சென்னை: தமிழகத்தின் கலாச்சாரமும் மத வரலாறும் மிகவும் பழமையானது. மாநிலத்தில் பல்லாயிரக்கணகான கோயில்கள் உள்ளன.  அவற்றில் பெரும்பாலானவற்றுக்கு சுவாரஸ்யமான கதையும், சரித்திர பின்னணியும் உண்டு.   


COMMERCIAL BREAK
SCROLL TO CONTINUE READING

ஆலயங்களின் வரலாற்றை மாநில மக்களுக்கு உணர்த்துவதற்கும், கோயில்களின் வரலாறு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்கும், திருக்கோயில் (Thirukovil)  என்ற புதிய தொலைக்காட்சி சேனலைத் தொடங்க மாநில அரசு முடிவு செய்துள்ளது.  இதற்கான dry run தொடங்கப்பட்டுவிட்டது. 


மாநிலத்தின் பல்வேறு கோவில்களில் முக்கிய நிகழ்வுகளும் இந்த சேனலில் ஒளிபரப்பப்படும். இதுபோன்ற ஒரு சேனலை மார்ச் மாதத்தில் தொடங்குவதாக முதலமைச்சர் இ.கே.பழனிசாமி அறிவித்திருந்தார்.


இருப்பினும், இந்த சேனல் எப்போது தொடங்கப்படும் என்று தெளிவாகத் தெரியவில்லை. மாநில அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின்படி, 8.77 கோடி செலவில், இந்த சேனலுக்காக வீடியோ ஆவணப்படங்கள் முதலில் தயாரிக்கப்பட்டு பின்னர் அவை தொலைக்காட்சிக்கு பயன்படுத்தப்படும்.


Read Also | Happy Birthday செளரவ் கங்குல: தாதா கங்குலியின் எவர் க்ரீன் படங்கள்


தமிழ்நாட்டில் அனைத்து கோயில்களும் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் இயங்கி வருகின்றன. தமிழகத்தில் சுமார் 36,612 கோயில்கள் இந்து சமய அறநிலையத் துறையின் கீழ் உள்ளன.


தற்போது கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கோயில்கள் மூடப்பட்டதால் கோயில்களின் வருவாய் குறைந்துள்ளது.  எனவே, கோயில்கள் திறக்கப்பட்ட பின்னரே வீடியோ ஆவணப்படங்கள் எடுக்கும் செலவை மதிப்பிட முடியும்.  ஒரு மதிப்பீட்டின்படி, கடந்த மார்ச் 24 முதல் ஆலயங்கள் மூடப்பட்டிருப்பதால் பொதுமக்களின் நன்கொடை மூலம் கிடைக்கும் ஒரு கோடி  ரூபாய்க்கும் அதிகமான வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.


மாநிலத் தலைநகர் சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில், திருவன்மியூரில் உள்ள மருதேஸ்வரர் கோயில், வடபழனி முருகன் கோயில், மதுரையில் மினாக்ஷி கோயில், காஞ்சிபுரத்தில் உள்ள காமாட்சி கோயில், ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவில், கன்யாகுஅரி பகவதி அம்மன் கோயில் போன்ற கோவில்களில் வழக்கமான நாட்களில் பெருமளவிலான பக்தர்கள் வருவார்கள்.  


Read Also | வயிற்றுப்போக்கு மற்றும் வாந்தி ஏற்படுவதும் கொரோனாவின் அறிகுறியா?


திருக்கோயில் திங்களிதழ் என்ற பெயரில் தமிழக இந்து சமய அறநிலையத் துறை ஒரு மாத இதழை வெளியிட்டு வருகிறது.  அதில், திருக்கோயில் அமைப்புகள், திருக்கோயில் வழிபாடுகள், திருக்கோயில் பூஜை முறைகள், கோயிற்கலை, சிற்பத் திருமேனிகள், அதன் வழிபாடுகள், பண்டிகைகள், திருவிழாக்கள், இந்துக்களின் சடங்கு முறைகள் குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வருகிறது.


ஆன்மாக்கள் இந்து சமயக் கோட்பாடுகளுடன்; உலகத்தோற்றத்தின் முக்கியத்துவத்தை அறியும் வண்ணம் சைவ வைணவ சமயத்தின் குருமார்களும் ஆச்சார்யார்களும் காட்டிச் சென்ற சித்தாந்தம் மற்றும் வேதாந்த (அத்வைத விசிட்டாத்வைத துவைத) கொள்கைகளை எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் நடைமுறை விளக்கங்களோடு கட்டுரைகளும் வெளியிடப்படுகின்றன.