விக்ரம் லேண்டரை கண்டுபிடிக்க உதவிய சண்முக சுப்ரமணியனுக்கு மு.க.ஸ்டாலின் பாராட்டு
விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டறிவதில் முக்கிய பங்காற்றிய தமிழகப் பொறியாளர் சண்முக சுப்பிரமணியத்தை பாராட்டிய தமிழக எதிர்க்கட்சி தலைவரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின்.
சென்னை: நிலவின் தென்பகுதியில் சந்திரயான் விண்கலனை தரை இறக்கி உலக சாதனை நிகழ்த்தவிருந்தது இந்தியா. விக்ரம் லேண்டருக்கும் இஸ்ரோ கட்டுப்பாட்டு மையத்துக்கும் இடையேயான தொடர்பு துண்டிக்கப்பட்டது. ஆனாலும், விக்ரம் லேண்டரிடம் இருந்து தொடர்பை பெற இஸ்ரோ விஞ்ஞானிகள் முயற்சித்து வந்தனர். கிட்டத்தட்ட மூன்று மாதம் கழித்து விக்ரம் லேண்டர் பாகங்கள் கண்டறியப்பட்டு உள்ளது. இது இந்திய மக்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர், தமிழகத்தை சேர்ந்த பொறியாளர் சண்முக சுப்பிரமணியம் ஆவார். அவருக்கு அனைத்து தரப்பில் இருந்தும் பாராட்டுக்களை குவிந்த வண்ணம் உள்ளது.
அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் உட்பட அனைவரும் தங்கள் சமூக வலைத்தளம் மூலம் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில், திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், தனது ட்விட்டர் பக்கத்தில், "விக்ரம் லேண்டரின் பாகங்களை கண்டுபிடிக்க நாசாவுக்கு உதவிய தமிழகத்தை சேர்ந்த சண்முக சுப்ரமணியனுக்கு பாராட்டு தெரிவித்துள்ளார்.
அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியது, "சந்திரனின் மேற்பரப்பில் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க உதவிய சென்னையைச் சேர்ந்த புரோகிராமர் சண்முகா சுப்பிரமணியனை நான் பாராட்டுகிறேன். மேலும் நாசாவின் இந்த கண்டுபிடிப்பு மற்றும் விக்ரம் லேண்டர் இருப்பதை உறுதிப்படுத்தியை கண்டு மகிழ்ச்சியடைந்தேன். நாசா மற்றும் சண்முகா சுப்பிரமணியனுக்கு எனது பாராட்டு. இது சண்முகா சுப்பிரமணியனின் எதிர்காலத்திற்கு மிகச் சிறந்தது எனக் பாராட்டி உள்ளார்.
நாசாவுக்கே உதவி செய்த தமிழக மாணவன், சென்னையில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனத்தில் பொறியாளராக பணியாற்றி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
உங்களுக்கு சுவாரஸ்யமான சிறப்பு செய்தி, முக்கிய செய்திகள், அரசியல் குறித்து விவரங்களை தெரிந்துக்கொள்ள நமது ZEE HINDUSTAN TV ஐ பாருங்கள். தற்போது ஹிந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் ஒளிப்பரப்பாகிறது.