வாழ்க்கையில் ஆடம்பர சுகங்களையும் வெற்றிகளையும் பெற.. சில சுக்கிரன் பரிகாரங்கள்..!!

ஜாதகத்தில் சுக்கிரன் நிலை வலுவாக இருந்தால், வாழ்க்கை நிலை சிறப்பாக இருக்கும். சொகுசு வாழ்க்கை, கலை உணர்வு, காதல், அழகு, திருமணம், வாகன வசதிகள் மற்றும் பிற பொருள் இன்பங்களுக்கு சுக்கிரன் காரணியாக கருதப்படுகிறது.

Written by - Vidya Gopalakrishnan | Last Updated : Jun 24, 2024, 06:15 PM IST
  • ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை வலுவாக இருந்தால், ஒருவன் உலக சுகத்தை எல்லாம் பெறுகிறான்.
  • அனைத்து ராசிகளுக்கும் சுக்கிரனின் பெயர்ச்சி மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது.
  • ஜாதகத்தில் சுக்கிரன் நிலை வலுவாக இருக்க பரிகாரங்கள்.
வாழ்க்கையில் ஆடம்பர சுகங்களையும் வெற்றிகளையும் பெற.. சில சுக்கிரன் பரிகாரங்கள்..!! title=

ஜோதிடத்தில், குரு பகவானைப் போலவே, சுக்கிரனும் சுப கிரகங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. ஜோதிட சாஸ்திரப்படி, ஜாதகத்தில் சுக்கிரன் நிலை வலுவாக இருந்தால், வாழ்க்கை நிலை சிறப்பாக இருக்கும். சொகுசு வாழ்க்கை, கலை உணர்வு, காதல், அழகு, திருமணம், வாகன வசதிகள் மற்றும் பிற பொருள் இன்பங்களுக்கு சுக்கிரன் காரணியாக கருதப்படுகிறது. ஜாதகத்தில் சுக்கிரனின் நிலை வலுவாக இருந்தால், ஒருவன் உலக சுகத்தை எல்லாம் பெறுகிறான்.

சுக்கிரன் வலுவிழந்தால் வாழ்க்கையில்  பிரச்சனைகள் ஏற்படும்

சுக்கிரன் கிரகம் பலவீனம் அடைந்தால், திருமண வாழ்க்கையில் பதற்றம் அதிகரித்து, உலக இன்பங்கள் கிடைக்காமல் போகலாம் என்று ஜோதிட வல்லுநர்கள் கூறுகின்றனர். இது தவிர, பொருளாதார நிலை சரிவு மற்றும் நோய்கள் தொடர்பான பிரச்சினைகள் போன்றவற்றை அனுபவகிக்க நேரிடலாம். இந்நிலையில், ஜாதகத்தில் சுக்கிரன் நிலை வலுவாக இருக்க செய்ய வேண்டிய பரிகாரங்களை அறிந்து கொள்ளலாம். 

ஜாதகத்தில் சுக்கிரன் நிலை வலுவாக இருக்க பரிகாரங்கள்

1. சுக்கிரன் நிலை வலுவாக இருக்க, செல்வத்தின் கடவுளான அன்னை லட்சுமியை வணங்குங்கள். ஏழைகளுக்கு வெள்ளை ஆடைகளை தானம் செய்யுங்கள். உங்கள் உணவில் ஒரு பகுதியை பசு, காகம் மற்றும் நாய்க்கு கொடுங்கள்.

2. வெள்ளிக்கிழமையன்று விரதம் இருங்கள், அன்று புளிப்பு உணவு உண்ணக்கூடாது. பிரகாசமான வெள்ளை மற்றும் இளஞ்சிவப்பு வண்ணங்களைப் பயன்படுத்துங்கள். தயிர்,  பால் பாயசம், வாசனை திரவியம், வண்ண ஆடைகள், வெள்ளி மற்றும் அரிசி ஆகியவற்றை வெள்ளிக்கிழமை தானம் செய்யுங்கள்.

3. சுக்கிர நிலை வலுவாக இருக்கு 'ஷுன் சுக்ராய நம' என்ற மந்திரத்தை தினமும் குறைந்தது 108 முறை உச்சரிக்கலாம். சுக்கிர தோஷம் நீங்க, வெள்ளிக்கிழமையன்று விரதம் இருந்து, லட்சுமி தேவியை வழிபட்ட பின்னர் பெண் குழந்தைகளுக்கு இனிப்பு கொடுத்து மகிழ்வித்தால் நிதி நிலை உயரும்.

4. பால், தயிர், நெய், கற்பூரம், வெள்ளைப் பூக்களை பிறருக்கும் தானம் செய்வதால் சுக்கிரனின் அருளை பரிபூரணமாக பெறலாம். ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் எறும்புகளுக்கு உணவளித்து அவற்றின் பசியை போக்குவது மனதில் நிம்மதியைக் கொண்டுவந்து சேர்க்கும்.

மேலும் படிக்க | புத்தியைக் கட்டுப்படுத்தும் புதன் உதயத்தினால் கஷ்டப்படும் ராசிகள்! எச்சரிக்கை....

சுக்கிரன் பெயர்ச்சி

ஜூன் 12ம் தேதி மாலை ரிஷபம் ராசியிலிருந்து சுக்கிரன் விலகி மிதுன ராசிக்குள் நுழைந்தார். இப்போது ஜூலை 7 வரை மிதுன ராசியில் இருப்பார். சுக்கிரன் பெயர்ச்சி உலக மகிழ்ச்சியைத் தரும். அனைத்து ராசிகளுக்கும் சுக்கிரனின் பிரவேசம் மிகவும் மங்களகரமானதாக கருதப்படுகிறது. ஜூலை 7 ஆம் தேதி மாலை 4:31 மணி வரை சுக்கிரன் மிதுனத்தில் இருக்கும் நிலையில், பிறகு சுக்கிரம் கடக ராசிக்கு பெயர்ச்சி ஆவார். 

பொறுப்புத் துறப்பு:  இந்தக் கட்டுரையில் உள்ள தகவல்கள் பல்வேறு ஊடகங்கள், ஜோதிடர்கள், பஞ்சாங்கம், உபதேசங்கள், நம்பிக்கைகள், ஆன்மீக நூல்கள் ஆகியவற்றிலிருந்து சேகரிக்கப்பட்டு உங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் தகவலை வழங்குவது மட்டுமே. ZEE NEWS இதற்கு பொறுப்பேற்காது.

மேலும் படிக்க | சொந்த வீடு இல்லாவிட்டாலும், இருந்த இடத்தில் இருந்து பாடாய் படுத்தும் ராகு! விமோசனம் இருக்கே!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News