Daily Horoscope In Tamil: ஒவ்வொரு ராசிகளும் ஒருவரின் ஆளுமையை நிர்ணயிக்கும் அளவுக்கு சொந்த குணாதிசயங்கள் மற்றும் பண்புகள் இருக்கின்றன. இன்றைய தினம் உங்களுக்கு என்ன நடக்கப் போகிறது என்பது குறித்து நீங்கள் முன்னரே தெரிந்துகொண்டால், இன்றைய தினத்தை அதற்கு ஏற்ற வகையில் சிறப்பாக அமைத்துக்கொள்ளலாம். அந்த வகையில், இன்றைய தினம் உங்களுக்கு சாதகமாக இருக்குமா என்பது குறித்து இங்கு காணலாம். 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேஷம்


மேஷ ராசிக்காரர்களுக்கு இன்று சுபமான நாளாக அமையும். நீங்கள் உங்களின் பழைய கடன்களை சிலவற்றை வட்டியுடன் திருப்பி கொடுத்து நலம் அடைவீர்கள். நீண்ட காலமாக கிடப்பில் இருக்கும் பணிகளும் இன்று முடிவடையலாம்.


ரிஷபம்


ரிஷப் ராசிக்காரர்களாகிய நீங்கள் இன்று நண்பர்கள் யாராவது உங்களிடம் கடன் கேட்கலாம். அப்படி கேட்கும்பட்சத்தில் நன்கு சிந்தித்துவிட்டு கடன் அளிக்க வேண்டும். இன்றைய தினம் நீங்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். இன்று நீங்கள் ஆரோக்கியம் சார்ந்தும் கவனமாக இருக்க வேண்டும். வயிறு சம்பந்தமான சில பிரச்சனைகள் வரலாம் ஜாக்கிரதை.


மிதுனம்


மிதுன ராசிக்காரர்களாகிய உங்களுக்கு குடும்பத்தில் ஏதேனும் பிரச்னை இருந்தால் அதற்கு தீர்வு காணப்படும். பெற்றோரை கவனப்பதற்கும் இன்று நேரம் ஒதுக்குவீர்கள். உங்களின் பணி சார்ந்த பதவி மற்றும் நற்பெயர் இன்ரு அதிகரிக்கலாம்.


மேலும் படிக்க | கிரகங்களின் ராஜா மிதுன ராசியில் நுழைவதால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள் யார்?


கடகம் 


கடக ராசிக்காரர்களாகிய நீங்கள் இன்று பணியிடத்தில் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில் உங்கள் வேலை மற்றவர்களால் ஆபத்திற்கு உள்ளாக்கப்படலாம். மற்றப்படி பார்த்தோமானால், இன்று உங்களுக்கு ஒரு சாதாரண நாளாகவே இருக்கும். 


சிம்மம்


சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று பண விஷயத்தில் மிகுந்த நல்ல நாளாக இருக்கும். நீங்கள் நீண்ட காலத்திற்கு முன் கொடுத்திருந்த கடன் இன்று வட்டியுடன் உங்கள் கைக்கு வரலாம். இருப்பினும் நீங்கள் முதலீடுகளை இன்று மேற்கொள்ளும்போது கவனமாக இருக்கவும், இல்லையெனில் சிக்கல் வர வாய்ப்புள்ளது. 


கன்னி


கன்னி ராசிக்காரர்களுக்கு இன்று நல்ல நாள் ஆகும், குறிப்பாக வேலைக்கு செல்வோருக்கு சுபதினமாக இருக்கும்.
பணியில் ஒரு பெரிய ஒப்பந்தம் இன்று உறுதி செய்யப்படலாம். ஒரு சிலர் இன்று சுற்றுலா செல்லவும் வாய்ப்புள்ளது


துலாம்


துலாம் ராசிக்காரர்கள் உங்களின் உடல் ஆரோக்கியம் குறித்து கவனமாக இருக்க வேண்டும். இந்த விஷயத்தில் நீங்கள் கவனக்குறைவாக இருந்தால் நீண்ட கால பிரச்சனைகளை சந்திக்க நேரிடலாம். இன்று ஆன்மீகம் சார்ந்த நிகழ்ச்சிகளில் நீங்கள் பங்கேற்கலாம்.


மேலும் படிக்க | வீட்டில் செல்வம் நிலைக்கவேண்டுமா? அன்னை லட்சுமியின் அருள் பெற சுலப வழிகள்!


விருச்சிகம்


விருச்சிக ராசிக்காரர்களின் காதல் வாழ்க்கை இன்று சிறப்பாக இருக்கும். நீங்கள் அவசரப்பட்டு எந்த ஒரு வேலையும் செய்ய வேண்டாம். ஒருவேளை நீங்கள் இன்று எங்காவது பயணித்தீர்கள் என்றால், வாகனத்தை ஓட்டுவதில் கூடுதல் கவனம் தேவை.


தனுசு


தனுசு ராசிக்காரர்களுக்கு இன்று செலவு அதிகமாக இருக்கும். உங்களை வேலையில் இருந்து தூக்க உங்களின் எதிரிகள் இன்று முயற்சிக்கலாம். அதை முடிந்தவரையில் முறியடிக்க முயற்சியுங்கள். 


மகரம்


மகர ராசிக்காரர்களுக்கு இன்று பண வரவு அதிகமாக இருக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு இன்று நல்ல நாளாக இருக்கும். குறிப்பாக, வேலை தேடுபவர்களுக்கு இன்று நல்ல செய்தி காத்திருக்கிறது. 


கும்பம்


கும்ப ராசிக்காரர்களாகிய நீங்கள் இன்று எந்தவொரு பரிவர்த்தனையை செய்தாலும் மிக மிக கவனமாக இருக்க வேண்டும். அந்த விஷயத்தில் நீங்கள் மிகவும் நியாயமான முறையில் செயல்பட வேண்டும். மற்றபடி இன்று உங்களுக்கு எவ்வித பிரச்னையும் இல்லை, இன்று உங்களுக்கு ஒரு வரப்பிரசாதமான நாள்தான். 


மீனம்


மீன ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்றைய தினம் மகிழ்ச்சிகரமாக இருக்கும். இன்று உங்களுக்குப் பிடித்தமான உணவைச் சாப்பிடலாம். இன்று நீங்கள் ஒரு சுப நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ளும் வாய்ப்புள்ளது.


மேலும் படிக்க | பித்ரா தோஷம் போக்கும் வைகாசி அமாவாசை திதி..! 4 பரிகாரங்கள் - அற்புத பலன்கள் உண்டு


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ