கடந்த சில நாட்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்ந்து கொண்டே வருகிறது. அதன்படி பெட்ரோல் விலை 100 ரூபாயை தாண்டி விட்டது என்பதையும் டீசல் விலை 100 ரூபாயை நெருங்கி விட்டது என்பதையும் பார்த்து வருகிறோம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

பெட்ரோல் மற்றும் டீசல் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வருவது ஏழை எளிய மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகப் பெரிய பாதிப்பாக இருக்கும் நிலையில் அடுத்த கட்டமாக தற்போது சமையல் எரிவாயு சிலிண்டர் (LPG) விலையும் உயர்ந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


ALSO READ | LPG cylinder prices October 1, 2021: ரூ. 43 அதிகரித்தது எல்.பி.ஜி சிலிண்டர் விலை


அதன்படி தற்போது சென்னையில் (Chennai) வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் (LPG cylinders) சிலிண்டரின் விலை ரூ. 900 என விற்கப்பட்டு வந்தது. தற்போது இதன் விலை ரூ.15.50 உயர்ந்து ரூ. 915.50 என்றாகியுள்ளது. இந்த விலை உயர்வு கடந்த பிப்ரவரி மாதத்தில் இருந்து நடைபெற்று வருகிறது. பிப்ரவரி 4 ஆம் தேதி 25 ரூபாயும், பிப்ரவரி 15 ஆம் தேதி 50 ரூபாயும் உயர்த்தப்பட்டன. அதே மாதம் மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. 


பின்னர் மார்ச் மாதம் 1 ஆம் தேதி மீண்டும் 25 ரூபாய் உயர்த்தப்பட்டது. இதன் பின்னர் கடந்த ஆகஸ்ட் 17 ஆம் தேதி சமையல் எரிவாயு, 25 ரூபாய் உயர்த்தப்பட்டிருந்தது. இதனால் சென்னையில் சிலிண்டர் விலை 875 ரூபாய் 50 காசாக விற்கப்பட்டது. அதன்பின் செப்டம்பர் 1 ஆம் தேதி, மேலும் 25 ரூபாய் உயர்ந்து 900- ஐ கடந்தது. இப்படி கடந்த ஓராண்டில் மட்டும் 285 ரூபாய் அதிகரித்திருந்தது.


இந்த நிலையில், தற்போது வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டரின் விலை இன்னும் 15 ரூபாய் உயர்ந்து, ரூ.915 என்றாகியுள்ளது. இதன்மூலம் கடந்த ஓராண்டில் சிலிண்டர் விலை ரூ.300 உயர்ந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


ALSO READ: Free LPG Scheme: மத்திய அரசின் இலவச சிலிண்டர் திட்டம் பெறுவது எப்படி? 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G


Apple Link - https://apple.co/3loQYeR