விழுப்புரம் அருகே அரசு பள்ளி மாணவி பள்ளியில் விஷம் குடித்து தற்கொலை செய்துகொண்ட விவகாரம் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் அருகே உள்ள மாம்பழப்பட்டு அரசு பள்ளியில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி ரேவதி (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் மல்லிகைபட்டு என்ற கிராமத்தில் வாசித்து வந்தார். இவர் இன்று காலை பள்ளிக்கு சென்ற சிறிது நேரத்தில் பள்ளியில் மயங்கி கீழே விழுந்தார். ரேவதி மயங்கி விழுந்ததை அடுத்து பள்ளி ஆசிரியர்கள் இவரை விழுப்புரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இங்கு பரிசோதித்த மருத்துவர்கள் மாணவி விஷம் குடித்துள்ளதாக தெரிவித்துள்ளனர். இதனை அடுத்து மாணவி மேல் சிகிச்சைக்காக விழுப்புரம் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி பள்ளி மாணவி ரேவதி பரிதாபமாக உயிரிழந்தார்.
இது தொடர்பாக கானை காவல் துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் ரேவதியும் அவரது பகுதிக்கு அருகாமையில் உள்ள குயவன் குட்டை என்ற பகுதியில் வசித்து வரும் மாணவரும் காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது.
மேலும் படிக்க | 5G அலைகற்றை உதுகீட்டில் 3 இலட்சம் கோடி ரூபாய் வரையில் முறைகேடு: சீமான்
இவர்களது காதல் பற்றி அறிந்த பள்ளி மாணவி ரேவதியின் பெற்றோர், அவருக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் ஏற்பாடு செய்துள்ளனர். இந்த ஏற்பாடு மாணவிக்கு பிடிக்கவில்லை. தனது காதலுக்கு பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்ததையும், தனக்கு வேறு ஒரு இடத்தில் திருமணம் நிச்சயித்ததையும் மாணவியால் தாங்கிக்கொள்ள முடியவில்லை.
இதனால் மாணவி தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. தொடர்ந்து பள்ளி மாணவிகள் பள்ளியில் தற்கொலை செய்து கொள்ளும் சம்பவம் விழுப்புரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரச்சனை இல்லாத மனிதன் என உலகில் யாரும் இல்லை. பிரச்சனைகள் வரும்போது அவற்றை தீர்க்க வழிகாண வெண்டுமே தவிர, நம்மை தோர்த்துக்கொள்ள நினைக்கக்கூடாது. எந்த பிரச்சனைக்கும் தற்கொலை தீர்வாகாது!!
உங்களுக்கு மன அழுத்தம் ஏற்பட்டாலோ, தற்கொலை எண்ணம் உண்டானாலோ, அதனை மாற்ற கீழ்காணும் எண்ணை தொடர்பு கொள்ளவும். மாநில உதவிமையம்: 104
மேலும் படிக்க | எதற்காக ரஜினி ஆளுநரை சந்தித்தார்? அண்ணாமலை விளக்கம்!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ