சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அன்னை லட்சுமியின் அருள் மழை

Sukran Peyarchi Palangal: கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jul 2, 2024, 05:19 PM IST
  • கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களை அளிக்கும்.
  • ஆளுமையில் முன்னேற்றம் காணப்படும்.
  • வருமானம் அதிகரிக்கும்.
சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகள் மீது அன்னை லட்சுமியின் அருள் மழை title=

Sukran Peyarchi Palangal: சாஸ்திரத்தின் படி கிரகங்களுக்கும் ராசிகளுக்கும் நேரடி தொடர்பு உள்ளது. ஜோதிட சாஸ்திரத்தில் அனைத்து கிரகங்களுக்கும் ஒரு குறிப்பிட்ட முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது. கிரகங்களில் ஏற்படும் மாற்றங்கள் ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்களையும், தீய விளைவுகளையும் ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. அனைத்து கிரகங்களும் ஒரு குறிப்பிட்ட காலத்தில் தங்கள் ராசிகளை மாற்றுகின்றன. இவற்றுக்கு தனித்துவமான சிறப்புகளும்  உள்ளன. கிரக மாற்றங்கள் கிரக பெயர்ச்சிகள் என அழைக்கப்படுகின்றன. இந்த கிரக பெயர்ச்சிகளின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படுகின்றது. 

சுக்கிரன் சுகமான வாழ்க்கை, காதல், திருமணம், குழந்தைகள், செழிப்பு, செல்வம் ஆகியவற்றின் காரணி கிரகமாக கருதப்படுகிறார். பல வித மகிழ்ச்சியையும், செழுமையையும் தருபவர் சுக்கிரன். அவர் தற்போது மிதுன ராசியில் இருக்கிறார். ஜூலை முதல் வாரத்தில் சுக்கிரன் கடக ராசியில் பெயர்ச்சி ஆகவுள்ளார். ஜூலை 7 ஆம் தேதி சுக்கிரன் கடக ராசியை அடையும் போது பல சுப பலன்கள் ஏற்படும். சுக்கிரன் ஜூலை 30 ஆம் தேதி வரை இந்த ராசியில் இருப்பார். கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் ஏற்படும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

மேஷம் (Aries):

மேஷ ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி சுகபோகங்கள் மற்றும் வசதிகளை அள்ளித் தரும். குடும்பத்தில் யாரிடமாவது மனக்கசப்பு இருந்தால், அது இந்த காலத்தில் தீரும். உங்கள் வாழ்க்கைத் துணையுடன் தரமான நேரத்தை செலவிடும் வாய்ப்பு உங்களுக்கு கிடைக்கும். உங்கள் தாயின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றத்தைக் காண்பீர்கள். உங்கள் உடல் நிலையும் நன்றாக இருக்கும். ரியல் எஸ்டேட் தொழிலில் ஈடுபட்டுள்ள மேஷ ராசிக்காரர்களுக்கு இப்போது லாபம் அதிகரிக்கும். பெரிய ஒப்பந்தங்கள் மூலம் நல்ல வருமானம் கிடைக்கும்.

மேலும் படிக்க | பூரி ஜகந்நாதரின் ரதோத்சவ சிறப்பு! வணங்கினால் 100 யாகங்கள் செய்த புண்ணியம் கிடைக்கும்!

கடகம் (Cancer)

கடகத்தில் சுக்கிரன் பெயர்ச்சி கடக ராசிக்காரர்களுக்கு மிகவும் சிறப்பான பலன்களை அளிக்கும். ஆளுமையில் முன்னேற்றம் காணப்படும். வருமானம் அதிகரிக்கும். இதன் மூலம் எதிர்காலத்திற்காக சேமிக்க முடியும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும். மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். உங்கள் பேச்சின் மூலம் மற்றவர்களை ஈர்ப்பதில் வெற்றி காண்பீர்கள். 

துலாம் (Libra)

துலா ராசியின் அதிபதி சுக்கிரன். ஆகையால் துலாம் ராசிக்காரர்களுக்கு சுக்கிரன் பெயர்ச்சி அதிக நற்பலன்களை அளிக்கும். வியாபாரம் செய்பவர்கள் நல்ல வெற்றியைப் பெறுவார்கள். வேலை செய்பவர்கள் தங்கள் கடின உழைப்பின் முழு பலனைப் பெறுவார்கள். ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். குழந்தைகள் மூலம் நல்ல செய்தி கிடைக்கும். வனிகர்களுக்கு லாபம் அதிகரிக்கும். வேலையில்லாமல் இருக்கும் துலா ராசிக்காரர்களுக்கு இப்போது நல்ல வேலை கிடைக்கும். வாழ்வில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | ராகுவின் மிகப்பெரிய மாற்றம்: இந்த ராசிகளுக்கு கொண்டாட்டம்... உச்சம் தொடுவார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News