சனி உதயம் 2023: ஜோதிட சாஸ்திரத்தின்படி, எந்த ஒரு கிரகம் சூரியனுக்கு அருகில் சென்றாலும், அந்த கிரகம் அஸ்தமனம் ஆகிறது. அஸ்தமன நிலையில், ஒரு கிரகத்தின் பலம் குறைந்து அசுப பலன்களைத் தரத் தொடங்குகிறது. இதன் காரணமாக அஸ்தமன நிலையில் இருக்கும் கிரகத்தின் அமைப்பு நல்லதாக கருதப்படுவதில்லை. திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ஜனவரி மாதம் பெயர்ச்சியான சனி தற்போது அஸ்தமன நிலையில் உள்ளது. மார்ச் 6, 2023 அன்று சனி உதயமாக உள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மறுபுறம், மார்ச் 8 ஆம் தேதி, புதன்கிழமை நாடு முழுவதும் ஹோலி பண்டிகை கொண்டாடப்படும். இவ்வாறு ஹோலிக்கு முன் சனி எழுந்தருளுவது மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகின்றது. சனியின் உதயம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், குறிப்பாக சில ராசிக்காரர்களுக்கு சனி உதயம் அதிகப்படியான சுப பலன்களை அளிக்கும். 


சில ராசிக்காரர்கள் மீது சனி உதயத்தின் சுப பலன்


சனி 31 ஜனவரி 2023 அன்று அஸ்தமனமானது. இனி, சனி பகவான் மார்ச் 5, 2023 அன்று, உதயமாகி, சில ராசிக்காரர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்திற்கான கதவுகளைத் திறப்பார்.


ரிஷபம்: 


ரிஷபம் ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை சனியின் உதயம் பிரகாசமாக்கும். இவர்களின் தடைப்பட்ட வேலைகள் நடக்க ஆரம்பிக்கும். புதிய வேலையில் சேர வாய்ப்பு கிடைக்கும். வருமானத்தில் உயர்வு இருக்கும். பெரிய வெற்றிகளை எளிதாக அடைவீர்கள். இந்த காலத்தில் திருமணம் நிச்சயிக்கப்படலாம்.


மேலும் படிக்க | மாசி மாத ராசிபலன்கள்! மேஷத்திற்கு மகுடம் சூட்டும் கும்ப ராசியில் சூரிய சஞ்சாரம்!


சிம்மம்: 


ஜோதிட சாஸ்திரப்படி சிம்ம ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் நன்றாக இருக்கும். இவர்கள் பெரும் நிதி நன்மைகளைப் பெறுவார்கள். பொருளாதார நிலை சிறப்பாக இருக்கும். வங்கி இருப்பு அதிகரிக்கும். ஆரோக்கியம் நன்றாக இருக்கும். சனி பகவானை வழிபட்டால் அனைத்து காரியங்களிலும் வெற்றி கிடைக்கும்.


துலாம்: 


துலாம் ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் பெரும் பலன்களைத் தரும். இதுவரை இருந்த பிரச்னைகள் நீங்கும். பணியிடத்தில் உங்கள் செயல்திறன் சிறப்பாக இருக்கும். கடனில் இருந்து விடுதலை கிடைக்கும். பண வரவு சாதகமாக இருக்கும். உத்தியோகத்தில் பொன்னான வாய்ப்புகள் அமையும்.


கும்பம்: 


சனியின் உதயம் கும்ப ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தை அள்ளித் தரவுள்ளது. இவர்களின் வருமானம் அதிகரிக்கும். செலவுகள் அதிகரிக்கும் என்றாலும், கூடுதல் வருமானம் வரும் என்பதால் செலவுகளால் பாதிப்பு ஏற்படாது. இந்த காலத்தில் ஆரோக்கியம் மேம்படும். முதலீடும் நன்மை தரும். இப்போது செய்யும் முதலீடுகள் எதிர்காலத்தில் நல்ல லாபங்களை அள்ளித் தரும். 


(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | குரு பெயர்ச்சி 2023: இந்த ராசிகள் மீது அதிர்ஷ்ட மழை, குரு பார்வையால் குபேர யோகம்!!


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ