குடிபோதையில் செல்போன் டவரில் ஏறி 3 மணி நேரம் ஆட்டம் காட்டிய டவர் முருகன்

தகவல் அறிந்த அவரது உறவினர்களும் சம்பவம் இடம் வந்து, முருகனை  கீழே இறங்க கூறி கடுமையாக போராடினர். அப்பகுதியில் வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

Written by - ZEE TAMIL NEWS | Edited by - Vidya Gopalakrishnan | Last Updated : Dec 30, 2021, 09:01 AM IST
குடிபோதையில் செல்போன் டவரில் ஏறி 3 மணி நேரம் ஆட்டம் காட்டிய டவர் முருகன் title=

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி செஞ்சை பகுதியைச் சேர்ந்தவர் முருகன் (30).கட்டிடங்களுக்கு கம்பி கட்டும்  வேலை செய்து வரும்  இவர், அடிக்கடி செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டி பரபரப்பை ஏற்றி வருவார். இதனால் இவருக்கு  டவர் முருகன் என்ற பெயர் செஞ்சை பகுதி மக்களால் அழைக்கப்பட்டு வருகிறார்.

இந்நிலையில் இன்று மாலை  6 மணி  அளவில் காரைக்குடி அம்பேத்கர் சிலை வித் உள்ள பகுதியில் 120 அடி உயரம்  கொண்ட தனியார் செல்போன் கோபுரத்தில் ஏறி, தற்கொலை செய்துகொள்ள போவதாக மிரட்டினார்.

இதனால் அப்பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனை கண்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி வியாபாரிகள், இதுகுறித்து காரைக்குடி காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடம் வந்த காவல்துறையினர் தீயணைப்பு துறையினருக்கும் தகவல் கொடுத்து வரவழைத்தனர்.  

ALSO READ | மதுரை ஆவின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை

தகவல் அறிந்த அவரது உறவினர்களும் சம்பவம் இடம் வந்து, முருகனை  கீழே இறங்க கூறி கடுமையாக போராடினர். இதற்கிடையே, அப்பகுதியில் வேடிக்கை பார்க்க கூட்டம் கூடியதால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. 

அப்போது டவர் முருகன் தம்பி மீது இருந்த பாசத்தால் டவர் மீது ஏறி போராட்டம் நடத்துவது தெரிந்தது. சமீபத்தில் விபத்தில் காயமடைந்து, மதுரையில் சிகிச்சை பெற்ற வரும் தம்பி கொடுத்த வழக்கை காவல்துறை அதிகாரிகள் முறையாக விசாரணை செய்யவில்லை என தெரிவித்தார். 

ஆகையால், தமிழக முதல்வர் ஸ்டாலின் நேரடியாக வந்து பேச வேண்டும் என கூறினார். அதிர்ச்சியடைந்த அதிகாரிகள் சட்ட மன்ற உறுப்பினர் மாங்குடிக்கு தகவல் தெரிவித்தனர். மாங்குடியும் அதிகாரிகளுடன் இணைந்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்ததை தொடர்ந்து. 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு டவர் முருகன் தானாக  கீழே இறங்கி வந்தார். 

இதனை கூடியிருந்த கூட்டம் ஆர்வம் மிகுதியால் செல்போனில் படப்பிடித்தனர். இறங்கி வந்த டவர் முருகன் மக்கள் கூட்டத்தில் நடைபயணமாக காரைக்குடி காவல் நிலையம் அழைத்து வந்த போலீஸார், விசாரணை மேற்கொண்டதில், முருகன் குடி போதையில் இது போன்று 6 முறை செல்போன் டவரில் ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது தெரியவந்தது. 

முருகனை கடுமையாக எச்சரித்த போலீஸார், அவரது உறவினர்களுடன் வீட்டுக்கு அனுப்பி வைத்தனர். குடி போதையில் செல்போன் டவரில் ஏறி ரகளை செய்த டவர் முருகனால் காரைக்குடியில் 3 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

ALSO READ | அன்னபூரணியை இயக்குவது கருப்பர் கூட்டம் தான்: அர்ஜுன் சம்பத்

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

முகநூலில் @ZeeHindustanTamil மற்றும் டிவிட்டரில் @ZHindustanTamil என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

 

Trending News