புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே அம்மாசத்திரம் ஊராட்சி பசுமலைப்பட்டியில் துப்பாக்கி சுடும் பயிற்சி மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு மத்திய தொழில் பாதுகாப்பு படை, காவலர்கள், என்சிசி மாணவர்கள் உள்ளிட்டோர் இங்கு துப்பாக்கி சுடும் பயிற்சி பெறுவது வழக்கம்.


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

இந்நிலையில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் இன்று காலை துப்பாக்கி சுடும் (Shooting Accident) பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.


பசுமலைப்பட்டி அருகே நார்த்தாமலை பகுதியில் கொத்தமங்கலபட்டிச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவரது மகன் புகழேந்தி (11) விடுமுறையை கழிக்க தனது பாட்டி வீட்டிற்கு வந்துள்ளார். இன்று காலை உணவருந்திக் கொண்டிருந்த பொழுது பசுமலைப்பட்டி பயிற்சியில் ஈடுபட்டிருந்த துப்பாக்கி குண்டு சிறுவனின் தலைப்பகுதியில் ஒன்றும், வீட்டின் சுவரில் ஒன்றும் பாய்ந்து உள்ளது.


இதனையடுத்து சிறுவன் புகழேந்தி மயக்கம் அடைந்துள்ளார். அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் முதலில் கீரனூர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று முதலுதவி அளித்து, பின்னர் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிறிவனை அழைத்துச் சென்றனர். அங்கு சிறுவன் புகழேந்திக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.



இருந்தும் சிறுவன் உயிருக்கு எந்தவித உத்தரவாதமும் அளிக்கப்படாத சூழ்நிலையில் தலையில் பாய்ந்த குண்டை எடுப்பதற்கு டாக்டர் குழு அமைத்துதான் சிகிச்சை அளிக்க முடியும் என்ற முடிவின்படி சிறுவனை தஞ்சாவூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர்.


ALSO READ | Police station: சீக்கிரம் பஞ்சாயத்தை முடிங்கப்பா! எங்களுக்கு வேற வேலை இருக்கு! 


சிறுவன் புகழேந்திக்கு மூளைக்கு அருகில் குண்டு பாய்ந்துள்ளதுளதையும் தீவிர சிகிச்சைப் பிரிவில் தஞ்சாவூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்பதையும் அறிந்த சிறுவன் புகழேந்தியின் உறவினர்கள் புதுக்கோட்டை திருச்சி சாலையில் நார்த்தாமலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.



அங்குவந்த காவல்துறையினர் (TN Police) பேச்சுவார்த்தைக்கு பின்பு மறியலை கைவிட்டனர். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி பயிற்சியின் போது 11 வயது சிறுவன் தலையில் குண்டு பாய்ந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் சோகத்தையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.


இதற்கிடையில் புதுக்கோட்டை நார்த்தாமலையில் அமைந்திருக்கும் துப்பாக்கி சுடும் பயிற்சி மையத்தை தற்காலிகமாக மூட மாவட்ட ஆட்சியர் கவிதா ராமு உத்தரவிட்டுள்ளார்.


ALSO READ | குடிபோதையில் செல்போன் டவரில் ஏறி 3 மணி நேரம் ஆட்டம் காட்டிய டவர் முருகன் 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.


முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.


கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!


Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR