Rohit Sharma: ரோகித் சர்மாவுக்கு தலைவலியாக மாறிய இந்த வீரர் அணியில் இருக்க மாட்டார்

ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான முதல் 20 ஓவர் போட்டியில் ரோகித் சர்மாவுக்கு பெரும் தலைவலியாக இருந்த உமேஷ் யாதவ், 2வது 20 ஓவர் போட்டியில் விளையாடுவாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

Written by - S.Karthikeyan | Last Updated : Sep 22, 2022, 07:17 AM IST
  • ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 2வது 20 ஓவர் போட்டி
  • பிளேயிங் லெவனில் இந்த வீரருக்கு வாய்ப்பு கடினம்
Rohit Sharma: ரோகித் சர்மாவுக்கு தலைவலியாக மாறிய இந்த வீரர் அணியில் இருக்க மாட்டார் title=

ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செவ்வாய்கிழமை நடைபெற்ற முதல் டி20 போட்டியில், இந்திய அணி வீரர் ஒருவருக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்காக டி20 போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. அந்த வாய்ப்பை அவர் சரியாக பயன்படுத்திக் கொள்ளாமல் கேப்டன் ரோகித் சர்மாவுக்கு பெரும் தலைவலியாக மாறினார். இன்று நடைபெறும் 2வது 20 ஓவர் போட்டியில் அவருக்கு வாய்ப்பு கிடைக்குமா? என்பது கேள்விக்குறி. 

உமேஷ் யாதவ் நீக்கம்

இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான 3 போட்டிகள் கொண்ட டி20 சர்வதேச தொடரின் இரண்டாவது போட்டி நாக்பூரில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. முதல் டி20 போட்டியில் ஆஸ்திரேலியா வெற்றி பெற்று தொடரில் 1-0 என முன்னிலை பெற்றுள்ள நிலையில் இரண்டாவது டி20 போட்டி இந்தியா வெற்றி பெற்றாக வேண்டிய கட்டாயத்தில் களமிறங்க உள்ளது. இது ‘டூ ஆர் டை’ போட்டி. இந்த போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் உமேஷ் யாதவ் இடம்பெறுவது மிகவும் கடினம். 

சரியாக விளையாடவில்லை

உமேஷ் யாதவ் 2019 ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக இந்தியாவுக்காக டி20 சர்வதேசப் போட்டியில் விளையாட வந்தார். ஆஸ்திரேலியாவுக்கு எதிராக செவ்வாய்க்கிழமை நடைபெற்ற முதல் டி20 போட்டியில், அவரது பந்துவீச்சு மிக மோசமாக இருந்தது. 2 ஓவர்கள் வீசிய உமேஷ் யாதவ், 27 ரன்களை வாரி வழங்கினார். 2 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தாலும், அணியின் தோல்விக்கு அவருடைய பந்துவீச்சும் ஒரு காரணமாக அமைந்தது. 

ஜஸ்பிரித் பும்ரா கம்பேக்

காயம் காரணமாக இந்திய அணியில் இடம்பெறாமல் இருந்த ஜஸ்பிரித் பும்ரா இந்த போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்புள் உள்ளன. அவர் அணிக்கு திரும்பும்பட்சத்தில் உமேஷ் யாதவ் பிளேயிங் லெவனில் இடம்பெற மாட்டார். அவரை தவிர மற்ற வீரர்களுடன் களமிறங்கும் இந்திய அணி, இரண்டாவது 20 ஓவர் போட்டியில் வெற்றி பெற்று தொடரை சமன் செய்யும் முனைப்பில் இருக்கிறது.

மேலும் படிக்க | கோலிதான் தொடக்கம் தர வேண்டும் - முன்னாள் விக்கெட் கீப்பர் யோசனை

மேலும் படிக்க | ரோகித் கேப்டனுக்கு சரியில்லை... மீண்டும் அவரை கொண்டு வாங்க; ரசிகர்கள் சொல்ல காரணம் இருக்கு

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

 

Trending News