தோனிதான் அணியை வழிநடத்துகிறாரா? ஜடேஜாவின் பதில்!
தோனியை குறிவைத்து பேசிய வீரர்களுக்கு சி.எஸ்.கே கேப்டன் ஜடேஜா பதிலளித்துள்ளார்.
தோனியை குறிவைத்த அஜய் ஜடேஜா மற்றும் பார்த்தீவ் படேலுக்கு சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் புதிய கேப்டன் ரவீந்திர ஜடேஜா பதில் அளித்துள்ளார். கேப்டன் பதவியை ராஜினாமா செய்தாலும் அனைத்து முடிவுகளையும் தோனியே எடுத்ததாக முன்னாள் வீரர்கள் கடுமையாக சாடினர். மேலும், ஐபிஎல் 2022-ல் அணியின் செயல்திறனைப் கூட்டும் வகையில் ஜடேஜாவை தனது வேலையைச் செய்ய அனுமதிக்கவில்லை என்று குற்றம் சாட்டினர்.
மேலும் படிக்க | மீண்டும் இந்திய அணியில் எம்.எஸ்.தோனி?
ஜடேஜா சிஎஸ்கே அணியின் கேப்டனாக முதல் முறையாக பதவி ஏற்றார். மேலும், ஒரு அணியின் கேப்டனாக ஜடேஜா பதவி ஏற்பதும் இதுவே முதல் முறை. 2008-ல் ஐபிஎல் தொடங்கப்பட்டதில் இருந்து தோனி சிஎஸ்கே அணியின் வெற்றியில் குறிப்பிடத்தக்க பங்கைக் கொண்டிருந்தார் மற்றும் சிஎஸ்கே-வை நான்கு ஐபிஎல் கோப்பைகளுக்கு அழைத்துச் சென்றார்.
இந்நிலையில் இந்த விமர்சனங்களுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய ஜடேஜா, “நான் இப்போது முக்கியமான இடத்தில் பீல்டிங் செய்து வருகிறேன், அங்கிருந்து பந்துவீச்சாளர்களுடன் தொடர்புகொள்வது எளிதல்ல. ஆனால் மஹி பாய் முக்கிய குறிப்புகளை வழங்குகிறார், அவர் மிகவும் அனுபவம் வாய்ந்தவர் என்பதால், நாங்கள் ஆலோசனைக்காக வேறு எங்கும் பார்க்க வேண்டியதில்லை. பல வருடங்களாக கேப்டனாக இருந்த ஒரு ஜாம்பவான் அவர். அவரைப் பெற்றதற்கு நாங்கள் அதிர்ஷ்டசாலிகள், அவருடைய ஆலோசனைகள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன,” என்று கூறினார்.
மேலும் பேசிய ஜடேஜா, மஹி பாய் கேப்டன் பதவியை விட்டு விலகும் எண்ணம் குறித்து தன்னிடம் கூறியதிலிருந்து தான் கேப்டன் பதவிக்கு தயாராகி வருவதாக கூறினார். தற்போது சிஎஸ்கே அணி ஐபிஎல் 2022-ல் விளையாடிய மூன்று போட்டிகளிலும் தோல்வி அடைந்துள்ளது. பேட்டிங்கில் பலமாக இருந்தாலும் பவுலிங்கில் சொதப்பி வருகிறது.
மேலும் படிக்க | IPL2022: சென்னை - மும்பையை வெளியேற்றி ஐபிஎல் பைனலுக்கு போகப்போகும் அணி
உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR