இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களில் ஆண்ட்ராய்டு போன் மற்றும் அதிக கணினி பயன்பாடுகளால் பள்ளி குழந்தைகள் கண் தொடர்பான மையோபியா எனும் நோயால் அதிகம் பாதிப்படைந்துள்ளனர். சமீபத்தில் 'ஆல் இந்தியா இன்ஸ்டிடியூட் ஆஃப் மெடிக்கல் சயின்ஸஸ்' நடத்திய ஒரு ஆய்வின் படி 5லிருந்து 15 வயதிற்குட்பட்ட 6 குழந்தைகளில் 1 குழந்தை கண் தொடர்பான மையோபியா எனும் நோயால் பாதிப்படைவதைக் கண்டறிந்துள்ளது. 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் இந்நோய் தொடர்பான விழிப்புணர்வு மற்றும் பிரத்யேக மையோபியா மேலாண்மை மையம் ஜீயஸ் நிறுவனத்துடன் இணைந்து கோவையில் முதன் முறையாக அரவிந்த் கண் மருத்துவமனை வளாகத்தில் தொடங்கப்பட்டுள்ளது.  



இது தொடர்பான செய்தியாளர்கள் சந்திப்பில் குழந்தைகள் நல கண் மருத்துவர் கல்பனா நரேந்திரன் பேசினார். அப்போது அவர், இந்தியாவில் கடந்த இரண்டு வருடங்களில் குழந்தைகள் மையோபியா நோயால் அதிகம் பாதிப்படைந்துள்ளதாகவும், இதன் தாக்கம் வரும் 2050 வருடத்தில் மிக அதிகமாக வாய்ப்புள்ளதாக தெரிவித்தார். 


குறிப்பாக நகர்ப்புறங்களில், திறந்தவெளிகளில் விளையாடுவதற்கான வாய்ப்புகள் குறைந்து, வீடுகளுக்குள்ளேயே ஆன்ட்ராய்டு போன் மற்றும் மடிக்கணினி போன்ற பயன்பாடுகளால் குழந்தைகளுக்கு கண் தொடர்பான நோய்கள் அதிகரித்துள்ளதாகவும் எனவே ஆரம்ப நிலையிலேயே இதற்கான பரிசோதனைகள் அவசியம் எனவும் தெரிவித்தார். 



மையோபியா மிக அதிகமாக பள்ளி குழந்தைகளிடையே அதிகமாக காண முடிவதாக கூறிய அவர், தமிழக அரசும் தற்போது இதில் கூடுதல் கவனம் செலுத்தி வருவதாக தெரிவித்தார்.


கோவை அரவிந்த் மருத்துவமனையில் குழந்தைகள் கண் மருத்துவ பிரிவில் சிறந்து செயல்படுவதாகவும், அதேபோல தற்போது ஜீயஸ் உடன் இணைந்து துவங்கப்பட்டுள்ள புதிய மையோபியா மையத்தில் சிறந்த ஆலோசனைகளையும், சிகிச்சைகளையும் வழங்க உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


மேலும் படிக்க | கர்ப்ப காலத்தில் எந்தெந்த காய்கறிக்களை சாப்பிடலாம்?


பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் படிப்பில் களமிறங்கிய நேரம் இது. சிறுவர்களின் செல்போன் பயன்பாடுகளை முற்றிலும் குறைத்து உன்னிப்புடன் கவனித்து இது போன்ற பாதிப்புகளில் அவர்கள் சிக்காமல் இருக்க பெற்றோர்கள் உஷாராக இருக்க வேண்டும் என மருத்துவர்கள் ஆலோசனைகள் வழங்கியுள்ளனர். 


மேலும் படிக்க | முத்தமிடத் தூண்டும் சருமம் வேண்டுமா: இந்த ஃபேஸ் பேக்குகளை பயன்படுத்தவும்


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR