சனி உதயம், ராசிகளில் அதன் தாக்கம்: வேத ஜோதிடத்தில், ஒவ்வொரு கிரகமும் ஒரு ராசியுடன் தொடர்புட்டையதாக உள்ளது. அனைத்து கிரகங்களின் கிரக மற்றும் ராசி மாற்றங்களும் அனைத்து ராசிகளிலும் தாக்கங்களை ஏற்படுத்துகின்றன. கிரகங்களில் மிக முக்கியமான கிரகமாக கருதப்படும் சனி பகவான், திருக்கணித பஞ்சாங்கத்தின் படி, ஜனவரி மாதம் 17 ஆம் தேதி பெயர்ச்சியானார். அவர் தற்போது அஸ்தமன நிலையில் உள்ளார். மார்ச் மாதம் சனி உதயமாகிறார்.
சனியின் உதயம் அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தும். எனினும், மூன்று ராசிக்காரர்களுக்கு இது அதிகப்படியான நற்பலன்களை அளிக்கும். சனியின் அருளால் இந்த காலத்தில் திருமணமாகாத பலருக்கு திருமணம் நிச்சயமாகலாம்.
மார்ச் மாத தொடக்கத்திலேயே சனிபகவான் கும்ப ராசியில் உதயமாகி, ஷஷ மகாபுருஷ ராஜயோகத்தை உருவாக்குவார். இந்த செல்வ யோகம் மூன்று ராசிக்காரர்களுக்கு பொருளாதார மகிழ்ச்சியை அள்ளித்தரும். மேலும், இந்த ராசிகளில் திருமணத்துக்காக எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு திருமண யோகம் உண்டாகும். இதுமட்டுமின்றி சனியின் உதயத்தால் கும்பம், சிம்மம், ரிஷபம் ஆகிய ராசிக்காரர்கள் இந்தக் காலத்தில் வாழ்வில் அதிக முன்னேற்றம் காண்பார்கள்.
கும்பம்
கும்ப ராசிக்காரர்களின் பெயர்ச்சி ஜாதகத்தில் சனி ஷஷ ராஜயோகம் உருவாகிறது. இந்த யோகம் காரணமாக கும்ப ராசிக்காரர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும். திருமணம் ஆகாதவர்களுக்கு விரைவில் திருமணம் நிச்சயமாகி நடக்கும். லக்னத்தில் சனியின் உயர்வால் தன்னம்பிக்கை அதிகரித்து சிலர் உயர் பதவிகளையும் அடையலாம்.
மேலும் படிக்க | சூரியன்-சனி சேர்க்கை: அடுத்த 30 நாட்களுக்கு இந்த ராசிகள் ராஜவாழ்க்கை வாழ்வார்கள்
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்களின் ஜாதகத்தில் 7ம் வீட்டில் சஷ் மஹாபுருஷ ராஜ யோகம் உருவாகிறது. இதனால் வாகனம், சொத்து வாங்கும் யோகம் உண்டாகும். இதனுடன் இந்த காலத்தில் கூட்டுத்தொழில் செய்தால் அதிகப்படியான லாபம் காணலாம். வியாபாரத்தில் பெரிய பிராஜெக்ட், ஆர்டர் உங்களுக்கு கிடைக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனையுடன் எடுக்கும் முடிவுகள் பெரும் லாபத்தைத் தரும். உறவுகளில் வலிமை இருக்கும்.
ரிஷபம்
சனி உங்கள் ஜாதகத்தில் 10ம் வீட்டில் உதயமாகி இருப்பதால் தொழில் ரீதியாக இந்த காலம் ரிஷப ராசிக்காரர்களுக்கு சுபமாக இருக்கும். உங்களின் தைரியமும், வீரமும் அதிகரிக்கும். பணியிடத்தில் மரியாதை அதிகரிக்கும். வேலையில்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். திருமணமாகாதவர்களுக்கு திருமணம் நடக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு புதிய பெரிய ஆர்டர்கள் கிடைக்கும். இதனால் அதிக லாபம் கிடைக்கும். நிதி நிலை மேம்படும்.
(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)
மேலும் படிக்க | நல்ல காலம் பொறந்தாச்சு! 5 ராசிக்காரர்களில் வாழ்வு அமோகம்! பணமழையில் நனையலாம்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ