சுக்கிரனின் ராசி மாற்றம் யாருக்கு கொண்டாட்டம்? அந்த ‘நாலு பேருக்கு’ பணமழை பொழியும்!

Venus Transit In June: சுக்கிரன், ஜூன் 12ம் நாளன்று மிதுன ராசிக்கு பெயர்வதால் ஏற்படும் மாற்றத்தில், அமோகமாக வாழப்போகும் 4 ராசிக்காரர்கள்...

Written by - Malathi Tamilselvan | Last Updated : Jun 2, 2024, 08:57 PM IST
  • வைகாசி மாத சுக்கிரப் பெயர்ச்சி
  • நேர் திசையில் மட்டுமே பயணிக்கும் சுக்கிரன்
  • சுக்கிரனின் ராசி மாற்றம் யாருக்கு கொண்டாட்டம்?
சுக்கிரனின் ராசி மாற்றம் யாருக்கு கொண்டாட்டம்? அந்த ‘நாலு பேருக்கு’ பணமழை பொழியும்! title=

Sukran Nakshatra Peyarchi Palangal: அவ்வப்போது கிரகங்களின் ராசி மாற்றம் நடைபெறுவது இயல்பானது தான். கிரகங்களின் ராசி மாற்றம், இயக்கம், எதிர்திசையில் பயணிப்பது என சிறிய அளவிலான மாற்றங்களும் அனைத்து ராசியினரையும் பாதிக்கும். பாதிப்பு என்பது ஆக்கப்பூர்வமாகவும் இருக்கலாம், எதிர்மறையாகவும் இருக்கலாம். ஜோதிட கணிப்புகளின்படி, இன்னும் பத்து நாட்களில் நடைபெறவிருக்கும் சுக்கிரன் பெயர்ச்சியால் 4 ராசிகளுக்கு அற்புதமான பலன்கள் ஏற்படவிருக்கின்றன.  

பெண்பால் கிரகமான சுக்கிரன், 2024 ஜூன் 12ம் நாளன்று மிதுன ராசிக்கு பெயர்கிறது. காதல் மற்றும் திருமணத்தை குறிக்கும் இந்த பெண் கிரகத்தின் சஞ்சார மாற்றம் பலருக்கும் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒருவரின் வாழ்க்கையில் மகிழ்ச்சியாக வாழ்வதற்கு காரணமாக இருக்கும் சுக்கிரன், ஒருவரின் ஜாதகத்தில் இருக்கும் இடத்தைப் பொறுத்து பலன்களை கூட்டியும், குறைத்தும் கொடுப்பார்.

ஜாதகத்தில் சுக்கிரன் வலுவாக இருந்தால், வாழ்க்கையில் திருப்தி, ஆரோக்கியம் மற்றும் மன உறுதி நிச்சயமாக இருக்கும். ஜாதகத்தில் சுக்கிரன் வலுப்பெற்றிருந்தால், சுகபோகங்கள் அதிகரிக்கும். சமூகத்தில் பிரபல்யமும், பலருக்கு உதவி செய்யும் மனமும் வாய்க்கும்.

மேலும் படிக்க | சுக்கிரன் எந்த லக்கினத்தில் இருந்தால் நன்மை? எந்த லக்கினத்தில் இருந்தால் ஆபத்து?

சுக்கிரனின் ராசி மாற்ற பலன்கள்

மேஷ ராசிக்காரர்கள்

மேஷ ராசிக்காரர்களுக்கு சாதகமாக இருக்கப்போகும் சுக்கிரனின் சஞ்சாரத்தினால், வேலையில் கவனம் அதிகரிக்கும், பணியில் திருப்தியும் பதவி உயர்வும் கிடைக்கும். வாழ்க்கைத் துணையுடனான உறவு நெருக்கமாகும். குடும்பத்தில் பாசப்பிணைப்பு அதிகமாகும். காதலர்களுக்கு இனிமையான காலமாக இருக்கும்.  

கன்னி ராசிக்காரர்கள்

சுக்கிரனின் ராசி மாற்றமானது, கன்னி ராசிக்காரர்களுக்கு அற்புதமான காலமாக இருக்கும். சமூகத்தில் மரியாதை அதிகரிக்கும். திருமண வாழ்க்கையில் இருந்த பிரச்சனைகள் அனைத்தும் நீங்கும். பணி புரிபவர்களுக்கு பதவி உயர்வு கிடைக்கும். மாணவர்களுக்கு நேரம் நன்றாக இருக்கும், முதலீடுகளில் இருந்து லாபம் பார்க்கும் காலம் இது.

கடக ராசிக்காரர்கள்
கடக ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் வைகாசி மாத சஞ்சாரம் நன்மை பயக்கும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் ஏற்படும். தொழிலை விரிவுபடுத்துவதற்கான காலம் இது. முதலீடுகளில் இருந்து லாபத்தைப் பெறலாம். சமூகத்தில் அந்தஸ்து உயரும், பொறுப்புகளும் பதவி உயர்வும் வந்து சேரும் காலம் இது.

தனுசு ராசிக்காரர்கள்
தனுசி ராசிக்காரர்களுக்கு சுக்கிரனின் பெயர்ச்சி சிறப்பாக இருக்கும். ஆனி மாதத்தில் நடைபெறும் இந்த சுக்கிரப் பெயர்ச்சி, சொந்த வீடு வாங்குவதற்கான எண்ணத்தை ஏற்படுத்தும். திருமண வாழ்வு சுகிக்கும், காதலர்களின் காதல் திருமணத்தில் வந்து முடியும்.  

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | வீட்டில் செல்வம் நிலைக்கவேண்டுமா? அன்னை லட்சுமியின் அருள் பெற சுலப வழிகள்!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News