நன்றும் தீதும் பிறர் தர வாரா என்பது முன்னோர் வாக்கு. ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் நமது கர்மாவுக்கு ஏற்றவாறே நமது வாழ்க்கை அமைகிறது. அது எப்படி இருக்கும் என்பதி ஊகமாக கணிக்கும் கலை ஜோதிடம். ஜோதிட சாஸ்திரத்தின்படி, 12 ராசிகளுக்குமான இன்றைய ராசி பலன்களைத் தெரிந்துக் கொள்வோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

குரோதி ஆண்டின் ஆனி 12ம் நாள் தேய்பிறை பஞ்சமி, அவிட்டம் நட்சத்திரம் கூடிய இன்று 26-06-2024 


மேஷம் 
தோற்றப்பொழிவு மேம்படும். சமூகப் பணிகளில் ஒத்துழைப்புகள் அதிகரிக்கும். தடைப்பட்ட சில பணிகளை செய்து முடிப்பீர்கள். எதிர்பாராத சில வரவுகளால் சேமிப்புகள் அதிகரிக்கும். எதிர்காலம் குறித்த தெளிவான முடிவுகளை எடுப்பீர்கள். நெருக்கடியாக இருந்து வந்த பிரச்சனைகள் படிப்படியாக குறையும்.  


ரிஷபம் 
வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும். குடும்ப உறுப்பினர்கள் குறித்த தெளிவுபிறக்கும். சமூகப் பணிகளில் முன்னேற்றம் உண்டாகும். மனதிற்கு பிடித்தவர்களை பார்க்கலாம். ஆராய்ச்சி சார்ந்த துறைகளில் உங்கள் திறமைகள் வெளிப்படும். 


மிதுனம் 
எதிர்பாராத சில வரவுகளால் கையிருப்புகள் அதிகரிக்கும். மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு உடன் பிறப்புகள் ஆதரவாக செயல்படுவார்கள். உத்தியோக பணிகளில் நாட்டம் உண்டாகும். கடன் சார்ந்த நெருக்கடிகளை கட்டுப்படுத்துவீர்கள்.. சமூகப் பணிகளில் உற்சாகம் ஏற்படும். உடல்நலனின் கவனம் வேண்டும். பயணங்களால் நல்ல வாய்ப்புகள் கிடைக்கும்.  


கடகம் 
வியாபாரத்தில் ஏற்ற இறுக்கமான சூழல் உண்டாகும். அரசு காரியங்கள் நிதானமாகவே நடைபெறும்ம். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். குழந்தைகளின் தேவைகளை நிறைவேற்ற விரும்பினாலும், பொருளாதாரம் இடம் கொடுக்காது. இனம் புரியாத சில சிந்தனைகளால் குழப்பம் ஏற்படும்.


மேலும் படிக்க | ஜூலை மாத சுக்கிரன் பெயர்ச்சியால் மனதில் கவலைகள் அதிகரிக்கும்! எச்சரிக்கை அவசியம்!


சிம்மம் 
தந்தை வழியில் ஆதரவான சூழல் ஏற்படும். உத்தியோகத்தில் பிடிப்பு அதிகரிக்கும், நல்ல அனுபவங்கள் உண்டாகும். பயணங்களால் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனம் அவசியம். வாழ்வில் இருந்த ஆர்வமின்மை மறையும். நண்பர்களின் வட்டம் விரிவடையும். 


கன்னி 
எதிர்காலம் சார்ந்த சில முடிவுகளை எடுப்பீர்கள். வழக்கு விஷயங்களில் முடிவுகள் கிடைக்கும். உடன் பிறந்தவர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். முயற்சிக்கு உண்டான பலன்கள் கிடைக்கும். எதிர்பாராத சில வரவுகள் மூலம் நன்மை உண்டாகும். வியாபாரத்தில் இருந்த மந்த நிலை விலகும், மனதில் மகிழ்ச்சி ஏற்படும் 


துலாம் 
விரும்பிய வாய்ப்புகள் மீண்டும் கிடைக்கும். கணவன் மனைவி இடையே நெருக்கம் அதிகரிக்கும். அலுவலகத்தில் ஒத்துழைப்பு  கிடைக்கும். மற்றவர்களின் கருத்துக்களுக்கு மதிப்பளித்து செயல்படவும். பழக்கவழக்கங்களில் சில மாற்றங்கள் உண்டாகும். வெளியூர் பயணங்களில் எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.   


விருச்சிகம்
வெளிவட்டாரத்தில் புது அறிமுகங்கள் கிடைக்கும். விருச்சிக ராசிக்காரர்களின் செயல்பாடுகளில் ஏற்படும் சோர்வு தற்காலிகமானதாக இருக்கும். உற்பத்தி துறைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் சற்று கவனத்துடன் இருக்கவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை வெளியில் சொல்வதைக் குறைத்துக் கொள்ளவும்.  


மேலும் படிக்க | வாழ்க்கையில் ஆடம்பர சுகங்களையும் வெற்றிகளையும் பெற.. சில சுக்கிரன் பரிகாரங்கள்..!!


தனுசு
நினைத்த காரியங்களை செய்து முடிப்பீர்கள். மனதளவில் புதிய நம்பிக்கை பிறக்கும். செயல்பாடுகள் இருந்த தாமதம் விலகும். பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் ஏற்படும். விளையாட்டுகளில் திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். மறைமுகமான சில செயல்களில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்கும்.  


மகரம் 
உறவினர்கள் வழியில் ஒத்துழைப்பு ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் உண்டாகும். மனை சார்ந்த விஷயங்களில் ஆதாயம் அடைவீர்கள். தன வரவுகள் மூலம் சேமிப்புகள் அதிகரிக்கும். அனுபவம் வெளிப்படும் வகையிலான சந்தர்ப்பங்கள் உருவாகும்.தன்னம்பிக்கை அதிகரிக்கும்.  


கும்பம் 
உடன் பிறந்தவர்கள் மூலம் நல்ல செய்தி வந்து சேரும். வீடு மாற்றுவது தொடர்பான சிந்தனைகள் அதிகரிக்கும். மறைமுக விமர்சனங்களைக் கண்டு அஞ்ச வேண்டாம். திறமைகளை வெளிப்படுத்துவதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். தொழில் தொடர்பான பயணங்கள் சாதகமாக அமையும். தொழில் நுட்ப கருவிகள் வாங்கும் வேலை இது.  


மீனம்
குடும்ப உறுப்பினர்களுடன் அனுசரித்து செல்லவும். உணவு சார்ந்த துறைகளில் ஈடுபட்டுள்ளவர்களுக்கு புதிய வாய்ப்புகள் கிடைக்கும். எந்தவொரு விஷயத்திலும் சிந்தித்து முடிவெடுக்கவும். தர்ம காரியங்களில் ஈடுபாடு உண்டாகும். சுதந்திரமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் மேம்படும். எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும்.


(பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.)


மேலும் படிக்க | முக்கிய கிரக மாற்றங்களின் தாக்கத்தால் ஜூலை மாதம் இந்த ராசிகளுக்கு ஜாலியான ராஜவாழ்க்கை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ