தினசரி ராசிபலன்: ஜூன் 18 - இன்று பணப் புழக்கம் இந்த ராசிகளுக்கு அதிகமாக இருக்கும்...!

Daily Horoscope June 18: 2024ஆம் ஆண்டு ஜூன் மாதம் 18ஆம் தேதியான இன்றைய நாளின் மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிக்காரர்களுக்கான பலன்களை இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Jun 18, 2024, 06:09 AM IST
  • சிலர் துணையுடன் இன்று நீங்கள் அதிக நேரத்தை செலவிடுவார்கள்.
  • இன்று சிலர் சொத்துகளை வாங்கலாம், அதற்கு ஏதுவான காலமாகும்.
  • சிலருக்கு இன்று நல்ல பணப் புழக்கம் இருக்கும்.
தினசரி ராசிபலன்: ஜூன் 18 - இன்று பணப் புழக்கம் இந்த ராசிகளுக்கு அதிகமாக இருக்கும்...! title=

Daily Horoscope June 18: தினமும் நாளை தொடங்கும் முன் அன்றைய ராசிப் பலனை பார்த்து அதன்படி செயல்பட நினைப்பது பலரின் நம்பிக்கையாக இருக்கும். அதன்படி இங்கு மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிக்காரர்களுக்கான இன்றைய பலன்களை காணலாம். 

மேஷம்

மேஷ ராசிக்காரர்களாகிய நீங்கள் இன்று சுற்றுலா செல்ல திட்டமிடுவீர்கள். மேலும், உங்களின் சோம்பேறித்தனத்தால் உடல்நிலையில் சில குறைபாடுகள் ஏற்படும். உங்கள் சொத்து விவகாரத்தில் நல்ல செய்தி வந்து சேரும். உங்கள் துணையுடன் இன்று நீங்கள் அதிக நேரத்தை செலவிடுவீர்கள்

ரிஷபம்
 
ரிஷப ராசிக்காரர்களாகிய நீங்கள் இன்று சுற்றுலா செல்ல திட்டமிட்டிருப்பீர்கள். அதில் மாற்றம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் அதனை ஏற்கவும் தயாராக இருங்கள். உங்களின் பணிக்கு தகுந்த அங்கீகாரம் கிடைக்கும். உங்களின் முதலீட்டில் நல்ல பலன்கள் கிடைக்க வாய்ப்புள்ளது. 

மிதுனம்

மிதுன ராசிக்காரர்களாகிய நீங்கள் இன்று உங்களுக்கு நெருக்கமானவருக்கு உணர்வு ரீதியாக ஆதரவளிக்க வேண்டிய சூழல் வரலாம். உடல்நிலை சார்ந்து எவ்வித பிரச்னையும் இருக்காது. இன்று வெளியூர் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். 

கடகம்

கடக ராசிக்காரர்களாகிய நீங்கள் சுற்றுலா செல்ல தகுந்த காலம் இதுதான். வணிகம் சார்ந்தவர்களுக்கு இன்று நல்ல லாபம் காத்திருக்கிறது. உங்களின் கடின உழைப்புக்கு இன்று நேர்மறையான பலன்கள் கிடைக்கும். 

சிம்மம்

சிம்ம ராசிக்காரர்களுக்கு இன்று மிகவும் நல்ல நாள் எனலாம். பணி ரீதியில் நல்ல முன்னேற்றம் இருக்கவும், குறிப்பாக பணியில் பதவி உயர்வு கிடைக்கலாம். நீங்கள் முதலீடு செய்ய சொத்தில் நல்ல லாபம் கிடைக்கலாம். இருப்பினும் பணியில் சற்று கூடுதல் கவனம் செலுத்தினால் வெற்றிக் கனி கையில் கிட்டும்.

மேலும் படிக்க | திருவாதிரையில் சுக்கிரன்... அதிர்ஷ்டத்தை அள்ளப் போகும் சில ராசிகள்..!

கன்னி

கன்னி ராசிக்காரர்களாகிய உங்களின் குடும்பத்தினரின் மகிழ்ச்சி உங்களின் இன்று பொலிவாக்கும். உங்களின் எண்ணங்களையும் திட்டங்களையும் செயல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது, இந்த நேரத்தை பயன்படுத்திக்கொள்ளுங்கள். 

துலாம்

துலாம் ராசிக்காரர்களாகிய உங்களுக்கு இன்று பண ரீதியில் பிரச்னைகள் வராது. சொத்துகளை வாங்கவும், விற்கவும் இது ஏதுவான காலமாகும். இன்று உறவினர்களின் வருகையால் சற்று பரபரப்பு நிலவும், இருப்பினும் நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களாகிய உங்களுக்கு கல்வி ரீதியில் இன்று சிறந்த வாய்ப்புகள் உருவாகும் நாளாகும். மேலும், ஆரோக்கியமான இயற்கை சார்ந்த உணவுகளை நோக்கி திரும்புவது உடல்நலனுக்கு நல்லது. சொத்துகளை வாங்க நினைப்பவர்கள் தீவிர யோசனை செய்து, நன்கு ஆராய்ந்து வாங்க வேண்டும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களாகிய நீங்கள், வேலையில் ஏற்படும் எதிர்பாராத சூழலை முதிர்ச்சியாக கையாள்வீர்கள். கூடுதல் திறன் கொண்டவர்களுக்கு கல்வி ரீதியில் இன்று நல்ல பலன் கிடைக்கும். வீடும் குடும்பமும் பிரச்னைகள் இன்றி இருக்கும், மீண்டும் அமைதி திரும்பும்.

மகரம்

மகர ராசிக்காரர்களாகிய நீங்கள் உங்களின் உடலை கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கு மேற்கொள்ளும் முயற்சிகள் நன்கு பலனளிக்கும். குடும்ப விஷயங்களில் சில மாற்றங்கள் வரலாம், அதற்கு நீங்கள் ஒத்துப்போக சற்று காலமாகும். சமூக ரீதியில் உங்களின் மதிப்பு இன்று உயரலாம்.

கும்பம்

கும்ப ராசிக்காரர்களாகிய நீங்கள் உடல்நிலை சார்ந்து செய்யும் அத்தனை விஷயங்களும் இன்று உங்களுக்கு நன்கு கைக்கொடுக்கும். இன்று நீங்கள் வெளியூர் செல்ல நேரிடலாம், நெடுஞ்சாலைகளில் கவனமாக செல்லவும். செலவு செய்யவும், சேமிக்கவும் உங்களிடம் போதுமான பணம் இருக்கும். 

மீனம்

மீன ராசிக்காரர்களாகிய நீங்கள் இன்று பணியிடத்தில் முன்னேற்றம் காண்பீர்கள். நீங்கள் வாங்க ஆசைப்பட்ட விலை உயர்ந்த பொருளை இன்று வாங்கலாம், அந்தளவிற்கு பணப் புழக்கம் இருக்கும்.

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News