கர்ப்ப காலத்தில் எந்தெந்த காய்கறிக்களை சாப்பிடலாம்?

கர்ப்ப காலத்தில் பெண்கள் எந்தெந்த காய்களை சாப்பிடலாம் என்பது குறித்த தொகுப்பு.

Written by - க. விக்ரம் | Last Updated : Jun 27, 2022, 04:03 PM IST
  • கர்ப்ப காலத்தில் சாப்பிட வேண்டிய காய்கறிகள்
  • தாயும், சேயும் நலமாக இருக்க உணவுமுறை முக்கியமானது
கர்ப்ப காலத்தில் எந்தெந்த காய்கறிக்களை சாப்பிடலாம்? title=

கர்ப்பமாக இருக்கும் பெண்கள் தங்களது உடல்நலனை மிகவும் கவனமாக பார்த்துக்கொள்வது நல்லது. இன்னொரு உயிரும் கர்ப்பமான பெண்ணுக்குள் இருப்பதால் சத்தான உணவுகளை சாப்பிடுவது அத்தியாவசியம். அதிலும் காய்கறிகள் மிகவும் முக்கியம். ஆனால் அனைத்துவகை காய்கறிகளையும் சாப்பிடுவது உடல் ஆரோக்கியத்திற்கு உகந்தது அல்ல.

ஆனால் தாய்க்கும் சேய்க்கும் பலம் சேர்க்கும் ஏராளமான காய்கறிகள் இருக்கின்றன. அதில் 5 காய்கறிகளை பார்க்கலாம் கர்ப்ப காலத்தில் சாப்பிடுவதற்கு கத்திரிக்காய் பாதுகாப்பானது. இருப்பினும், அளவோடு சாப்பிட வேண்டும்.

கத்திரிக்காயானது குழந்தையின் ஒட்டுமொத்த வளர்ச்சியை மேம்படுத்தக்கூடியது, ஏனெனில் இதில் வைட்டமின் ஈ, ஏ போன்ற பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

உருளைக் கிழங்கு மற்றும் சர்க்கரை வள்ளிக்கிழங்கு இரண்டிலும் பல அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் இருக்கின்றன. குறிப்பாக சர்க்கரை வள்ளிக்கிழங்கில் அதிக அளவு வைட்டமின் ஏ உள்ளது. 

இது ரத்தத்தில் சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த உதவும். அதேபோல் வைட்டமின் சி மற்றும் பி போன்ற வைட்டமின்களும் இதில் இருப்பதால் தாய்க்கும், சேய்க்கும் வலு சேர்க்கும்,

Pregnancy

முட்டைக்கோஸ், கீரை உள்ளிட்ட பச்சை இலைக் காய்கறிகளில் இருக்கும் வைட்டமின் ஏ, சி, கே, ஈ, கால்சியம், இரும்பு, நார்ச்சத்துகள், தாதுக்கள் கர்ப்பிணிகள் மற்றும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு வலு சேர்க்கும் இவற்றுள் போலேட் மிகவும் முக்கியமான வைட்டமின் ஆகும். இது குறைபாடுடன் குழந்தை பிறப்பதை தடுக்கிறது.

தக்காளியில் வைட்டமின் ஏ மற்றும் சி அதிகம் உள்ளது. கர்ப்பிணிப் பெண்களுக்கு அவசிய தேவையான கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, போலிக் அமிலம் மற்றும் புரதங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களையும் தக்காளி கொண்டிருக்கிறது.  தக்காளியை கர்ப்ப காலத்தில் சாப்பிடுவது பாதுகாப்பானது. உடலுக்கு பல ஆரோக்கிய நன்மைகளையும் வழங்கக்கூடியது. 

மேலும் படிக்க | இரும்புச்சத்து குறைபாடு உள்ளதா: இந்த உணவுகள் மூலம் எளிதாக சரிசெய்யலாம்

நீர்ச்சத்து நிறைந்த காய்கறிகள் கர்ப்பிணிப் பெண்களுக்கு நன்மை கொடுக்கும். வெள்ளரியில் நீர்ச்சத்து அதிகம் உள்ளதால் இது கர்ப்பிணிப் பெண்களிடத்தில் நீரிழப்பை தடுக்க உதவும்.  எதுவாக இருந்தாலும் அதை அளவாகத்தான் சாப்பிட வேண்டும். முக்கியமாக மருத்துவர்களிடம் ஆலோசனை செய்துகொள்வது பாதுகாப்பானது.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News