India vs Australia: இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி இரண்டு வீரர்களுக்கு சமம் என்று புகழ்கிறார் க்ளென் மெக்ராத் (Glenn McGrath). இந்த புகழ்ச்சி, விராட் கோலிக்கு ஒரு சவால் என்றும் தோன்றுகிறது. ஆஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணியில் விராட் கோஹ்லி இரண்டு வீரர்களுக்கு சமமானவர். அவர் இல்லையென்றால் அது டெஸ்ட் தொடரை பாதிக்கும் என்று க்ளென் கூறுவது ஒருபுறம் விராட் கோலிக்கு பெருமையாக இருந்தாலும், மறுபுறம் கோப்பையை இந்தியா வெல்லும் என்ற கனவு கலைந்துவிடுமோ என்ற கவலையும் ஏற்படுகிறது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

விராட் கோலி இந்த கிரிக்கெட் டெஸ்ட் போட்டித் தொடரில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால், அவர் விளையாடும் ஒரேவொரு டெஸ்ட் போட்டியில் தான் நிகழ்த்த முடியும் என்பதையும் க்ளென் மெக்ராத் சுட்டிக்காட்டுகிறார்.


வேகப்பந்து வீச்சுக்கு பெயர் பெற்ற க்ளென் மெக்ராத்தின் இந்த கணிப்பின் அடிப்படை என்ன?   அடிலெய்டில் நடைபெறவிருக்கும் டெஸ்ட் போட்டித் தொடரின் முதல் போட்டியில் மட்டுமே விராட் கலந்துக் கொள்வார். மனைவி அனுஷ்கா ஷர்மாவிற்கு பிரசவ நேரம் நெருங்குவதால் அவர் முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகு இந்தியா திரும்பிவிடுவார்.


2018-19 ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்தின் போது விராட் கோலி தலைமையில் இந்தியா, ஆஸ்திரேலிய மண்ணில் தனது முதல் டெஸ்ட் தொடரை வென்றது, பேட்டிலும் இந்திய கேப்டன் முக்கிய பங்கு வகித்தார்.


தற்போது ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித் (Steve Smith) மற்றும் டேவிட் வார்னர் (David Warner) இடம் பெற்றிருப்பதால் இந்தியா சற்று அதிக கவனம் செலுத்த வேண்டியிருக்கும். அதோடு, ஆஸ்திரேலிய அணிக்கு வலுவூட்ட வந்திருக்கிறார் மார்னஸ் லாபுசாக்னே (Marnus Labuschagne) என்பதும் தற்போது ஆஸ்திரேலியா அணியின் அதிபலம் என்று சொல்லலாம்.



இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையிடம் பேசிய மெக்ராத், "இது தொடரை பாதிக்கும்" என்று கூறுகிறார். "விராட் கோலி, திறமையான வீரர்,  நான்கு டெஸ்ட் போட்டிகள் கொண்டத் தொடரில் மூன்றில் அவர் விளையாட மாட்டார் என்பது இந்தியாவுக்கு பின்னடைவு தான். அவர் தனது முதல் குழந்தையை வரவேற்க செல்வதும் தவிர்க்க முடியாதது தான். அதையும் என்னால் முழுமையாக புரிந்து கொள்ள முடிகிறது. விராட் கோலி இல்லாத வெற்றிடத்தை அணியின் பிற வீரர்கள் நிரப்ப வேண்டும்” என்று சுட்டிக்காட்டுகிறார்.


“கோஹ்லி இரண்டு வீரர்களுக்கு சமமானவர். சிறந்த பேட்ஸ்மேன் என்று பெருமை பெற்றிருக்கும் விராட் கோலி, கேப்டனாகவும், தனது ஆற்றலை சிறப்பான அணுகுமுறையுடன் கையாண்டு நிரூபித்திருக்கிறார். ஆஸ்திரேலியா இந்தத் தொடரில் ஆதிக்கம் செலுத்தி கணக்கை சமன் செய்ய விரும்புகிறது. அவர்களிடம் ஸ்மித் மற்றும் வார்னர் என்ற பலம் இருக்கிறது" என்று மெக்ராத் கூறினார்.


கோஹ்லி இல்லாத நிலையில் அணியின் நிலைமை என்ன? 
2018-19 டெஸ்ட் சுற்றுப்பயணத்தின் போது இரு அணிகளிலும் அதிக ரன் எடுத்த வீரராக இருந்த இந்திய வீரர் சேட்டேஷ்வர் புஜாராவின் (Cheteshwar Pujara) பக்கம் அனைவரின் கவனமும் குவிந்துள்ளது.  கோஹ்லி இல்லாத நிலையில் ரோஹித் சர்மா, அஜிங்க்யா ரஹானே, கே.எல்.ராகுல் என இந்திய அணியும் வலுவாகவே உள்ளது.


ஐ.பி.எல் போட்டித்தொடர் முடிவடைந்த நிலையில் தற்போது கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரின் கவனமும் இந்திய-ஆஸ்திரேலிய அணிகளின் டெஸ்ட் போட்டியின் மீது திரும்பியிருக்கிறது. அதிலும், விராட் கோஹ்லி, மனைவி அனுஷ்கா ஷர்மாவின் பிரசவத்திற்காக மூன்று டெஸ்ட் போட்டிகளில் கலந்துக் கொள்ள மாட்டார் என்பதும் முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது.



தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR