மருத்துவர்கள் தனக்கு அளித்த ஆலோசனைகளையும் மீறி அரசியலுக்கு வருகிறேன், உயிர் போனால் போகிறது என்று இயல்பாக ரஜினி சில வாரங்களுக்கு முன்பு தான் சொல்லியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சில நாட்களுக்கு முன்னர் தனது அரசியல் பிரவேச அறிவிப்பை வெளியிட்ட ரஜினிகாந்த், செய்தியாளர் சந்திப்பின்போது தெரிவித்த இந்த வார்த்தைகளை அனைவரும் தற்போது நினைத்துப் பார்க்கின்றனர்.  


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ரஜினி அரசியலில் தீவிரமாக ஈடுபடப் போவதாகத் தானே அறிவித்துள்ளார், அவர் உண்மையில் களத்திற்கு வருகிறாரா என்பதை பாருங்கள் என்று, அச்சத்துடன் கூறிய அரசியல்வாதிகளின் வாக்கு மெய்யாகிவிட்டது. 


கானல்நீரான ரஜினியின் அரசியல் பிரவேசம் காரணம் என்ன? 


முன்னதாக மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நடிகர் ரஜினிகாந்த் (Rajinikanth) இரண்டு நாட்களுக்கு முன் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். கடந்த 25-ம் தேதி ரத்த அழுத்தம் அதிகரித்ததை அடுத்து ஹைதராபாதில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார் நடிகர் ரஜினிகாந்த். 


அவரை டிஸ்சார்ஜ் செய்த அப்பல்லோ மருத்துவமனை (Apollo Hospitals) , இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில் அவருக்கு கூறப்பட்ட அறிவுறுத்தல்கள் பற்றியும் குறிப்பிட்டுள்ளது. 


Also Read | திரைத்துறையில் இருந்து அரசியலுக்கு சென்ற பிரபலங்களுடன் ரஜினி 'அண்ணாத்த'


உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிந்தைய ரஜினிகாந்தின் (Rajinikanth) உடல் நிலைமை, அவரின், வயது, திடீரென உயரும் ரத்த அழுத்தம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு மருந்துகளைத் தவிர அவருக்கு சில அறிவுரைகளையும் தந்துள்ளோம்" என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அவை:


1.  ஒரு வாரம் முழுமையான ஓய்வு தேவை
2. உடல் சார்ந்த நடவடிக்கைகளை மிகவும் குறைத்துக் கொள்ள வேண்டும்.
3. மன அழுத்தம் (Stress) ஏற்படும் செயல்களை தவிர்க்க வேண்டும் 
4. கொரோனா வைரஸ் (Coronavirus) தொற்று வாய்ப்புக்கான எந்தவொரு நடவடிக்கையையும் தவிர்க்கவேண்டும் 


Also Read | ரஜினியின் உடல்நிலை சீராக உள்ளது: விரைவில் குணமடைய பிரபலங்கள் வாழ்த்து


"கடுமையான ரத்தக் கொதிப்பு (Blood pressure), சோர்வு பாதித்த நிலையில் டிசம்பர் 25ம் தேதி ரஜினிகாந்த் மருத்துவமனையில் (Apollo Hospitals) அனுமதிக்கப்பட்டார். மருத்துவர் குழுவின் தீவிர கண்காணிப்பில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது ரஜினிகாந்தின் ரத்த அழுத்தம் சீராக உள்ளது. உடல் நிலையில் நல்ல முன்னேற்றம் இருக்கிறது. இனிமேல் மருத்துவமனையில் இருக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதால் டிஸ்சார்ஜ் செய்கிறோம்” என்று மருத்துமனை அறிக்கை கூறுகிறது.


அரசியலில் தீவிரமாக ஈடுபடுவதாக அண்மையில் ரஜினிகாந்த் (Rajinikanth) அறிவித்தார். ஜனவரி மாதம் கட்சி தொடங்கப் போவதாகவும், டிசம்பர் 31-ம் தேதி அது தொடர்பான விரிவான தகவல்களை அறிவிக்கப்போவதாகவும் ரஜினிகாந்த் தெரிவித்திருந்தார்.


இந்த சூழ்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை எடுத்துக் கொள்ளும் அளவுக்கு ரஜினியின் (Rajinikanth) உடல் நிலை (Health)  பாதிக்கப்பட்டுள்ளது. அதோடு, மருத்துவர்களின் அறிவுரைகளையும் அவர் தவிர்க்கக்கூடாது என்ற நிலையில் அவர் திட்டமிட்டபடி 31ம் தேதி கட்சி தொடங்கும் தேதியை அறிவிப்பாரா என்பது பரபரப்பான கேள்வியாக மாறியது. இன்று அவர் அரசியலில் ஈடுபடவில்லை என்று அறிவித்துவிட்டார்.  


Also Read | புதுச்சேரி பேக்கரியில் மறைந்த பாடகர் SPB-க்கு சாக்லேட் சிலை: காணத் திரளும் மக்கள்


தேசம், சர்வதேசம், கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவி றக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR