ஐபிஎல் 2022 போட்டியில் மும்பை அணி தொடர் தோல்விகளை சந்தித்தது.  5 முறை கோப்பையை வென்ற அணி தொடர்ந்து 8 போட்டிகளில் தோல்வியை சந்தித்து மிகவும் மோசமான அணியாக மாறியது.  மிகவும் பவர்புல் ஆகா இருந்த மும்பை அணி இந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில் பல முக்கிய வீரர்களை இழந்தது.  டி காக், க்ருனால் பாண்டியா, ஹர்திக் பாண்டியா போன்ற ஸ்டார் பிளேயர்களை மீண்டும் அணியில் எடுக்க தவறியது.  இது இந்த வருட ஐபிஎல் போட்டியில் மும்பை அணிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING


மேலும் படிக்க | கலங்கி நிற்கும் மும்பைக்கு அடி கொடுக்க காத்திருக்கும் குஜராத் - பாண்டியாவின் பலே பிளான்


ராஜஸ்தான் அணிக்கு எதிரான போட்டியில் தான் தனது முதல் வெற்றியை பதிவு செய்தது மும்பை.  அதன் பிறகு நேற்று நடைபெற்ற குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் திரில் வெற்றி பெற்றது.  ஆரம்பத்தில் இருந்து பேட்டிங்கில் அசத்திய குஜராத் அணி அடுத்தது விக்கெட்களை பறி கொடுத்து இந்த போட்டியில் தோல்வியை தழுவியது.  இந்த போட்டியில் சாய் சுதர்சன் வித்தியாசமான முறையில் அவுட் ஆகி வெளியேறினார்.  பொல்லார்ட் ஓவரை எதிர்கொண்ட சுதர்சன், ஸ்லோ பவுன்சராக வந்த பந்தை அடிக்க முயன்றார்.  ஆனால், பந்து அவரை தாண்டி செல்ல நிலை தடுமாறி பேட் போல்டின் மீது மோதியது.  இதனால் ஹிட் அவுட் ஆகி வெளியேறினார்.


 



மும்பை அணி இந்த ஆண்டு பிளே ஆப்பில் இருந்து அதிகார்வப்பூர்வமாக வெளியேறி உள்ளது.  கடந்த ஆண்டும் பிளே ஆப்பிற்கு தகுதி பெறவில்லை.  ஆனாலும், இந்த ஆண்டு மும்பை அணியின் வெற்றி தோல்விகள் மற்ற அணிகளுக்கு முக்கியத்துவம் வாய்ந்தது.  குறிப்பாக சென்னை அணி பிளே ஆப்பிற்கு தகுதி பெற மும்பை அணி சில போட்டிகளில் வெற்றியும், சில போட்டிகளில் தோல்வியும் அடைய வேண்டும்.


மேலும் படிக்க | சன்ரைசர்ஸூக்கு எதிராக வரலாறு படைத்த வார்னர் - அகில உலக சாதனை


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR