மார்ச் மாதம் சனி உதயம்: சுத்தமா நல்லா இல்ல... இந்த ராசிகள் சூதானமா இருக்கணும்!!

Saturn Rise 2023: சனியின் உதயம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுகு அசுப பலன்களையும் கொடுக்கும். சனியின் உதயம் எந்தெந்த ராசிகளுக்கு சிரமங்களை அதிகரிக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Feb 22, 2023, 11:01 AM IST
  • மீன ராசிக்காரர்களுக்கு சனி உதயம் வாழ்க்கையில் பிரச்சனைகளை கொண்டு வரக்கூடும்.
  • இந்த நேரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும்.
  • கூட்டுத் தொழிலில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம்.
மார்ச் மாதம் சனி உதயம்: சுத்தமா நல்லா இல்ல... இந்த ராசிகள் சூதானமா இருக்கணும்!! title=

சனி பகவானின் உதயம், ராசிகளில் அதன் தாக்கம்: நீதியின் கடவுளான சனி பகவான் நாம் செய்யும் செயல்களுக்கு ஏற்ப நமக்கு பலன்களை அளிக்கிறார். மனிதர்களின் நல்ல மற்றும் தீய செயல்களுக்கு ஏற்ப அவர் நல்ல மற்றும் தீய பலன்களை வழங்குகிறார். ஆகையால் நாம் பெறும் சுப மற்றும் அசுப பலன்களுக்கு நாமே ஒரு முக்கிய காரணம். சனி பகவான் தற்போது கும்ப ராசியில் உள்ளார். அவர் தற்போது அஸ்தமன நிலையில் இருக்கிறார். சனி மார்ச் மாதம் ஐந்தாம் தேதி உதயமாகவுள்ளார். 

சனியின் உதயம் அனைத்து 12 ராசிகளிலும் பாதிப்புகளை ஏற்படுத்தும். சமீபத்தில், சனி, ஜனவரி 30 ஆம் தேதி அஸ்தமனமானார். சனி உதயமாகும் போது, ​​சூரியன் மற்றும் புதன் ஆகிய கிரகங்களும் அங்கு இருக்கும். சனியின் உதயம் சில ராசிகளுக்கு சுப பலன்களையும் சில ராசிகளுகு அசுப பலன்களையும் கொடுக்கும். சனியின் உதயம் எந்தெந்த ராசிகளுக்கு சிரமங்களை அதிகரிக்கும் என்பதை பற்றி இந்த பதிவில் காணலாம். 

இந்த ராசிக்காரர்கள் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும்:

ரிஷபம்

சனியின் உதயத்தால் ரிஷப ராசிக்காரர்களுக்கு வேதனைகளை எதிர்கொள்ளலாம். உத்தியோகத்தில் இருப்பவர்கள் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். உங்கள் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். இந்த காலத்தில் முதலீடு செய்வதைத் தவிர்க்கவும். தந்தையுடனான உறவில் கசப்பு ஏற்படலாம்.

கன்னி

கன்னி ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் வாழ்வில் ஏற்ற இறக்கங்களைக் கொண்டு வந்துள்ளது. உத்தியோகத்தில் இருப்பவர்கள் பிரச்சனைகளை சந்திக்க வேண்டி இருக்கும். உங்கள் உயர் அதிகாரிகளுடன் கருத்து வேறுபாடுகள் ஏற்படலாம். முதலீடு செய்ய நேரம் சாதகமாக இல்லை. புதிய வேலையைத் தொடங்க நினைத்தால், அதை தற்போதைக்கு ஒத்திவைக்கவும். உங்கள் ஆரோக்கியத்தை கவனித்துக் கொள்ளுங்கள்.

மேலும் படிக்க | Astro Remedies: செல்வத்தை கொடுக்கும் சுக்கிரன்! பலன் தரும் சுக்கிர தோஷ பரிகாரங்கள்

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களுக்கு சனியின் உதயம் கலவையான பலன்களைத் தரும். பெற்றோரின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்காததால், பணியிடத்தில் பிரச்சனைகள் அதிகரிக்கும். திருமண வாழ்வில் பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மகரம்

சனி பகவானின் உதயம் மகர ராசிக்காரர்களுக்கு தொழில் வாழ்க்கையில் பதற்றத்தை ஏற்படுத்தும். குடும்பத்தில் அமைதிக்கு பங்கம் ஏற்படக்கூடும். சில காரணங்களால் நீங்கள் அவமதிக்கப்படலாம். சொத்து சம்பந்தமாக உடன்பிறந்தவர்களுக்கிடையே தகராறு ஏற்படலாம். ஆரோக்கியத்தில் எதிர்மறையான தாக்கம் ஏற்படும்.

மீனம்

மீன ராசிக்காரர்களுக்கு சனி உதயம் வாழ்க்கையில் பிரச்சனைகளை கொண்டு வரக்கூடும். இந்த நேரத்தில் முக்கிய முடிவுகளை எடுப்பதை தவிர்க்கவும். கூட்டுத் தொழிலில் எதிர்மறையான விளைவுகளை சந்திக்க நேரிடலாம். செலவுகள் கூடும்.

(பொறுப்புத் துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | புதன் அஸ்தமனம், இந்த ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் உண்டாகும்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News