ரிஷபம் (Taurus)


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

தன்னடக்கத்துடன் இருக்கும் ரிஷப ராசிக்காரர்கள், தொழிலில் சிறந்தவர்களாகவும் இருப்பார்கள். பொதுவாக மற்றவர்களைப் பற்றி யோசிக்கமாட்டார்கள். ஆனால், யாரேனும் தூண்டிவிட்டால், ரிஷப ராசிக்காரர்களின் குணம் மிகவும் முரட்டுத்தனமாக இருக்கும். அமைதியாக இருந்திருக்கலாம் என தூண்டிவிட்டவர்கள் எண்ணுமளவிற்கு, அவர்களின் எதிர்வினை கடுமையாக இருக்கும். சூழ்நிலைகளை அறிந்து இவர்களுடன் விளையாடுவது நல்லது.


மேலும் படிக்க | 12 ஆண்டுக்குப் பிறகு சனி சுக்கிரன் சேர்க்கை, இந்த ராசிகளுக்கு புரமோசன் கிடைக்கும்


மேஷம் (Aries)


சௌகரியமான இடத்தில் இருக்க வேண்டும் என நினைக்கும் மேஷ ராசிக்காரர்களுக்கு மன வலிமையும், ஆர்வமும் மிகுதியாக இருக்கும். ஏதாவதொரு இடத்தில் தங்களுக்கு மரியாதை இல்லை என்று உணரும் தருணத்தில், அவர்கள் வெடித்தெழுந்துவிடுவார்கள். பொறுமையாக இருக்க எண்ணிணாலும், எல்லைமீறிம்பட்சத்தில் எதைப்பற்றியும் கவலைப்படமாட்டார்கள்.


மிதுனம் (Gemini)


சுறுசுறுப்புக்கு பெயர்பெற்ற மிதுன ராசிக்காரர்களிடம், முதிர்ச்சியை எதிர்பார்க்க முடியாது. உணர்வுகளையும் கட்டுபடுத்த தெரியாது. எதுவானாலும் வெட்டு ஒன்னு, துண்டு ரெண்டு என்ற ரீதியில் தான் அவர்களின் அணுகுமுறை இருக்கும். இதனால், சில இடங்களில் விவரம் தெரியாமல் பேசும் அவர்களின் வார்த்தைகள் மற்றவர்களை முகம் சுழிக்க வைக்கும். எந்த இடத்தில் எப்படி இருக்க வேண்டும் என்ற தெளிவு இருக்காது.


மேலும் படிக்க | மார்ச் மாதம் சனி உதயம்: சுத்தமா நல்லா இல்ல... இந்த ராசிகள் சூதானமா இருக்கணும்!!


விருச்சிகம் (Scorpio)


தேள் எப்படி நொடிப்பொழுதில் மற்றவர்களை காயப்படுத்துகிறதோ அதைப்போல் தான் விருச்சிக ராசிக்காரர்களும் இருப்பார்கள். தாங்கள் இருக்கும் இடத்தில் மனதில் பட்டத்தை சொல்லிவிடுவார்கள். மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? என்பதைப்பற்றி சிந்திக்க மாட்டார்கள். வார்த்தைகளும் கடுமையாக இருக்கும். சொல்லிய வார்த்தையை மறுபரிசீலனை செய்திருக்கலாமோ என்று ஒருபோதும் எண்ணமாட்டார்கள். நான் சொல்லியது சரி! என்ற அளவிலேயே இருப்பார்கள் என்பதால், முரட்டுதனமானவர் என எளிதில் பெயர் பெற்றுவிடுவார்கள்


தனுசு (Sagittarius)


அன்பாக இருக்கும் தனுசு ராசிக்காரர்களிடம் முரட்டுத்தனமும் அதே அளவில் இருக்கும். எந்த சூழ்நிலையிலும் தங்களின் எண்ணத்தை வெளிப்படையாக காட்டும் சுபாவம் இவர்களிடம் இருக்கும். இது மற்றவர்களின் பார்வையில் முரட்டுத்தனமாக தெரியும். தாங்கள் செய்த செயலுக்கு ஒருபோதும் வருந்தமாட்டார்கள். பிறர் மனதை காயப்படுத்தியிருக்கிறது என தெரிந்தாலும், அதனை பொருட்படுத்தமாட்டார்கள்.


மேலும் படிக்க | மேஷத்தில் இணையும் சுக்ரன் -ராகு! பங்குனியில் பிரச்சனைகளை சந்திக்கும் ‘சில’ ராசிகள்!


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.


Android Link: https://bit.ly/3hDyh4G


Apple Link: https://apple.co/3loQYeR