Sukran Peyarchi Palangal: செல்வச் செழிப்பு, உலக இன்பம், மகிழ்ச்சி, ஆடம்பரம், கலை, அழகு, திருமண சுகம் போன்றவற்றின் அதிபதியும் காரணி கிரகமுமான சுக்கிரனின் இயக்கத்தில் இன்று மாற்றம் ஏற்பட்டது. புகழைத் தரும் கிரகமான சுக்கிரன் இன்று அதிகாலை 4.51 மணிக்கு திருவாதிரை நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகியுள்ளார். திருவாதிரை நட்சத்திரம் மிகவும் மங்களகரமான நக்ஷத்திரமாகும். இது அனைத்து வகையான பணிகளையும் தொடங்குவதற்கு ஏற்றதாக கருதப்படுகிறது. இது வானிலை, குறிப்பாக மழை மீது ஒரு சிறப்பு விளைவைக் கொண்டுள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகபடியான நன்மைகள் ஏற்படும். இவர்களுக்கு பண வரவு அதிகமாகும். இவர்களது வாழ்வில் மகிழ்ச்சி மழையாய் பொழியும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 


ரிஷபம் (Taurus):


ரிஷப ராசிக்காரர்களுக்கு செல்வம் அளிக்கும் கிரகமான சுக்கிரன் சிறப்பு ஆசிகளைப் பொழிவார். உங்கள் வாழ்க்கையில் வளர்ச்சியின் புதிய அத்தியாயம் தொடங்கலாம். அனைத்து துறைகளிலும் முன்னேற்றம் ஏற்படும். செல்வம் பெருகும். உத்தியோகத்தில் வருமானம் அதிகரிக்க வாய்ப்புகள் உள்ளன. உங்கள் வாழ்க்கைத் தரம் உயரும். வாழ்க்கையில் ஆடம்பரத்தை அனுபவிப்பீர்க்கள். 


மிதுனம் (Gemini):


சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சியால், உங்கள் வாழ்க்கையில் ஒரு தீர்க்கமான திருப்புமுனை ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. அரசியலில் தொடர்புடையவருக்கு அதிகாரத்தில் பெரிய பதவி கிடைக்கலாம். மாணவர்கள் ஆக்கப்பூர்வமான பணிகளில் ஈடுபடுவார்கள். தொழிலதிபர்களின் நிதி நிலை முன்பை விட வலுவாக இருக்கும். புதிய வணிகத் திட்டத்தில் வேலை தொடங்குவதற்கான வாய்ப்புகளும் உள்ளன. திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். உடல்நலக் கோளாறுகள் நீங்கும்.


கன்னி (Virgo):


சுக்கிரனின் பெயர்ச்சியால் ஏற்படும் மாற்றம் கன்னி ராசிக்காரர்களுக்கு மிகவும் சாதகமாக அமையும். பணம் வருவதற்கான புதிய வழிகள் பிறக்கும். வாழ்வில் பல வித வெற்றிகளைக் காண்பீர்கள். பண வரவு அதிகமாகும், இதனால் நிதிநிலை மேம்படும். பல துறைகளில் வெற்றிகள் குவியும். பொருளாதார நிலை வலுவாக இருக்கும். உத்தியோகத்தில் இருப்பவர்கள் தாங்கள் விரும்பும் துறைக்கு இடமாற்றம் பெறலாம். நிலம், வீடு வாங்கும் ஆசையும் நிறைவேறும். உடல் ஆரோக்கியம் மேம்படும். குழந்தைகளால் நல்ல செய்தி கிடைக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சியும், அமைதியும் இருக்கும். 


துலாம் (Libra):


துலாம் சுக்கிரனின் சொந்த ராசியாகும். அவர் இந்த ராசிக்காரர்களுக்கு விசேஷமான ஆசிகளை அளிப்பார். சுக்கிரன் நட்சத்திர பெயர்ச்சி காரணமாக வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் அதிக லாபம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. தொழில்முறையாக விளையாட்டுத் துறையில் உள்ளவர்களுக்கு ஒரு நல்ல பயிற்சியாளரின் வழிகாட்டுதல் கிடைக்கும். மாணவர்களின் பேச்சாற்றலும் அறிவாற்றலும் அதிகரிக்கும். உத்தியோகஸ்தர்களின் ஆசியால் உத்தியோகத்தில் இருப்பவர்களின் வருமானம் உயரும்.


மேலும் படிக்க | செவ்வாய் பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு அமோகமான எதிர்காலம்... அள்ளித்தருவார் செவ்வாய்


தனுசு (Sagittarius):


திருவாதிரை நட்சத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி தனுசு ராசிக்காரர்களுக்கு சாதகமான விளைவை ஏற்படுத்தக்கூடும். புதிய வேலை அல்லது வியாபாரத்திற்கான நிதியை ஏற்பாடு செய்வதில் வெற்றி பெறுவீர்கள். உறவினர்களின் ஆதரவு கிடைக்க வாய்ப்பு உண்டு. கற்பித்தல் மற்றும் எழுதுதல் ஆகியவற்றுடன் தொடர்புடையவர்களுக்கு நல்ல காலமாக இது இருக்கும். வாகனம், வீடு வாங்கும் யோகம் உள்ளது. 


மகரம் (Capricorn):


திருவாதிரை நக்ஷத்திரத்தில் சுக்கிரன் பெயர்ச்சி காரணமாக, மகர ராசிக்காரர்களின் வாழ்க்கையில் திடீரென பெரிய மற்றும் சாதகமான மாற்றங்கள் ஏற்படலாம். மாணவர்கள் படிப்பிற்காக வெளிநாடு செல்ல நேரிடும். நல்ல கல்வி நிறுவனத்தில் சேர வாய்ப்புகள் உள்ளன. வேலையில் இருப்பவர்கள் சொந்த ஊருக்கு இடமாற்றம் பெறலாம். சொந்தமாக கார், வீடு வாங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளன. 


மீனம் (Pisces):


சுக்கிரனின் பெயர்ச்சி மீன ராசிக்காரர்களுக்கு ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தும். நிலுவையில் உள்ள பணம் கிடைக்க வாய்ப்பு உள்ளது. கடனில் இருந்தும் விடுதலை பெறுவீர்கள். மாணவர்கள் தங்கள் திறமையை நிரூபித்து விருதுகளை வெல்லலாம். பணி இடத்தில் ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். வருமானம் கணிசமாக அதிகரிக்கும். வாழ்வில் ஆடம்பரம் அதிகரிக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி அதிகமாகும். குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் இருக்கும்.


(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்துள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)


மேலும் படிக்க | ராகுவின் மிகப்பெரிய மாற்றம்: அசத்தலான பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகள் இவைதான்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..


முகநூல் - @ZEETamilNews


ட்விட்டர் - @ZeeTamilNews


டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 


வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r


அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ