குடிசையோ மாடி வீடோ, வீடுன்னா எப்படி இருக்க வேண்டும்? வாஸ்து சொல்லும் அடிப்படை விதிகள்!
Vastu For New Home : சிறிய குடிசை வீடாக இருந்தாலும் சரி, பல மாடிகள் கொண்ட பங்களாவாக இருந்தாலும் சரி, அடிப்படை வாஸ்து விதிகளின்படி கட்டுவது நல்லது...
சொந்த வீடு என்பது சாமானியர்கள் அனைவருக்குமான கனவாகவே இருக்கும். வாழ்நாள் முழுவதும் சேமித்து வாங்கும் வீடு என்பது வாழ்க்கையின் இலட்சியமாகவே இருக்கும். ஆனால், புதிய கட்டடத்தைக் கட்ட வாஸ்துப்படி கட்ட வேண்டும் என பலரும் விரும்புவதற்கு காரணம், பார்த்துப் பார்த்து கட்டிய வீட்டில் எந்தவித தோஷமும் வந்துவிடக்கூடாது என்பது தான்.
வீடு கட்ட திட்டமிடும்போதே, வாஸ்து சாஸ்திரப்படி வடிவமைத்துவிட்டால், பிறகு மனவருத்தம் வராது. சரியான வாஸ்துப்படி வடிவமைத்த பிறகு, வாஸ்துநாளில் அல்லது நல்ல நாளில் பூமிபூஜை போட்டு,கட்டிடம் கட்டும் பணிகளை தொடங்குவது நல்லது. வேண்டும் . கட்டிட பணி நடக்கும்போதும் கட்டிங்கள் வாஸ்துப்படி நிலைநிறுத்தப்பட்டு உள்ளதா என்பதை உறுதிப்படுத்துக் கொள்ளுங்கள். சிறிய குடிசை வீடாக இருந்தாலும் சரி, பல மாடிகள் கொண்ட பங்களாவாக இருந்தாலும் சரி, அடிப்படை வாஸ்து விதிகளைப் பார்த்து கட்ட வேண்டும்.
தலைமுறைகள் வாழ வீடு கட்டியது அந்தக் காலம் என்றால், இன்றைய நிலை மாறிவிட்டது. மேலும் அனைவரும் தெரிந்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம் என்னவென்றால், புதிதாக வீடு கட்டும்போது நிலத்தில் இருந்து கட்டுமானம் தொடங்கும்போது தான் வாஸ்து பூஜை போட வேண்டும். மேல் மாடிகள் கட்டும்போது அதற்கு வாஸ்து பூஜை அவசியம் இல்லை. இது தெரியாமல் பலர், மேல் மாடி கட்டும்போதும் வாஸ்து பார்க்கின்றனர்.
சூரியன், காற்று, சந்திரன், நீர், பூமி மற்றும் நெருப்பு போன்ற ஐம்பூதங்களின் ஆற்றல் மையங்கள் கொண்டது வீடு. சூரியக் கதிர்களின் விளைவு, காற்றின் ஓட்டம், பூமியின் காந்தப்புலங்களின் இழுப்பு மற்றும் பிற அண்ட ஆற்றல்கள் நம் வாழ்வில் புரிந்துகொள்ள முடியாத வழிகளில் செல்வாக்கு செலுத்துகின்றன.
மேலும் படிக்க | சுக்கிரன் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு ஜாக்பாட்.... அள்ளிக்கொடுப்பார் சுக்கிரன்
நாம் குடியிருக்கும் வீடு, இவை அனைத்தையும் சமநிலைப்படுத்தும்படி இருக்க வேண்டும் என்பது தான் வாஸ்து சாஸ்திரத்தின் அடிப்படை ஆகும். வாஸ்து சாஸ்திரம், ஒரு பண்டைய விஞ்ஞானம் திசைகள், கட்டிடக்கலை, வானியல் மற்றும் ஜோதிடம் ஆகியவற்றின் அடிப்படையில் வாஸ்து இயங்குகிறது. அடிப்படையான வாஸ்து சாஸ்திர அம்சங்களைத் தெரிந்துக் கொள்வோம்.
எட்டு திசைகள்
வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என நான்கு திசைகள் மட்டுமல்ல, இந்த நான்கிற்கும் இடைபப்ட்ட திசைகளான வடமேற்கு, வடகிழக்கு, தென்மேற்கு மற்றும் தென்கிழக்கு திசைகளும் வாஸ்து சாஸ்திரத்தில் முக்கியமானவை. ஒவ்வொரு திசையும் வாழ்க்கையின் ஒரு அம்சத்தைக் குறிக்கிறது.
எட்டு திசைகளுக்கு திக்பாலகர்கள் என பல்வேறு கடவுள்கள் உண்டு. அதேபோல ஒவ்வொரு திசையும் ஒவ்வொரு அம்சத்தைக் குறிக்கும். வடக்கு திசை செல்வத்திற்கு உரியது என்றால், தர்மத்திற்கு தெற்கும், மேற்கு செழிப்புக்கும், கிழக்கு ஒட்டுமொத்த வெற்றிக்கானது என்றும் அறியப்படுகிறது.
வாஸ்து சாஸ்திரத்தின் சில அடிப்படைக் கோட்பாடுகள் பற்றி தெரிந்துக் கொள்வோம்.
வடிவம்: உங்கள் வீட்டின் அறைகள் சதுரம் அல்லது செவ்வகமாக இருக்க வேண்டும்.
அறைகள்: அறைகள் காற்றோட்டமாகவும், நன்கு வெளிச்சமாகவும், பிரகாசமாகவும் இருக்க வேண்டும்.
வீட்டு மையம்: வீட்டின் மையப்பகுதி காலியாக இருக்க வேண்டும்.
படிக்கட்டுகள்: தென்மேற்கு திசையில், வீட்டின் படிக்கட்டுகள் கட்டுவது நல்லது.
தண்ணீர்: படுக்கையறையில் தாவரங்கள் மற்றும் நீர் நீரூற்று, மீன்வளம், தண்ணீரை சித்தரிக்கும் ஓவியம் போன்ற நீர் தொடர்பான பொருட்களைத் தவிர்க்கவும்.
உணவருந்தும் மேசை: சமையலறைக்கு அருகில் இருப்பதையும், பிரதான கதவுக்கு அருகில் இருப்பதையும் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்.
மேலும் படிக்க | அழகு ஆடம்பரம் பிரபலம் காதல் என வாழ்க்கையில் மகிழ்ச்சியைக் கொடுக்கும் சுக்கிர பகவான்!