சனி அமாவாசை 2021: வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்க செய்ய வேண்டியவை..!!

ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வரும் என்றாலும்,  சனிக்கிழமையில் வரும் அமாவாசை சனாதன தர்மத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 2, 2021, 01:21 PM IST
சனி அமாவாசை 2021: வாழ்க்கையில் உள்ள சிக்கல்கள் நீங்க செய்ய வேண்டியவை..!! title=

சனி அமாவாசை 2021: சனி அமாவாசை 2021: ஒவ்வொரு மாதமும் அமாவாசை திதி வரும் என்றாலும்,  சனிக்கிழமையில் வரும் அமாவாசை சனாதன தர்மத்தில் மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. வாழ்க்கையில் ஏற்படும் சிக்கல்களில் இருந்து விடுபட, சனி அமாவாசை அன்று, சில குறிப்பிட்ட விஷயங்களை செய்தால் நல்ல பலன் கிடைக்கும் என்பது ஆன்மீக நம்பிக்கை ஆகும். 

இந்த முறை மார்கழி மாத அமாவாசை டிசம்பர் 4ஆம் தேதி அதாவது சனிக்கிழமை வருகிறது. சனி அமாவாசை 2021 அன்று, நீங்கள் கீழேஎ கொடுக்கப்பட்டுள்ளவைகளை செய்தால், உங்கள் வாழ்க்கையில் இருந்து சிக்கல் மேகங்கள் நீங்கும்.

அரச மரத்தை வணங்குங்கள்

அரச மரத்தில்  தெய்வங்களும், முன்னோர்களும் வசிக்கிறார்கள் என்ற ஆன்மீக நம்பிக்கை உள்ளது. எனவே, அமாவாசை தினத்தில் அரச வழிபாடு செய்வதன் மூலம் தெய்வங்களின் அருளும், முன்னோர்களின் அருளும் ஒரு சேர கிடைக்கும். அரச மரத்திற்கு நீர் வழங்கி அதை சுற்றி வர வேண்டும். இவ்வாறு செய்வதன் மூலம் சனி பகவான் மகிழ்ந்து உங்கள் கஷ்டங்களும் நீங்கும். உங்களுக்கு ஏழைரை நாட்டு சனி நடக்கிறது என்றால், அதன் பாதிப்பில் இருந்து விடுபடவும் இது உதவும்.

ALSO READ : வாழ்க்கையை புரட்டி போடும் ‘5’ தோஷங்களும், அதன் பரிகாரங்களும்..!! 

சனி அமாவாசை 2021 அன்று, கோவிலிலோ அல்லது திறந்த வெளியிலோ அரச மர கன்றை நடவும். இவ்வாறு செய்வதால் சனிதேவரின் மனம் மகிழ்ச்சி அடைவதாக கூறப்படுகிறது. அரச மரக் கன்றை நடுவதன் மூலம் ஜாதகத்தில் உள்ள சனி தோஷங்களும் நீங்கும்.

நாய்க்கு உணவளிக்கவும்

சனி அமாவாசை நாளில், நாய்க்கு உணவு கொடுக்க வேண்டும்,  எண்ணெயில் முகம் பார்த்த பிறகு, அதை தானம் செய்யலாம். சனி பகவான் சனி அமாவாசை நாளில் தேவைப்படும் ஒருவருக்கு உதவுவதன் மூலம் மகிழ்ச்சியடைந்து, ஆசிகளை வழங்குகிறார் என ஆன்மீக நம்பிக்கைகள் தெரிவிக்கின்றன.

ஹனுமனின் வழிபாடு

ஏழரை சனியின் பாதிப்பில் இருந்து தப்பிக்க, அனுமனை வணங்குவதும் அவசியம் என்று கருதப்படுகிறது. எனவே, சனி அமாவாசை நாளில், ஹனுமான் சாலிசா பாராயணம் செய்யலாம், அஹனுமன் மந்திரத்தையும் உச்சரிக்கவும். இந்த பரிகாரத்தின் மூலம்,  உடல், மன மற்றும் நிதி சிக்கல்களில் இருந்து விடுபடலாம். 

ALSO READ | அடுத்த 13 நாட்களுக்கு அன்னை லட்சுமியின் கடைக்கண் பார்வை பெறும் 5 ராசிக்காரர்கள்!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூகம், வேலைவாய்ப்பு என உள்ளூர் முதல் உலகம் முழுவதும் அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் வாசிக்க, இப்போதே ஜீ இந்துஸ்தான் பயன்பாட்டைப் பதிவிறக்குங்கள்.

Android Link: https://bit.ly/3hDyh4G

Apple Link: https://apple.co/3loQYeR

Trending News