காரில் சென்ற பெண்ணை காருடன் கடத்தி கூட்டு பலாத்காரம்! 6 பேர் கைது

போரூர் அருகே காரில் சென்ற பெண்ணை கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்து நகை பறித்து சென்ற ஆறு பேரை போலீஸார் கைது செய்துள்ளனர்.  

Written by - Geetha Sathya Narayanan | Last Updated : Aug 10, 2022, 03:50 PM IST
  • காரில் சென்ற பெண்ணை காருடன் கடத்திய 6 பேர்.
  • கூட்டு பலாத்காரம் செய்து வழிப்பறி செய்து தப்பிப்பு.
காரில் சென்ற பெண்ணை காருடன் கடத்தி கூட்டு பலாத்காரம்! 6 பேர் கைது title=

போரூர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் நேற்று முன் தினம் இரவு காரில் சென்று கொண்டிருந்தார். போரூர் அடுத்த , கொளுத்துவான்சேரி அருகே சென்று கொண்டிருந்தபோது காரை வழி மறித்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி காரை ஓட்டி வந்த டிரைவரை தாக்கி விரட்டி விட்டு காரில் அமர்ந்திருந்த பெண்ணை காரோடு கடத்தி சென்றனர். 

மேலும் படிக்க | ஜெய்லரில் என்டிரியான நீலாம்பரி; மீண்டும் படையப்பா காம்போ

பின்னர் அங்கிருந்த காலி இடத்தில் வைத்து அந்த பெண்ணை கத்தி முனையில் நான்கு பேரும் கூட்டு பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. பின்னர் அந்த பெண்ணிடம் இருந்த 8 பவுன் நகையை பறித்து கொண்டு மர்ம நபர்கள் தப்பி சென்றனர். 

இதுகுறித்து அந்த பெண் அளித்த புகாரின் பேரில் போரூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பெண்ணை கத்தி முனையில் கூட்டு பலாத்காரம் செய்து நகை பறித்து சென்ற சம்பவத்தில் நான்கு பேரை பிடித்து தீவிரமாக விசாரித்து வந்தனர், மேலும் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர், கைது செய்யப்பட்ட ஆறு நபர்களிடமும் போலீசார் தொடர்ந்து தீவிர விசாரணை செய்து  நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி  சிறையில் அடைத்தனர், மேலும் அவர்களை போலீஸ் காவல் எடுத்து விசாரிக்க உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது, இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

கொளுத்துவான்சேரி பகுதியில் கஞ்சா விற்பனை அட்டகாசம் அதிகரித்துள்ளதால் இரு தரப்பினரிடையே கஞ்சா விற்பனை செய்வதில் அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாகவும் இரவு நேரங்களில் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வரும் நிலையில் கஞ்சா போதையில் இதுபோன்ற வழிப்பறி மற்றும் கூட்டு பலத்கார சம்பவத்தில் மர்ம நபர்கள் ஈடுபடுவது தெரியவந்துள்ளது

மேலும் படிக்க | கார்த்தியின் அடுத்த படத்தை இயக்கப்போவது இவரா?

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News