ஆசியக் கோப்பையில் அதிர்ச்சிகரமான தோல்விகளுக்கு பிறகு இந்திய அணி பாடம் கற்று இருக்கும் என்று அனைவரும் எண்ணினர்.  அதின் பிறகு உலக கோப்பைக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டது.  கிட்டத்தட்ட ஆசிய கோப்பைக்கு பிறகு பல நாட்கள் ஓய்வு இருந்த போதிலும், மீண்டும் இந்திய அணி மோசமான பந்துவீச்சு காரணமாக ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் தோல்வியை சந்தித்தது. ஒரே மாதத்தில் இரண்டு முறை டெத் ஓவர்களில் இந்தியா மோசமான பவுலிங்கால் தோல்வியை சந்தித்து உள்ளது.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


ஆசியக் கோப்பையில் இலங்கைக்கு எதிராகவும், முதல் டி20-ல் ஆஸ்திரேலியாவுக்கு எதிராகவும் சிறந்த அணியை தேர்வு செய்வதில் இந்தியா கோட்டை விட்டது.  முதல் டி20-ல் உலக கோப்பை அணியில் கூடுதல் வீரராக இருக்கும் தீபக் சஹார்க்கு வாய்ப்பு வழங்காமல், உமேஷ் யாதாவிற்கு வாய்ப்பு வழக்கப்பட்டது.  அவரது முதல் ஓவரின் முதல் 4 பந்துமே பவுண்ட்ரியாய் அமைந்து, அங்கேயே சறுக்கல் ஆரம்பித்தது.  பேட்டிங் சற்று ஆறுதல் தந்தாலும், இந்தியாவின் பந்துவீச்சு பும்ரா இல்லாமல் தலைகீழாக உள்ளது.  புவனேஷ்வர் குமார் போன்ற சீனியர் வீரர்களுக்கு ரன்களை வாரி வழங்குகின்றனர்.  இந்திய அணி 200 ரன்களை அடித்த போதிலும், போட்டியில் தோல்வி அடைந்தது.  தற்போது பும்ரா மற்றும் ஹர்ஷல் படேல் காயத்தில் இருந்து மீண்டு வந்துள்ளனர், 



மேலும் படிக்க: Rohit Sharma: ரோகித் சர்மாவுக்கு தலைவலியாக மாறிய இந்த வீரர் அணியில் இருக்க மாட்டார்


நாக்பூரில் முதலில் பேட்டிங் செய்யும் அணிக்கு சாதகமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.  விளையாடிய பன்னிரெண்டு டி20 போட்டிகளில், ஒன்பது போட்டிகளில் முதலில் பேட்டிங் செய்த அணி வெற்றி பெற்றுள்ளது.  தற்போது டி20 தரவரிசையில் சூர்யகுமார் யாதவ் 3வது இடத்தைப் பிடித்ததன் மூலம் உலகின் சிறந்த பேட்டர்களைக் கொண்ட இந்தியா, ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான டி20 தொடரை வெல்லுமா என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்துக்கொண்டுள்ளனர்.


மேலும் படிக்க: பாபர் அசாமை பின்னுக்கு தள்ளிய சூர்யகுமார் யாதவ்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ