கிரகங்களின் ராஜா மிதுன ராசியில் நுழைவதால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள் யார்?

Tamil Month Rasipalan From June 15: சூரியன் ரிஷப ராசியில் இருந்து மிதுன ராசிக்கு பெயர்ச்சி அடையும்போது உருவாகும் ஆனி மாதம் மிக சிறப்பான மாதமாக அமையும் என ஜோதிட கணிப்பு கூறுகிறது...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 2, 2024, 07:30 PM IST
  • ஆனி மாத ராசிபலன்கள்
  • சூரியப் பெயர்ச்சி பலன்கள்
  • ஜூன் 15 முதல் ராசிபலன்கள்
கிரகங்களின் ராஜா மிதுன ராசியில் நுழைவதால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள் யார்? title=

Rasipalan June 15 - July 15 : ஜோதிட சாஸ்திரத்தின்படி, சூரியன் மாதத்திற்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். மே மாதம் ரிஷப ராசியில் சூரிய பகவான் பிரவேசித்த நிலையில், ஒரு மாதம் கழித்து மீண்டும் ​​சூரியன் பெயர்ச்சியாகிறார். மிதுனத்தில் இருந்து ராசி மண்டலத்தை வழிநடத்தும் சூரிய பகவான், சில ராசிக்காரர்கலுக்கு வாழ்வில் வளத்தைக் கொடுப்பார்.

மேஷ ராசியில் இருந்து ரிஷபம் ராசிக்கு சஞ்சரித்தபோது, சித்திரை மாதத்தை உருவாக்கி, அதன் பிறகு ஜூன் 14 வரை ரிஷப ராசியில் இருந்து வைகாசி மாதத்தை உருவாக்கிய சூரியனின் ஜூன் 15ம் தேதி பெயர்ச்சி ஆனி மாதத்தை உருவாக்கப் போகிறது. சூரியனின் இந்த மிதுன ராசி மாற்றத்தால் எந்தெந்த ராசிக்காரர்களுக்கு நல்ல காலம் பிறக்கும்? தெரிந்து கொள்வோம்.

மிதுன ராசியில் நுழையும் சூரியன், 3 ராசிக்காரர்களுக்கு நல்ல அதிர்ஷ்டத்தைக் கொடுத்து வாழ்க்கையில் அவர்களுக்கு மரியாதையையும் மதிப்பையும் கூட்டித்தருவார். கிரகங்களின் ராஜா மிதுன ராசியில் நுழைவதால் ராஜவாழ்க்கை வாழப்போகும் ராசிக்காரர்கள் யார் என்பதைத் தெரிந்துக் கொள்வோம்.

மேலும் படிக்க | சேரும் இடம் பொருத்து செல்வத்தை சேர்த்து வழங்கும் ராகு பகவான்! போகக் காரகர் ராகு!

மிதுன ராசியில் சூரியப் பெயர்ச்சி

மிதுன ராசிக்காரர்கள்

நம்பிக்கை மற்றும் ஆற்றலுக்கு காரணமான சூரியன் மிதுன ராசிக்குள் நுழைவதால், அந்த ராசிக்காரர்களுக்கு நல்ல பலன்கள் கிடைக்கும். மிதுன ராசிக்காரர்களுக்கு சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கி நிம்மதி பிறக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு திருமணத்திற்கான வாய்ப்புகள் உருவாகும். வேலை பார்ப்பவர்களின் சம்பளம் உயரும், பதவி உயர்வு கிடைக்கும். தொழிலதிபர்களுக்கும் நேரம் நன்றாக இருக்கும், முதலீடுகளால் நல்ல லாபம் கிடைக்கும்.

சிம்ம ராசிக்காரர்கள்
சிம்ம ராசிக்காரர்களுக்கு மிதுனத்தில் சூரியனின் சஞ்சாரம் நன்மை பயக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். வருமானத்திற்கான புதிய ஆதாரங்கள் உருவாகும். வியாபாரம் செய்பவர்கள் தங்கள் தொழிலை விரிவுபடுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தற்போது செய்யும் முதலீடுகளில் நல்ல லாபத்தைப் பெறலாம். படிப்பதற்காக வெளிநாடு செல்வதற்கு முயற்சி செய்பவர்களுக்கு நேரம் சாதகமாக இருக்கும்.

மேலும் படிக்க | சுக்கிரன் எந்த லக்கினத்தில் இருந்தால் நன்மை? எந்த லக்கினத்தில் இருந்தால் ஆபத்து?

கன்னி ராசிக்காரர்கள்
கன்னி ராசிக்காரர்களுக்கு சூரியனின் ராசி மாற்றம் சிறப்பாக இருக்கும் என்பதுடன், வேலையில் இருந்த பிரச்சனைகள் நீங்கும். ஆனி மாதத்தில் பணிபுரிபவர்கள் இடமாற்றமும் ஏற்படலாம். இடமாற்றத்துடன் பதவி உயர்வும் கிடைக்கலாம். பல நாட்களாக படுத்தி எடுத்த வலிகளில் இருந்து பூரணமாக குணம் கிடைக்கும். திருமண வாழ்வில் இருந்த பிரச்சனைகள் முடிவுக்கு வருவதால், வாழ்க்கை நிம்ம்மதியாக இருக்கும். 

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வீட்டில் செல்வம் நிலைக்கவேண்டுமா? அன்னை லட்சுமியின் அருள் பெற சுலப வழிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News