ஐபிஎல் குறித்து கேள்வி... ஷாக் ஆன பாகிஸ்தான் கேப்டன் - பதில் என்ன தெரியுமா?
உலகக்கோப்பை இறுதிப்போட்டியை முன்னிட்டு நடத்தப்பட்ட செய்தியாளர் சந்திப்பில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாமிடம் ஐபிஎல் தொடர் குறித்து கேள்வியெழுப்பப்பட்டது.
நடப்பு டி20 உலகக்கோப்பை தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. மிகப்பெரும் மைதானமான மெல்போர்ன் கிரிக்கெட் மைதானத்தில் பாகிஸ்தான் - இங்கிலாந்து அணிகள் நாளை (நவ. 12) நடைபெறும் இறுதிப்போட்டியில் மோத உள்ளனர்.
அந்த வகையில், பாகிஸ்தான் கேப்டன் பாபர் அசாம் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அவரிடம் ஐபிஎல் தொடர் குறித்து கேள்வி எழுப்பப்பட்டதை அடுத்து அவர் திகைத்துபோய் ஏதும் பேசாமல் இருந்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
அந்த செய்தியாளர்,"ஐபிஎல் தொடரின் நன்மை குறித்து பேசும்போது, அது விளையாடிருந்தால் உங்கள் மற்றும் உங்கள் அணியின் விளையாட்டு மேலும் மெருகேறியிருக்கும் என நீங்கள் எப்போதாவது நினைத்திருக்கிறீர்களா...? எதிர்காலத்தில் அதில் விளையாட வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளதா?" என பாபரிடம் கேட்டார்.
மேலும் படிக்க | அழகி உடன் கணவரின் நெருக்கமான படங்கள் - சானியா மிர்சா விவாகரத்துக்கு இதுதான் காரணமா?
அதற்கு பாபர் எவ்வித ரியாக்ஷனும் கொடுக்காமல் பேசாமல் இருந்தார். உடனே தனது வலது பக்கத்தில் நின்றுகொண்டிருந்த, பாகிஸ்தான் அணியின் ஊடக மேலாளரை திரும்பி பார்த்தார். அந்த கேள்விக்கு பதிலளித்த ஊடக மேலாளர்,"தற்போது உலகக்கோப்பை இறுதிப்போட்டி தொடர்பான கேள்விகளுக்கு மட்டுமே பதிலளிக்கிறோம்" என்று முடித்துவிட்டார்.
2008இல் நடைபெற்ற ஐபிஎல் தொடரின் முதல் சீசனில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடினர். 2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம், மும்பை நகரை பயங்கரவாதிகள் கடுமையாக தாக்கினர். இதைத்தொடர்ந்து, இந்தியா - பாகிஸ்தான் ஆகிய இரு நாட்டுக்கும் இடையில் ஏற்பட்ட அரசியல் பதற்றம் காரணமாக, ஐபிஎல் தொடரில் பாகிஸ்தான் வீரர்கள் பங்கேற்கவில்லை.
2008ஆம் ஆண்டில், ஷாருக் கான் உரிமையாளராக இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் மட்டும் நான்கு பாகிஸ்தான் வீரர்கள் இருந்தனர். சோயிப் அக்தர், சல்மான் பட், உமர் குல், முகமது ஹபீஸ் ஆகியோர் கொல்கத்தாவிலும், கம்ரான் அக்மல், யூனிஸ் கான், சோஹைல் டன்வீர் ஆகியோர் ராஜஸ்தான் அணியிலும், சோயிப் மாலி, முகமது ஆசிப் ஆகியோர் டெல்லி டேர்டெவில்ஸ் அணிக்கு விளையாடினர். பெங்களூரு அணியில் மிஷ்பா உல்-ஹக் இடம்பெற்றிருந்தார்.
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ