வீட்டில் செல்வம் நிலைக்கவேண்டுமா? அன்னை லட்சுமியின் அருள் பெற சுலப வழிகள்!

Ways To Please Mahalakshmi: நம் வீட்டில் செல்வம் நிலைக்கவும், அது மேன்மேலும் விருத்தியடையவும், அன்னை லட்சுமியை எப்படியெல்லாம் வணங்கலாம் என்பதைத் தெரிந்துக் கொள்ளுங்கள்.  

பணம் கொடுக்கல் வாங்கல் மட்டுமல்ல, வேறு சில விஷயங்களையும் கவனத்தில் வைத்து செயல்பட்டால், லட்சுமி கடாட்சம் உங்கள் வீட்டில் நிறைந்திருக்கும்.  

1 /8

மகாவிஷ்ணுவையும், விஷ்ணுபத்னி லக்ஷ்மி அன்னையையும் வணங்கினால் நாம் கேட்கும் வரங்கள் அனைத்தும் கிடைக்கும் என்பது ஐதீகம். ஒருவர் செல்வ செழிப்புடன் வாழ இவர்கள் இருவரின் அருள் அவசியம்

2 /8

வீட்டிற்கு வெளிச்சம் தந்துக் கொண்டிருக்கும் குத்துவிளக்கை தானாக அணையவிடக்கூடாது, விளக்கை ஊதியும் அணைக்ககூடாது. புஷ்பத்தினால் அணைக்கவேண்டும்

3 /8

காலையில் வெங்கடேச சுப்ரபாதமும், மாலை வேளைகளில் விஷ்ணு சஹஸ்ரநாமமும் படித்துவந்தால் செல்வச் செழிப்பு தாமாகவே வந்துவிடும்.

4 /8

வீட்டில் நெல்லிக்காய் மரம் இருந்தால் லக்ஷ்மி கடாக்ஷம் அந்த வீட்டில் நிலைத்திருக்கும். நெல்லிமரம் விஷ்ணுவின் அம்சமாக. இந்த மரத்தில் மகாலக்ஷ்மி வாசம் செய்கிறாள்.குபேரருக்கும் உரிய மரமான நெல்லிமரம் இருக்கும் வீட்டில் கடவுள் அருள் நிறைந்திருக்கும்.  

5 /8

பூரண கும்பம், மஞ்சள், குங்குமம், திருமண், சூர்ணம், கோலம், சந்தனம், வாழை, மாவிலைத் தோரணம், வெற்றிலை, திருவிளக்கு போன்றவை லட்சுமிக்கு பிடித்தமானவை

6 /8

வீட்டில் துளசி மாடம் வைத்து அதனை வணங்கி வருவது நல்லது

7 /8

பெண்கள் மரியாதையுடன் நடத்தப்படும் இடங்களில், பெண்களின் சிரிப்பொலி கேட்கும் இடத்திலும் திருமகள் குடியேறுவாள்.

8 /8

பொறுப்புத் துறப்பு: இந்தக் கட்டுரையில் உள்ள எந்தவொரு தகவல், உள்ளடக்கம், கணிப்பு ஆகியவற்றின் துல்லியம் அல்லது நம்பகத்தன்மைக்கு உத்தரவாதம் இல்லை. இந்தத் தகவல் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ஜீ நியூஸ் - Zee News இதற்கு பொறுப்பேற்காது