மொகாலியில் நடந்த முதல் டி20 போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ஆஸ்திரேலிய அணியிடம் வீழ்ந்தது. இருப்பினும் இந்த போட்டியில் இந்திய பேட்ஸ்மேன்கள் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியிருந்தனர். சூர்யகுமார் யாதவ் 46 ரன்கள் (25 பந்துகள்), லோகேஷ் ராகுல் 55 ரன்கள் (35 ரன்கள்) என சிறப்பான பங்களிப்பை வழங்கி இருந்தனர்.
Star Indian batter closes in on the top spot in the @MRFWorldwide ICC Men's Player T20I Rankings for batters
Details https://t.co/pdcD6jfjkN
— ICC (@ICC) September 21, 2022
இந்நிலையில், ஆண்களுக்கான ஐசிசி டி20 பேட்ஸ்மேன்கள் தரவரிசையில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி சூர்யகுமார் யாதவ் (780 ரேட்டிங் புள்ளி) மூன்றாவது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இந்தப் பட்டியலில் முதல் இடத்தில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் (825 ரேட்டிங் புள்ளி) உள்ளார். இரண்டாவது இடத்தில் தென் ஆப்பிரிக்க அணியின் ஐடன் மார்க்ராம் உள்ளார்.
Big gains for India's star performers from the first #INDvAUS T20I in the latest update of the @MRFWorldwide ICC Men's T20I Player Rankings
— ICC (@ICC) September 21, 2022
கே.எல்.ராகுல் 5 இடங்கள் முன்னேறி 18ஆவது இடத்தை பிடித்துள்ளார். ரோகித் சர்மா 14ஆவது இடத்திலும் கோலி 16ஆவது இடத்திலும் இருக்கின்றனர். அதேபோல், டி20 ஆல் ரவுண்டர்களுக்கான தரவரிசை பட்டியலில் ஹர்திக் பாண்டியா மீண்டும் முதல் 5 இடங்களுக்குள் நுழைந்துள்ளார். அவர் தற்போது 180 புள்ளிகளுடன் தரவரிசையில் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.
மேலும் படிக்க | T20 World Cup: இந்திய அணியில் மீண்டும் மாற்றம்? பிசிசிஐ விரைவில் முக்கிய முடிவு
மேலும் படிக்க | Rohit Sharma: ரோகித் சர்மாவுக்கு தலைவலியாக மாறிய இந்த வீரர் அணியில் இருக்க மாட்டார்
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ