ராகுவின் மிகப்பெரிய மாற்றம்: அசத்தலான பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகள் இவைதான்

Rahu Nakshatra Peyarchi: ராகு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும்.

Written by - Sripriya Sambathkumar | Last Updated : Jun 17, 2024, 04:20 PM IST
  • விருச்சிக ராசியினருக்கு ராகு பெயர்ச்சி மிக சாதகமாக இருக்கும்.
  • நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும்.
  • தொழிலில் ஆதாயம் உண்டாகும்.
ராகுவின் மிகப்பெரிய மாற்றம்: அசத்தலான பலன்களை அனுபவிக்கவுள்ள ராசிகள் இவைதான் title=

Rahu Nakshatra Peyarchi: ஜோதிட சாஸ்திரத்தின் படி, நிழல் கிரகமான ராகு மிகவும் சக்திவாய்ந்த கிரகங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. ராகு சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு ஒரு முறை தனது ராசியை மாற்றுகிறார். ராகு எப்போதும் வக்ர நிலையில் அதாவது தலைகீழாக நகர்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவரது ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருந்தால், அந்த நபர் ராஜ வாழ்க்கை வாழ்கிறார். அதே சமயம், ராகுவின் நிலை சரியில்லாமல் இருந்தால், பெரிய நிலையில் இருப்பவர்களும் பாதாளத்தில் விழுகிறார்கள். 

ராகு கடந்த 2023-ம் ஆண்டு மீன ராசியில் பெயர்ச்சி ஆனார். இப்போது ராகு 2025 மே 18 வரை மீனத்தில் இருப்பார். எனினும், இந்த காலத்தில் ராகு நட்சத்திரத்தை மாற்றி நட்சத்திர பெயர்ச்ச்சி செய்வார். தற்போது ராகு ரேவதி நட்சத்திரத்தில் இருக்கிறார். இன்னும் சில நாட்களில் அவர் உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்சி ஆகவுள்ளார். 

சனியின் நட்சத்திரத்தில் ராகு 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டத்தை பிரகாசமாக்குவார்

ஜூலை 8ம் தேதி ராகு தனது நட்சத்திரத்தை மாற்றுகிறார். ராகு நக்ஷத்திர பெயர்ச்சி செய்து உத்திரட்டாதி நட்சத்திரத்தில் பெயர்ச்ச்சி ஆவார். உத்திரட்டாதி நட்சத்திரத்தின் அதிபதி சனி பகவான். ஆகையால், சனியின் ராசியில் ராகு நுழைவது முக்கிய மாற்றங்களைக் கொண்டுவரும். உத்திரட்டாதி நட்சத்திரம் அற்புதமான நட்சத்திரங்களில் ஒன்றாக கருதப்படுகிறது. வெற்றி, ஆன்மிகம், திடீர் நிதி ஆதாயம் போன்றவற்றுக்கு இந்த நட்சத்திரமே காரணமாக கருதப்படுகிறது. பொதுவாக ராகு சனியை சந்திப்பது நல்லதல்ல. ஆனால் சனி சுப ஸ்தானத்தில் இருந்தால் சாதகமான பலன்கள் கிடைக்கும். ராகு நட்சத்திர பெயர்ச்சியின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் காணப்படும். எனினும் சில ராசிகளில் இதனால் அதிகப்படியான நன்மைகள் கிடைக்கும். அந்த அதிர்ஷ்ட ராசிகளை (Zodiac Signs) பற்றி இந்த பதிவில் காணலாம். 

ரிஷபம் (Taurus): 

ரிஷப ராசியின் அதிபதி ராகுவின் நட்பு கிரகமான சுக்கிரன். ரிஷப ராசிக்காரர்களுக்கு ராகு பெயர்ச்சி பெரும் நிதிப் பலன்களைத் தரும். மேலும், நீண்ட நாட்களாக நிலுவையில் உள்ள பணிகள் இப்போது முடிவடையும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். பங்கு சந்தையில் லாபம் அதிகரிக்கும். அனைத்து துறைகளிலும் வெற்றி பெறுவீர்கள்.

மேலும் படிக்க | மிதுனத்தில் திரிகிரஹி யோகம்... ‘இந்த’ ராசிகளின் பொற்காலம் ஆரம்பம்..!!

துலாம் (Libra): 

துலாம் ராசிக்கு அதிபதியும் சுக்கிரன்தான். சுக்கிரன் ராகுவின் நட்பு கிரகம் என்பதால் இந்த ராசிக்காரர்களுக்கு ராகு நல்ல பலன்களை தருவார். இவர்களுக்கு வருமானம் அதிகரிக்கும். புதிய வருமான ஆதாரங்கள் திறக்கப்படும். ராகுவின் அருளால் துலா ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழுமையான ஆதரவு கிடைக்கும். வெளியூர் சம்பந்தமான வியாபாரம் செய்பவர்கள் அதிக லாபம் அடைவார்கள். அலுவலக பணிகளில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும் பதவி உயர்வும் கிடைக்கும். 

விருச்சிகம் (Scorpio): 

விருச்சிக ராசியினருக்கு ராகு பெயர்ச்சி மிக சாதகமாக இருக்கும். நீண்ட நாட்களாக முடிக்கப்படாமல் நிலுவையில் உள்ள பணிகள் இப்போது வெற்றிகரமாக முடிவடையும். தொழிலில் ஆதாயம் உண்டாகும். நிதித்துறையுடன் தொடர்புடையவர்களுக்கு குறிப்பாக இது நல்ல நேரமாக இருக்கும். பொருளாதார நிலையும் வலுவாக இருக்கும். ஆனால் உடல் நலனில் அக்கறை தேவை.

(பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவான நம்பிக்கைகள் மற்றும் தகவல்களின் அடிப்படையில் அமைந்தூள்ளன. ஜீ மீடியா இந்த தகவல்களை உறுதிப்படுத்தவில்லை.)

மேலும் படிக்க | சனி வக்ர பெயர்ச்சி: இந்த ராசிகளுக்கு நல்ல காலம் ஆரம்பம்... மகிழ்ச்சியில் திளைப்பார்கள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News