இரானில் இருந்து 687 தமிழக மீனவர்களுடன் ஐஎன்எஸ் ஜலஸ்வா போர்க் கப்பல் தூத்துக்குடி கிளம்பியது. இரானில் சிக்கிக் கொண்டிருந்த 687 தமிழக மீனவர்களை அழைத்துக் கொண்டு ஐஎன்எஸ் ஜலஷ்வா போர்க்கப்பல் இரானில் இருந்து தூத்துக்குடிக்கு கிளம்பிவிட்டது.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

கொரோனா வைரஸ் பரவலானது உலகின் போக்கையே புரட்டிப் போட்டுள்ளது.  யாதும் ஊரே யாவரும் கேளீர் என்று உலகெங்கிலும் உள்ள மக்கள் வேலைவாய்ப்பு, கல்வி, வியாபாரம், கல்வி பயில்வதற்கு என உலகம் முழுவதும் பயணிக்கின்றனர்.  சிலர் தாயகத்தை விட்டு வெளிநாடுகளிலேயே தங்கிவிடுகின்றனர்.


ஆனால், தற்போது ஐந்து-ஆறு மாதங்களாக உலகம் முழுவதும் பரவி, தாக்கத்தை ஏற்படுத்தி மக்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தியுள்ள கொரோனாவால் பெரும்பாலான மக்கள் தங்கள் சொந்த மண்ணுக்கு திரும்பும் கட்டாயம் ஏற்பட்டுள்ளது.


இந்த நிலையில் வெளிநாடுகளில் வாழ்வாதரத்திற்கு சென்று சிக்கிக் கொண்ட இந்தியர்களை மத்திய அரசு தாயகத்திற்கு திரும்ப அழைத்து வருவதற்காக பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. வந்தே பாரத், சமுத்திர சேது என பல திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன.


Also Read | $800 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள போதைப்பொருட்களை அழித்த மியான்மர்


சமுத்திர சேது திட்டத்தின்படி வெளிநாட்டில் உள்ள இந்தியர்கள் கப்பல் மூலம் தாயகத்திற்கு அழைத்து வரப்படுகின்றனர். இதற்கு முன்னதாக, இந்திய கடற்படை கப்பலான ஐஎன்எஸ் ஜலஸ்வா, மாலத்தீவு மற்றும் இலங்கையில் இருந்து இந்திய குடிமக்களை இந்தியாவுக்கு அழைத்து வந்துள்ளது.


இரான் நாட்டில் சிக்கியுள்ள தமிழகத்தைச் சேர்ந்த 673 மீனவர்களை அழைத்து வருவதற்காக ஐஎன்எஸ் ஜலஸ்வா கப்பல், பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு சென்றுள்ளது. தமிழக மீனவர்களை ஏற்றிக் கொண்டு அந்தக் கப்பல் இன்று தூத்துக்குடி புறப்படவுள்ளது.


மீன்பிடி தொழிலுக்காக இரானுக்கு சென்ற 700க்கு மேற்பட்ட தமிழர்கள் அங்கு ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகின்றனர்.


கோவிட்-19 பெருந்தொற்று பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, விமானம் மற்றும் கப்பல் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ள நிலையில், வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இவர்கள் சொந்த ஊருக்கு திரும்ப முடியாத நிலை ஏற்பட்டது.


மத்திய அரசும் மாநில அரசும் தங்களை வெளிநாடுகளில் இருந்து தங்களை மீட்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.   இரானில் சிக்கியுள்ல மீனவர்களை, நேரில் சந்தித்த இந்திய தூதரக அதிகாரிகள் அவர்களுக்குத் தேவையான உணவு மற்றும் பிற வசதிகளும் செய்து கொடுத்தனர். பிறகு மருத்துவப் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டன.


Also Read | நன்னடைத்தையால் தண்டனை காலத்திற்கு முன்னதாக விடுவிக்கப்படுகிறாரா சசிகலா?


இரானில் இருந்து தாயகம் திரும்புவதற்காக அரசின் ஏற்பாடுகளின்படி, பதிவு செய்துள்ள தமிழக மீனவர்கள் அங்குள்ள இந்திய தூதரக அதிகாரிகளால் பந்தர் அப்பாஸ் துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.   687 தமிழக மீனவர்களுக்கும் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டன. தமிழக மீனவர்களுடன் கிளம்பிய ஐஎன்எஸ் ஜலஷ்வா கப்பல் 5 நாட்கள் பயணத்திற்கு பிறகு அடுத்த புதன்கிழமையன்று தூத்துக்குடி துறைமுகத்துக்கு வந்து சேரும்.


இந்த கப்பலில் வருபவர்கள் சிறப்பு பேருந்துகள் மூலம் தங்கள் சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள்.  பிறகு உடனடியாக கொரோனா பரிசோதனை செய்யப்படும்.  அதோடு, அவர்களை தனிமைப்படுத்துவதற்கான முன்னேற்பாடுகளையும் அரசு மேற்கொண்டுள்ளது.