திருவண்ணாமலை அடுத்த அரடாப்பட்டு கிராமத்தில் ஆறு வயது மகளை கரும்பால் அடித்து கொலை செய்த கொடூர தாயை வெரையூர் காவல் நிலைய போலீசார் கைது செய்து வேலூர் மத்திய சிறையில் அடைத்துள்ளனர், குழந்தையின் உடலை திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு உடல் கூறு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது, 


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

மேலும் படிக்க | பள்ளி மாணவி விஷம் குடித்து தற்கொலை: தொடரும் பரிதாபம்


அரடாப்பட்டு கிராமத்தில் உள்ள மாரியம்மன் கோயில் தெருவில் வசித்து வரும் ஓட்டுநர் பூபாலன் என்பவருக்கும் சுகன்யா என்பவருக்கும் கடந்த 2014 ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு 8 வயதில் ஒரு மகனும், 6 வயதில் ஒரு மகளும் இருந்தனர். இதில் 6 வயது மகளான ரித்திகா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். 



இந்நிலையில் நேற்று கணவர் பூபாலன் வழக்கம் போல் வேலைக்கு சென்ற நிலையில் சுகன்யா மகள் ரித்திகாவை திடீரென கரும்பால் அடித்து தாக்கியுள்ளார் சுகன்யா. ரித்திகாவின் அலறல் சத்தம் கேட்ட அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து காயமடைந்த ரித்திகாவை மருத்துவமனைக்கு தூக்கிச்சென்றனர். அப்போது வழியிலேயே சிறுமி உயிரிழந்ததாக கூறப்படுகின்றது. 


மேலும் படிக்க | காரில் சென்ற பெண்ணை காருடன் கடத்தி கூட்டு பலாத்காரம்! 6 பேர் கைது


சுகன்யா கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பும் ரித்திகாவை அடித்து துன்புறுத்தியதாக கூறப்படுகிறது, சுகன்யா யாருடன் பேசுகிறார் என்பது குறித்து கணவரிடம் மகள் கூறுவதை வழக்கமாக கொண்டதால் அடிக்கடி மகளை அடித்து அவர் துன்புறுத்தி வந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. நேற்று கணவர் வேலைக்கு சென்றதும் மகளிடம் வாக்குவாதம் செய்த சுகன்யா அவரை கரும்பால் பலமாக அடித்துள்ளார். இதில் துடிதுடித்த சிறுமி வலிதாங்காமல் அலறியுள்ளார். 


குழந்தை உயிரிழந்த சம்பவம் குறித்து  வெறையூர் காவல் நிலைய போலீசாருக்கு தகவல் கிடைத்ததை அடுத்து அவர்கள் சுகன்யாவை கைது செய்தனர். பெற்ற தாயே மகளை அடித்துக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 


சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 


உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.


முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!


Android Link: https://bit.ly/3AIMb22


Apple Link: https://apple.co/3yEataJ