தீபாவளிக்கு அட்வைஸ் செய்த விராட் கோலியை ரசிகர்கள் troll செய்யும் காரணம் தெரியுமா?

தீபாவளியன்று ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த விராட் கோலி சமூக ஊடகங்களில் ட்ரோல் ஆகிறார். அப்படி என்ன தான் அவர் அறிவுறுத்தினார்? அதிலும் விராட் கோலியை ரசிகர்கள் கொஞ்ச நஞ்சம் ட்ரோல் செய்யவில்லை. இது மெகா ட்ரோலாக இருக்கிறது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Malathi Tamilselvan | Last Updated : Nov 15, 2020, 01:10 PM IST
  • தீபாவளிக்கு ரசிகர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார் விராட் கோலி
  • மாசுக் கட்டுப்பாட்டுக்காக பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று அட்வைஸ் செய்தார் விராட் கோஹ்லி
  • விராட் கோலியின் வாழ்த்துக்கு பலரும் ட்ரோல் செய்தனர்
தீபாவளிக்கு அட்வைஸ் செய்த விராட் கோலியை ரசிகர்கள் troll செய்யும் காரணம் தெரியுமா? title=

புதுடெல்லி: தீபாவளியன்று ரசிகர்களுக்கு அட்வைஸ் செய்த விராட் கோலி சமூக ஊடகங்களில் ட்ரோல் ஆகிறார். அப்படி என்ன தான் அவர் அறிவுறுத்தினார்? அதிலும் விராட் கோலியை ரசிகர்கள் கொஞ்ச நஞ்சம் ட்ரோல் செய்யவில்லை. இது மெகா ட்ரோலாக இருக்கிறது. 

பாவம் விராட் வேறு எந்த பெரிய அட்வைஸும் செய்துவிடவில்லை. தீபாவளியன்று ஜாலியாக இருக்க வேண்டாம் என்று சொல்லியிருப்பாரோ என்று நினைக்கிறீர்களா? அல்லது ஒரு நாளைக்கு சமூக ஊடகங்களின் பக்கம் வராமல் குடும்பத்துடன் மகிழ்ச்சியாக இருங்கள் என்று சொல்லிவிட்டாரா? கோலி தனது ரசிகர்களிடம் விடுத்த வேண்டுகோள் ஒன்றே ஒன்று தான்.   பட்டாசு வெடிக்க வேண்டாம் என்று தனது ரசிகர்களை கேட்டுக்கொண்ட கோலி, ராக்கெட் வேகத்தில் ட்ரோல் ஆனார்.

இந்திய கேப்டன் விராட் கோலி சனிக்கிழமையன்று இந்த வேண்டுகோளை விடுத்தார். அதற்காக அவரை ரசிகர்கள் ட்விட்டரில் ட்ரோல் செய்வதற்கு அளவே இல்லாமல் போய்விட்டது. ஆஸ்திரேலிய கிரிக்கெட் சுற்றுப்பயணத்திற்காக விராட் கோஹ்லி மற்றும் இந்திய கிரிக்கெட் அணியினர் சென்றுள்ளனர். தற்போது ஆஸ்திரேலியாவில் இருக்கும் கோலி, கொரோனா தொற்று காரணமாக கட்டாய தனிமைப்படுத்தலில் இருக்கிறார்.

தனிமையில் இருக்கும் கோலி, தீபாவளி வாழ்த்துக்களை ரசிகர்களுக்கு டிவிட்டரில் தெரிவித்தார்.

 சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதற்காக இந்த தீபாவளியன்று பட்டாசு வெடிப்பதைத் தவிர்க்குமாறு கோஹ்லி தனது வீடியோ செய்தியில் ரசிகர்களை கேட்டுக்கொண்டார். ஆனால் வீட்ட்டில் பெரியவர்கள் அட்வைஸ் செய்தால் இளைஞர்களுக்கு மூக்கு மேல் கோபம் வருமே, அதுபோல பலருக்கு சுள்ளென்று சீற்றம் பொங்கிவிட்டது. 

விராட் கோலியின் வேண்டுகோளுக்கு ஆத்திரத்தை வெளிப்படுத்திய பல ரசிகர்கள், அவரை உண்டு-இல்லை என்று ட்ரோல் செய்து வறுத்து எடுத்துவிட்டனர். 

தீபாவளியின்போது காற்று மாசு பொதுவாகவே அதிகரிக்கும். சுற்றுச்சூழலை மேலும் மோசமாகமல் தடுப்பதற்காக,நவம்பர் 30 ஆம் தேதி வரை டெல்லி மற்றும் டெல்லியின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பட்டாசுகளை விற்பனை செய்வதற்கும் பயன்படுத்துவதற்கும் தேசிய பசுமைத் தீர்ப்பாயம் (National Green Tribunal) தடை விதித்திருந்தது. ராஜஸ்தான், மேற்கு வங்கம் மற்றும் ஒடிசாவிலும் பட்டாசு விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் விராட் கோலி வெளியிட்ட தனது தீபாவளி வாழ்த்துச் செய்தி வீடியோவில் இவ்வாறு தெரிவித்திருந்தார்: “அனைவருக்கும் மிகவும் மகிழ்ச்சியான தீபாவளி வாழ்த்துக்கள். இந்த தீபாவளி நன்னாளன்று கடவுள் உங்களுக்கு அமைதி, செழிப்பு மற்றும் மகிழ்ச்சியை கொடுக்கட்டும். இந்த நல்ல சந்தர்ப்பத்தில் பட்டாசுகளை வெடிக்காதீர்கள், சுற்றுச்சூழலைப் பாதுகாக்க வேண்டும். உங்கள் அன்புக்குரியவர்களுடன் மகிழ்ச்சியாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். வீட்டில் விளக்கு ஏற்றி, இனிப்பு பலகாரம் சாப்பிட்டு குடும்பத்தினருடன் நிம்மதியாக தீபாவளியைக் கொண்டாடுங்கள். கடவுள் உங்கள் அனைவரையும் ஆசீர்வதிப்பார், டேக் கேர். "

இந்த தீபாவளி வாழ்த்து வீடியோவுக்கு ரசிகர்கள் எவ்வாறு பதிலளித்தார்கள் என்பதைப் பாருங்கள்:

தீபாவளி கொண்டாட்டங்களின் போது பட்டாசு வெடிக்கக்க்கூடாது என்று தடை விதிக்கப்பட்டிருந்தாலும், அதையும் மீறி பல இடங்களில் பட்டாசு வெடிக்கப்பட்டது. சனிக்கிழமை இரவு தேசிய தலைநகரம் முழுவதும் பல இடங்களில் காற்றின் தரம் 'மிகவும் மோசமானது'.  அதோடு, டெல்லி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் புகைமண்டலம் சூழ்ந்திருந்தது. ஏற்கனவே மாசுபட்டிருக்கும் காற்று, பட்டாசுகளை வெடிப்பதால் மேலும் மோசமாகி சுற்றுச்சூழல் அதிக பாதிப்புள்ளாகிறது. இது மக்களின் ஆரோக்கியத்தில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் என்பது கவலைக்குரிய விஷயம்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News