந்த ஆண்டு ஜூலை ஏழாம் தேதியன்று நடைபெறவிருக்கும் பூரி ரத யாத்திரையில் கலந்துக் கொண்டால், 100 யாகங்கள் செய்த பலன் கிடைக்குமாம்...

1 /8

பூரி ரத யாத்திரை 2024 ஜூன் 29 ஆம் தேதி தொடங்கி ஜூலை 7 ஆம் தேதி வரை கோலாகலமாக கொண்டாடப்படவிருக்கிறது. கோவிலில் இருக்கும் சிலைகள் இந்த யாத்திரையில் ரதத்தில் கொண்டு செல்லப்படுகின்றன. இந்த ஊர்வலத்தில் அனைத்து மதங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்தவர்கள் தெய்வங்களைக் காண்பதற்காக ஊர்வலத்தில் பங்கேற்கலாம். பூரி ரத யாத்திரையில் ஒவ்வொரு ஆண்டும் 4-5 லட்சம் யாத்ரீகர்கள் கலந்துக் கொள்கின்றனர்

2 /8

ஜகந்நாதர் தனது சகோதரர் பல்ராம் மற்றும் சகோதரி சுபத்ராவுடன் தேரில் அமர்ந்து நகர உலா செல்கிறார். சகோதர சகோதரிகள் செல்லும் மூன்று தேர்களின் சிறப்புகளை இன்று தெரிந்து கொள்வோம்.  

3 /8

மூன்றில், ஜகந்நாதரின் தேரின் பெயர் 'நந்திகோஷ்'. இந்த தேர் சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் உள்ளது.சுபத்ரா தேவியின் தேர், கருப்பு மற்றும் சிவப்பு நிறத்தில் இருக்கும். அண்ணன் பல்ராம் 'தலத்வாஜ்' என்ற பெயருடைய சிவப்பு மற்றும் பச்சை நிறத் தேரில் அமர்ந்திருக்கிறார்

4 /8

ஜகந்நாதர் மற்றும் அவரது சகோதர சகோதரிகளின் தேர்களில் ஆணிகள் போடப்படுவதில்லை. இந்த தேர்களை தயாரிப்பதில் எந்த உலோகமும் பயன்படுத்தப்படவில்லை. இந்த தேர்கள் வேப்ப மரத்தில் மட்டுமே செய்யப்படுகின்றன.

5 /8

ஜகந்நாதரின் தேரில் மொத்தம் 16 சக்கரங்கள் உள்ளன. இந்த தேர் அண்ணன் பல்ராம் மற்றும் சகோதரி சுபத்ராவின் தேர்களை விட சற்று பெரியது.

6 /8

யாத்திரை நாளில், கோவிலிலிருந்து சிலைகளை வெளியே கொண்டு வருவதற்காக, ஒரிசாவின் அரச குடும்பத்தைச் சேர்ந்த பூரியின் ராஜா, தேரை ஒரு தங்க கைப்பிடி கொண்ட விளக்குமாறு கொண்டு தேரை சுத்தப்படுத்துவார். பின்னர் தேர்களுக்கு முன்பாக நிலத்தை துடைத்து, சந்தன நீரை தெளிப்பார். இது சேர பஹாரா எனப்படும் யாத்ராவின் புகழ்பெற்ற சடங்கு ஆகும்

7 /8

இறைவனின் பார்வையில் அனைவரும் சமம் என்பதை உணர்த்தவே, மன்னர் தூய்மைப் பணியில் ஈடுபடுகிறார் என்று சொல்வதுண்டும். கோவிலில் இருந்து தேர்களில் சிலைகளை வைப்பதற்கே இரண்டு மணிநேரம் ஆகும்

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் பொதுவானவை.  பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், நம்பிக்கைகளின் அடிப்படையில் எழுதப்பட்ட இந்தக் கட்டுரைக்கு ஜீ நியூஸ் பொறுப்பேற்காது